Monday, August 22, 2016

six arivu - six senses

courtesy: http://gurupeet.blogspot.in/2012/08/blog-post_24.html

ஆறு அறிவு என்றால் என்ன?

தொல்காப்பியம் மிக அழகாகச் சொல்லும்

புல்லும் மரமும் ஓர் அறிவினவே
நந்தும் முரளும் ஈர் அறிவினவே
சிதலும் எறும்பும் மூ அறிவினவே
நண்டும் தும்பியும் நான்கு அறிவினவே
மாவும் மாக்களும் ஐ அறிவினவே
மக்கள் தாமே ஆறு அறிவு உயிரே.

ஓரறிவு உயிர் என்பது என்ன?  இவை தத்தம் உடலால் தொடுவதை மட்டும் அறியும்.  அதுதான் புல், மரம்.- மெய்யுணர்வு
தொடு உணர்வோடு நாவினால் சுவையையும் அறிபவை ஈரறிவு உடையவை.  அவையே முரள் மற்றும் நந்து.  முரள் என்றால் அட்டை.  நந்து என்றால் நத்தை.
கரையான் எறும்பு போன்றவை மூன்றறிவு உடையவை.  இவை தொடு உணர்வு, சுவை மற்றும் முகரும் பண்பினையும் கொண்டவை.  மோப்பம் பிடிக்கும்.  அதனால் தான் கரையான் புத்தகம் எங்கே இருந்தாலும் வந்து அரிக்கிறது.  நான்கு அறிவு உடையவை என்பவை பார்வையும் சேர்ந்து உடையவை.  நண்டு தும்பி ஆகியவை இதற்கு உதாரணம்.  ஐந்து அறிவு உடையவை விலங்கினங்கள். ஐந்தாவது அறிவு என்பது ஒலி அறிதல்.  ஆறாம் அறிவு என்பது தான் மனத்தால் அறியும் அறிவு.  அதனால் தான் கண்ணதாசன் இரண்டு மனம் வேணடும் என்று ஆண்டவனிடம் கேட்கிறார்

தொடு உணர்வு மட்டும் இருந்தால் ஓர் அறிவு
தொடு உணர்வும் சுவையும் அறிந்தால் ஈர் அறிவு.
தொடு உணர்வு, சுவை மற்றும் முகரும் அறிவு இருந்தால் மூன்று அறிவு
தொடு உணர்வு, சுவை, முகரும் அறிவு மற்றும் பார்வை இருந்தால் நான்கு அறிவு
தொடு உணர்வு, சுவை, முகரும் அறிவு, பார்வை மற்றும் கேட்கும் திறன் இருந்தால் ஐந்து அறிவு
இவற்றுடன் சிந்திக்கும் திறன் இருந்தால் ஆறறிவு

No comments:

Post a Comment