"அந்தணர்களையும் பசுக்களையும் ஹிம்ஸை செய்பவரிடத்திலும், சுத்தமான புண்ணிய தீர்த்தத்தை அசுத்தம் செய்பவரிடத்திலும்,
நிர்வேதமுள்ளவரிடத்திலும், மிக உத்ஸாகமில்லாமல் எப்போதுமே துயரப்பட்டுக்கொண்டிருப்பவனிடத்திலும்,
நினைத்த வேலையை செய்ய முயலாதவனிடத்திலும் நான் வஸிக்கவே மாட்டேன்.
"புஷ்பங்களிலும் மேகங்களிலும் ஆபரணங்களிலும் நக்ஷத்திரங்களிலும் யாகங்களிலும்
யானை மாடு முதலியவற்றை கட்டும் இடத்திலும் குளங்களிலும் உயர்ந்த பக்ஷிகளும் ஜலக்கரையிலுள்ள மரங்களிலும் பெருஞ்சொலைகளிலும் நான் வஸிப்பேன்.
"நாராயணனிடத்தில் நான் வஸிப்பேன்.
என் கணவனான இவனிடத்தில் வஸிக்கும்போது உருவத்துடனும், மற்ற இடங்களில் உருவமில்லாமலும் வஸிப்பேன்.
"பொய் கொலை முதலிய கெட்ட செயல்களைச் செய்பவர்கள் பணக்காரர்களாக இருக்கிறார்களே என்று நினைக்கலாம்.
நான் அவர்களிடத்தில் நிலைத்திருக்க மாட்டேன்.
நற்காரியங்கள் செய்பவரிடத்தில் ஸ்திரமாக இருப்பேன்" என்று திருமகள் விரிவாக உரைத்தாள்.
இவ்வாறு ஸ்ரீபீஷ்மர் தர்மபுத்திருக்குக் கூறினார்.
ஸானுப்ராஸ ப்ரகடித தயை:
ஸாந்த்ர வாத்ஸல்ய திக்தை:
அம்ப! ஸ்நிக்தைர் அம்ருத லஹரீ
ளப்த ஸப்ரஹ்மசர்யை:
ங்கர்மே தாபத்ரய விரசிதே
காட தப்தம் க்ஷணம் மாம்
ஆகிஞ்சன்ய க்லபிதம் அங்கைர்
ஆத்ரியேதா கடாக்ஷை
இந்த ஸ்லோகத்தை சொல்ல இயலாதவர்கள் கீழ்க்கண்ட பொருளைச் சொல்லலாம்.
கருணை மிக்க லட்சுமி தாயே! தாயன்பைத் தருபவளே!
பக்தர்களுக்கு துணை செய்பவளே!
அமிர்தம் போல் குளிர்ச்சிமிக்கதும், பரிசுத்தமானதுமான அருளைத் தருபவளே!
கடும் வெயிலில் நடப்பவன் தாகத்தால் தவிப்பது போல்,
பொருளில்லாமல் வாடும் என்னை ஒரு கணநேரம் உன் கடைக்கண் பார்வையால் குளிரச் செய்வாயாக.
No comments:
Post a Comment