Monday, April 6, 2015

Vasantha Gelikkai & pavvalimbu part3

courtesy:Sri.SV.Narayanan

வசந்த கேளிக்கை பவளிம்பு தமிழ் விளக்கம்—3


இரு நூறு வருடங்களுக்குமேலாக நடந்துகொண்டிருக்கும் ஊர்களில் ஆறு பாட்டுக்கள் தான் இருந்தது. தற்காலத்தில் அந்த இடத்திற்கு தகுந்தாற்போல் உள்ள பாட்டுக்களையும் சேர்த்திருக்கிறார்கள். இந்த பாடல்களில் பத்மாவதி தாயார் பக்தர்களின் சார்பில் இறைவனை பிரார்த்திப்பதும் சஹியாகபட்ட குரு நமக்கு இறைவனை  கான்பிப்பதுமஹ அமைந்திருக்கிரது  

 

ராகம்: வசந்தபைரவி                           தாளம்: ஆதி

                       

1.ப்ரியசகி வேங்கடரமநூனி ரம்மணி பிலுவவெ ஒ முத்துகும்மா

தயகல நா பிராண நாயகுனி ஈடகு தருநீமணி தோடி தெம்மா  ------ப்ரியசகி

 

அன்பான தோழியே வேங்கடரமணனை வருமாறு கூப்பிடுஏ அழகான பெண்ணே என் மேல் கருணையுள்ள என் உயிருக்கு இணையான நாயகனின் கையை பிடித்து பெண்களில் சிறந்தவளே இங்கு என்னிடம் அழைத்து வா


2.எந்த நீ மோஹமு தாளுது நே ஒ      இந்திரோ மனவிஸே  கொம்மா

    காந்துணி நேனு எட பாசினதி மோதலு   காந்தாமணி தோடி தெம்மா ----ப்ரியசகி

 

எப்படி என் நாயகன் மேல் உள்ள ஆசயை நான் தாங்குவேன். பெண்ணே என் மனதறிந்து என் நாயகனை நான் பிரிந்தது முதல் என் தாபம் அதிஹரித்ததால் பெண்களில் சிறந்தவளே உடனே நாயகனை கையை படித்து அழைத்துவா


3. சக்கனி வேங்கடரமனுடு நன்னு இந்த சிக்குல (ஸிக்குல)பெட்டனே சால

     (சால) மக்குவதோ வானி மனஸு எருககனே  மருலைதினி ஒ பாமா

 

நல்ல மனது படைத்த வேங்கடரமணன் என்னை (சிக்குல என்றால் கஷ்டத்தில் என்றும்) ஸிக்குல என்றால் வெட்கப்படும்படி அலயவிட்டானெ. (சால) மக்குவதோ என்றால் அதிஹமான ஆசையினால் அவனுடய மனதை புரிந்து கொள்ளாமல் பெண்ணே பித்து (பைத்தியம்) பிடித்த நிலையில் இருக்கிறேன்    

 

 இந்த சரணம் எங்கள் ஊரில் இல்லை எங்கள் ஊர் பஜனை 375 வருடங்கள் பழமையானது


4. பாமரோ பத்ராச்சலமுன நெலகொன்ன பத்ருணி தலசிதின்ம்மா

    நா மனஸு எரிகின நாதுனி ஈ வேள நலிநாஷிரோ தோடிதெம்மா

 

பெண்ணே பத்ராசலத்தில் நிலை கொண்டு இருக்கும் ராமனையே நினைத்துகொண்டு இருக்கும் என் மனதை அறிந்து என் நாயகனை    (ஈ வேள) (இப்பொழுதே,) தாமரை  இதழை ஒத்த கண்களை உடய பெண்ணே என்னிடம் இப்பொழுதே அழைத்து வா (இப்பொழுதே = இந்த சமயத்திலேயே)

 

இந்த பாட்டின் உட் பொருள்

 

நாயகன் வடிவில் உள்ள இறைவனை காணவேண்டும் என்னும் ஆசையினால் நாயகி வடிவில் உள்ள பக்தர்கள் தங்களுடைய கஷ்டத்தை பொருட்படுத்தாமல் அடுத்தவர்கள் கேலி செய்தாலும் இறைவன் பெயர்களை உச்சரித்தும் நினைத்தும் இறைவனை தன்னுடனேயே இருக்கும்படியாக இந்த பாட்டின் பொருள் அமைந்திருக்கிறது

No comments:

Post a Comment