Courtesy : Sri. Varagooran Narayanan
> "கொழுக்கட்டை"
> எஸ்.மீனாட்சி அம்மாள்
>
> மாவு தயாரிக்கும் விதம்.
>
> நான்குபேர்களூக்கு கொழுக்கட்டை
> தயாரிக்க 2 கப்புகள் அரிசி வேண்டும்.
>
> அரிசியை மூன்றுதரம்களைந்து,ஊறவைத்து
> இரண்டு மணி நேரம் கழித்து மறுபடி இரண்டு
> தரம் களைந்து தண்ணீரை வடிய வைத்து,
> நிழலில் துணியைப் போட்டு உலர்த்தி,
> இரண்டுதரம் துலாவி விடவும். மறுநாள்
> இயந்திரத்தில் -(மிக்ஸி) நைஸாக அரைத்துக்கப்பி இல்லாமல் சலித்துக் கொள்ளவும்.
>
> ஈரமில்லாமல் நன்றாகக் காய்ந்தால்தான்
> கிளரிய மாவுகட்டிதட்டாமல்,கொழுக்கட்டை
> நன்றாக செய்ய வரும்.
>
> மாவு கிளறும் விதம்.
>
> மாவை, ஒரு பாத்திரத்தில் தலை தட்டி
> அளந்து கொள்ளவும். அதே அளவு ஜலத்தையும் அளந்து விட்டு, 1 டீஸ்பூன் உப்பைப் போட்டு 1 டீஸ்பூன் நல்லெண்ணையை விட்டு மூடி
> நன்றாகக் கொதிக்க வைத்து, மாவைக்
> கொட்டிக்கொண்டே, கரண்டிக் காம்பால்
> ஐந்து நிமிஷங்கள் சேர்த்துக் கிளறி இறக்கவும்.
>
> தாம்பாளத்தில் ஒரு வெள்ளைத் துணியை
> நனைத்துப் பிழிந்து போட்டு, மாவைக் கிளறி
> இறக்கிய சூட்டோடு துணியில் கொட்டி
> முடிந்து வைத்து விட்டால், கட்டி தட்டாமல்
> மாவு நன்றாக இருக்கும்.
>
> ஆறியபின் முடிச்சை அவிழ்த்து, தேய்த்துப்
> பிசைந்து, மூன்று பாகங்களாக உருட்டித்
> துணியால் மூடி வைத்துக் கொள்ளவும்.
> பிறகு,கொஞ்சம்,கொஞ்சமாக மாவை எடுத்து
> தண்ணீர் வேண்டுமானால் தெளித்துத்
> தேய்த்துப் பிசைந்து நல்லெண்ணையைக்
> கையில் தடவிப் பிசைந்து கொட்டைப்பாக்களவு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.
>
> ஓர் உருண்டையை எடுத்துக் கொண்டு
> கிண்ணம் போலச் செய்துகொண்டு,
> பூரணத்தை வைத்து மூடவும்.
>
> இட்லிப் பானையில் ஜலத்தை வைத்து,ஒற்றைத் தட்டில் துணியைப் போட்டு, அதன் மேல் எண்ணெய்
> தடவிய வாழை இலையைப் போட்டு, பூரணம்போட்டு மூடிய கொழுக்கட்டைகளை வரிசையாக அடுக்கி வைத்து மூடி, அடுப்பை நன்றாக எர்யவிட்டு வேகவிடவும்.பத்து நிமிடங்களில் இவை வெந்துவிடும்
> வெந்ததற்கு அடையாளமாக மூடியிலிருந்து
> ஜலம் சொட்டும்.
>
> தேங்காய் பூரணம்;
>
> தேவையான சாமான்கள்.
> பெரிய தேங்காய் 1, வெல்லம் 3/4 கப்,ஏலக்காய் 6-10.
>
> செய்முறை; தேவைப்பட்டால் அடுத்த போஸ்ட்.
>
> எள்ளுப் பூரணம்;
>
> தெவையான சாமான்கள்.
> 1/2 கப் எள்ளு,வெல்லம், ஏலக்காய் 7-8
>
> உளுந்து பூரணம்.
>
> தேவையான சாமான்கள்
>
> உளுத்தம் பருப்பு 1/8, கடலைப்பருப்பு 1 பிடி
> உப்பு 1 டீஸ்பூன். பச்சை மிளகாய் 7-10
> நல்லெண்ணெய் 1/8கப், கடுகு 1/ டீஸ்பூன்
> பெருங்காயம்..
>
> எள்ளுப் பூரணம்,தேங்காய்ப் பூரணம் இவற்றை முதல் நாளே செய்து வைத்துக் கொள்ளலாம்.
>
> கட்டுரை பெரிதாகி விடுமாதலால் பூரணம்
> செய்முறை தட்டச்சு செய்யவில்லை.
>
> வரகூரான்.
No comments:
Post a Comment