Wednesday, September 16, 2015

How to make kozhukattai?

Courtesy : Sri.Mayavaram Guru
பூரணக் கொழுக்கட்டை. பொதுவாய் இதுதான் விநாயக சதுர்த்திக்குச் செய்வார்கள். இது வெறும் தேங்காய்ப் பூரணம், கடலைப்பருப்புப் பூரணம், எள் பூரணம், உளுந்துப் பூரணம் என நான்கு வகைகளில் செய்வது உண்டு.
>
>
>
> முதலில் பூரணங்கள் செய்யும் முறை:
>
> தேங்காய்ப் பூரணம்: தேங்காய் சிறிது ஒன்று. ஏலக்காய் நாலைந்து பொடித்துக்கொள்ளவும். பாகு வெல்லம் இரண்டு டேபிள் ஸ்பூன் தூளாக்கியது. வெல்லம் ரொம்பச் சேர்த்தால் பூரணம் கொழுக்கட்டையில் இருந்து வெளியே வந்துவிடும்.
>
> தேங்காயை உடைத்துத் துருவிக் கொள்ளவும். ஒரு வெண்கல உருளி அல்லது நான் ஸ்டிக் கடாயில் தேங்காய் துருவலோடு வெல்லத்தையும் சேர்க்கவும். நீர் சேர்க்கவேண்டாம். வெல்லத்தில் உள்ள நீரும் தேங்காய் துருவலில் உள்ள நீருமே போதுமானது. வெல்லமும் தேங்காய்த் துருவலும் நன்கு கலக்கவேண்டும். நன்கு கலந்து பூரணம் உருட்டும் பதம் வரும்போது இறக்கி ஏலக்காய்த் தூள் சேர்த்து ஆற வைக்கவும்.
>
> கடலைப்பருப்புப் பூரணம்: கடலைப்பருப்பு ஒரு சின்னக் கிண்ணம், வெல்லம் இரண்டு டேபிள் ஸ்பூன், ஏலக்காய்த் தூள்.
>
> ஒரு சின்னக் கிண்ணம் கடலைப்பருப்பை எடுத்து வறுத்து ஊற வைக்கவும். ஊற வைத்த பருப்பை வேக வைத்து அதோடு வெல்லம் சேர்த்து மிக்சியில் அரைக்கவும். அரைத்த விழுது தளர இருந்தால் நான் ஸ்டிக் கடாயில் போட்டுச் சிறிது நேரம் கிளறினால் கெட்டியாகிவிடும். ஏலக்காய்த் தூள் சேர்த்து ஆற வைக்கவும்.
>
> எள் பூரணம்: ஒரு சிலர் கடலைப்பருப்புப் பூரணத்திலேயே எள்ளையும் வறுத்துப் பொடித்துச் சேர்ப்பார்கள். சிலருக்குத் தனியாக எள் பூரணம் செய்வார்கள்.
>
> கறுப்பு எள் ஐம்பது கிராம். ஒரு டேபிள் ஸ்பூன் வெல்லத் தூள். ஏலக்காய்,
>
> எள்ளைக் களைந்து கல்லரித்துக்கொண்டு வெறும் வாணலியில் போட்டு வறுக்கவும். வெடிக்கும் வரை வறுக்கவேண்டும். பின் பொடித்த வெல்லம், ஏலக்காயோடு சேர்த்து அம்மியிலோ அல்லது மிக்சியிலோ பொடி பண்ணிக்கொள்ளவும்.
>
> உளுந்தம் பூரணம்:
>
> உளுத்தம்பருப்பு ஒரு கிண்ணம், மிளகாய் வற்றல், பெருங்காயம், உப்பு, தேங்காய்த் துருவல், தாளிக்க கடுகு, உ.புருப்பு, கருகப்பிலை, விரும்பினால் எலுமிச்சம்பழம் ஒரு மூடி.
>
> உளுந்தைக் களைந்து கல்லரித்துக்கொண்டு ஊற வைக்கவும். ஒரு மணி நேரம் ஊறியதும் வடிகட்டிவிட்டுப் பின்மிக்சியில் மிளகாய் வற்றல், உப்பு, பெருங்காயம் சேர்த்து உளுத்தம்பருப்பை அரைக்கவும். ரொம்ப நைசாக அரைக்கவேண்டாம். என்றாலும் பருப்பும் தெரியக் கூடாது. அரைத்த விழுதை ஒரு ஒற்றைத் தட்டில் எண்ணெய் தடவிப் பரப்பி இட்லிப் பானையில் வேக வைக்கவும். குச்சியால் அல்லது ஒரு கரண்டி நுனியால் குத்திப் பார்த்தால் ஒட்டாமல் வரும். அப்போது வெளியில் எடுத்து ஆறவிடவும்.
>
> கடாயில் தாளிக்க எண்ணெய் ஊற்றிக் கடுகு, உளுத்தம்பருப்பு, கருகப்பிலை சேர்க்கவும். வெந்த உளுத்தம்பருப்பு விழுதைச் சேர்த்துக் கிளறவும். தேங்காய் துருவலும் சேர்க்கவும். பூரணம் உதிர் உதிராக வந்ததும் கீழே இறக்கவும். விரும்பினால் எலுமிச்சம்பழம் ஒரு மூடி பிழிந்து கொள்ளலாம்.
>
> நான்கு பூரணங்களும் ரெடியாயிடுச்சு.
>
> இப்போ மேல் மாவு தயாரிக்கும் முறை.
>
> அரிசி நல்ல பச்சரிசியாக இருத்தல் நலம். தமிழ்நாடு என்றால் ஐஆர் இருபது அரிசி கிடைக்கும், மற்ற இடங்களில் உள்ளவர்கள் நல்ல பச்சரிசியாகப் பார்த்து எடுத்துக்கொள்ளவும். யு.எஸ். , கனடா என்றால் அமெரிக்கன் லாங் கிரெயின் ரைஸ் சரியாய் இருக்கும்.
>
> அரிசி 250 கிராம். வேக வைக்க நீர் ஒரு சின்னக் கிண்ணம், ஒரு சிட்டிகை உப்பு. ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய்.
>
> அரிசியை நன்கு களைந்து நீரில் ஊற வைக்கவேண்டும். குறைந்தது இரண்டு மணிநேரமாவது ஊறினால் நல்லது. ஊறிய அரிசியை நீரை வடித்துவிட்டு மிக்சியில் போட்டு, நல்ல நைசாக அரைக்கவும். கையால் தொட்டால் மாவில் கரகரப்புத் தெரியக் கூடாது. நல்ல சில்க் மாதிரி வழவழப்பாக இருக்க வேண்டும். வழவழப்பாக வரவில்லை என்றால், சலித்துக்கொள்ளவும்.
>
> வழவழப்பாக மாவை எடுத்து வைத்துக்கொள்ளவும்.
>
> இப்போது ஒரு வெண்கல உருளி அல்லது நான் ஸ்டிக் கடாயில் நீர் ஒரு சின்னக் கிண்ணம் ஊற்றி ஒரு டீ ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி ஒரு சிட்டிகை உப்பையும் போடவும். நீர் நன்கு கொதிக்கவேண்டும். இப்போது அரைத்த மாவைக் கொஞ்சம் கொஞ்சமாய்க் கொட்டிக் கிளறவேண்டும். மாவு நிறம் மாறும் வரை நன்கு கிளறிக் கொள்ளவும். மாவு நன்கு வெந்ததும் பந்துபோல் திரண்டு வரும்.
>
> எடுத்து ஒரு பாத்திரத்தில் வைத்து எண்ணெயும், சூடான நீரும் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும், உள்ளே கட்டிகள் இல்லாமல் நன்கு பிசைய வேண்டும்.
>
> இந்த மாவில் ஒரு சின்ன நெல்லிக்காய் அளவு எடுத்துக், கொஞ்சம் கொஞ்சமாக இரு கை விரல்களுக்களுக்கிடையில், சொப்புபோல (கிண்ணம்) போல் செய்யவும். தேவையான பூரணத்தை உள்ளே வைத்து நிரப்பவும்.
>
> ( கொழுக்கட்டை செய்ய, இப்போது அச்சில் வந்துவிட்டது.)
>
> இப்படிக் கொழுக்கட்டைகள் செய்து விட்டு இப்போது அவற்றை வேகவிடவேண்டும்.
>
> இட்லிப் பானையில் நீர் ஊற்றி இட்லித் தட்டு அல்லது ஒற்றைத் தட்டைப் போட்டு அதில் செய்து வைத்த கொழுக்கட்டைகளை வைத்து வேகவிடவேண்டும்.
>
> ஏற்கெனவே வெந்த மாவு என்பதால் அதிக நேரம் விடவேண்டாம். கொழுக்கட்டைகள் மேலே எண்ணெய் கசிந்தாற்போல் நீர் வந்து வேர்த்துவிட்டிருக்கும். அப்போது எடுத்துவிடலாம்.
>
> ஒரு சிலர் மாவை நீர் விட்டு அரைக்காமல் நீரை வடித்துவிட்டு மாவைப் பொடியாக்கியும் வைத்துக்கொள்வார்கள். இது அவரவர் செளகரியம் போல் செய்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment