Wednesday, April 22, 2015

Vasantha Gelikkai & pavvalimbu part25

Courtesy:Sri.SV.Narayanan

வசந்த கேளிக்கை பவளிம்பு தமிழ் விளக்கம்-25.

 

ராகம்:நாதநாமக்ரியா              தாளம்:ஆதி

 

பல்லவி; உய்யால ஜோபுலு வோமுத்துலய்யா

         வெய்யாரு கோபிகலு வேடுகனு உசேதரு—உய்யால

 

அழஹான நாயகனே அற்புதமான தொட்டிலை ஆயிரத்துஆறு யாதவ பெண்கள் விருப்பத்துடன் ஆட்டுஹிரார்கள்

 

ச.1.போஹீந்த்ரதல்புடா புவனவிக்யாத

   கோகோபரஷக குவலயாதீஸ

   ஆஹாமசன்னுத அச்யுதானந்த

   யோகநித்ர போவய்ய யோஹீந்த்ர வந்த்ய—உய்யால

 

பாம்பை படுக்கையாக உடையவனே பூமாதேவியின் நாயகன் என்ற புகழ் படைத்தவனே பசுக்களையும் யாதவர்ஹளையும் காத்தருளிய உலக நாயகனே ஆஹாமத்தை உள்ளடக்கிய அச்சுதனே அனந்தனே யோகநித்திரை செய்வாய் {யோகநித்திரை=உடல் படுத்திருக்கும் கண்கள் மூடி உடலும் கண்களும் ஓய்வில் இருக்கும் ஆனால் தன்னை சுற்றியும் உலஹத்தில் நடப்பதும் தெரிந்து அதற்கு தஹுந்தாற்போல் நன்மை செய்வது} யோஹிகளுக்கு தலைவனாஹ வணங்க்கபடுபவனே

 

ச.2.தாஸரத புவி வெலுகு தேவர்ஷிவருலு

   ப்ரஸரிஞ்சி பங்காரு பவனமுலோன

   கொஸரக நித்ரிஞ்சு கோவிந்தாயனுசு

   பஸமீர பாடேரு பன்னகஸயனா—உய்யால

 

இஷ்வாகு வம்சத்தினால் பூஜிக்கப்பட்டு தசரத மஹாராஜாவின் மைந்தனால் கொடுக்கப்பட்டு தேவர்ஹள் ரிஷிஹளால் போற்றப்பட்டு தங்கத்தினால் வடிவமைக்கப்பட்ட மாளிஹையில்{கோவில் விமானம்} அசைவில்லாமல் யோகநித்திரையில் இருக்கும் உன்னை கோவிந்தா என்று சொல்லி ஆதிசேஷன் மேல் யோகநித்திரை செய்யும் உன்னை ஆசைஹள் மேலோங்க பாடுஹிரார்ஹள்


ச.3.ஸன்னு திஞ்சேரய்யா சத்பாஹவதுலு

 பன்னுகா ஸ்ரீiபூமி பணதுலுஜேரி

  உன்னத பதமுலுநு ஒத்தேரு நித்ரிஞ்சு

   வென்னுடா ப்ரஸன்ன வேங்கடரமண—உய்யால

 

எல்லா சமயத்திலும் உன்னயே துதித்துகொண்டிருக்கும் பாஹவதர்ஹள் மற்றும் அழஹான பூமாதேவியுடன் பெண்கள் சேர்ந்துகொண்டு உன்னுடைய உன்னதமான் பாதங்களை மென்மையாக பிடித்துவிட எளிமையானவனே எங்கள் முன் தோன்றிய வேங்கடரமண

 

 

இந்த பாட்டின் உட் பொருள்

 

 

 

எல்லா சமயத்திலும் இறைவனேயே துதித்துகொண்டிருக்கும் பாஹவதர்ஹள் பக்திக்கு இறைவன் மனமுவந்து பக்தர்ஹளுடைய மனதை தொட்டிலாக்கி அந்த மனதாஹிய தொட்டிலில் இருந்து நல்ல சிந்தனையும் எண்ணங்களையும் அளிக்கிறார்  'மத பக்தா யத்ர காயந்தி தத்ர திஷ்டாமி நாரத' என்பதின் கருத்தாஹும்

No comments:

Post a Comment