வசந்த கேளிக்கை பவளிம்பு தமிழ் விளக்கம—9
ராகம்:வசந்தபைரவி தாளம்:ஆதி
பல்லவி; சல்லரே பூலு சல்லரே போடுங்கள் பூக்களை போடுங்கள்
ச.1.மல்லலு முல்லலு மருவம்பு தவனமு சன்னணி ஜாஜுலு சாமந்தலு பல்லவபாணுலு பத்மதலாஷுலு சல்லுலாடுத சீதாராமுனிபை சல்லரே
மல்லிகை,முல்லை,மருவம்,தவனம்,சின்னஜாதி,சாமந்தி எல்லா பூக்களையும் மென்மையான கைகள்,தாமரை போன்ற கண்களுடையவர்ஹளே சந்தோஷமாக இருக்கும் சீதாராமன் மேல் போடுங்கள்
ச.2.இந்துமுகுலு அரவிந்ததலாஷுலு சந்தன கந்துலு ஸரஸமுதோ அந்தமுகா நேடு அதிவேலு கூடுக சிந்துலாடுத சீதாராமுநிபை-சல்லரே
சந்திரனை போல் உள்ள தாழம்பூ மற்றும் தாமரை இதழ் போல் கண்களையுடைய சந்தனம் போல் உள்ளவர்ஹளே எல்லோரும் சேர்ந்து ப்ரியமுடன் இன்று அழ்ஹாஹ் சீதாராமன் மேல் பூக்களை போடுங்கள்
ச.3.யெரீதி ந்னு ஜுசுநனி யோகரோகரு மீரின் ஆஸல பரவஸுலை நாரீமனுலு நக சந்த்ரகாந்துலு ஸாரே ஸாரேகு கிருஷ்ணஸ்வாமிபை-சல்லரே
எந்தவிதத்தில் என்னை பார்க்கப்போஹிறான் என்று ஒவ்வொருவரும்அதிஹமான ஆசைஹள் பொங்க உர்சாஹமாஹ சந்திரனை போன்ற ஒளி பொருந்திய நகங்களையுடைய பெண்களே வரிசை வரிசையாக இறைவன் கிருஷ்ணன் மேல் போடுங்கள்
ச.4.குங்கும கஸ்தூரி குரிவேல தவனமு சம்பங்கி மருவம்பு ஸாரஸமு பங்கஜநயனலு பாடல பாடுத வேங்கடரமணுபை வேடுகதோ—சல்லரே
தண்ணீரில் இட்ட கஸ்தூரி சிவப்பு நிறமாஹ மாறும் அது போல் உள்ள தவனம் சம்பங்கி,மருவு,மருக்கொழுந்து,எல்லா மலர்ஹளையும் தாமரை இதழை ஒத்த கண்களையுடைய பெண்களே பாட்டுக்கள் பாடிக்கொண்டு வேண்டி பிரார்த்தனை செய்து வேங்கடரமணனின் மேல் பூக்களை போடுங்கள
இந்த பாட்டின் உட் பொருள்
இறைவனால் படைக்கப்பட்ட ஒவொரு பூவும் வெவேறு விதமாஹவும் வெவேறு வாசனை உடையதாஹவும் இருக்கிறது. எல்லா பூக்களும் இறைவனை அடைவதும் இல்லை. அது போல் ஜீவராஸிகளும் அமைந்து இருக்கிறது. மானிடர்ஹளாகிய நாம் நாம சங்கீர்த்தனம் செய்து இறைவனை அடையவேண்டும் என்பது கவியின் கருத்து .
No comments:
Post a Comment