Wednesday, April 22, 2015

Vasantha Gelikkai & pavvalimbu part24

Courtesy:Sri.SV.Narayanan

வசந்த கேளிக்கை பவளிம்பு தமிழ் விளக்கம்-24.

 

ராகம்: ஆஹீரி\பீம்ப்ளாஸ்          தாளம்; ஜம்பை

 

ச.1. உதயாஸ்து சைலம்புலோ நரகம்பமுலாய

      உடுமண்டலமு மிஞ்சுனு உய்யால

     அதிர ஆகாசம்புநு அட்டதூலம்பாய

     அகிலாண்டமுலு நீகுனு உய்யால

 

காலை உதயமாஹி மாலை அஸ்தமனமாகும் மலைகள் இரண்டு கம்பங்களாஹவும் ஆஹாய மண்டலத்தை மிஞ்சும், இடி முழக்கம் உள்ள ஆஹாயம் இரண்டு கம்பங்களையும் இணைக்கும் குறுக்கு கம்பமாஹவும் (சென்டர்பீம்) எல்லா அண்டங்களும் உனக்கு தொட்டில்.

 

ச.2. மேலுகட்ளே நீகு மேகமண்டலமாய

      மெருபுலுகு மெருபாயனு உய்யால

      ஒலிப்ர்ஹ்மாண்டம்பு நோருகுநோயனி பீதி

      நொய்ய நொய்யனநூதுரு உய்யால

 

குறுக்கு கம்பத்தில் (சென்டர்பீம்) கட்டப்பட்டுள்ள கயிராஹ் மேகமண்டலமும் அந்த மேகமண்டலத்தினால் ஏற்படும் மின்னல்கள் ஒளி வீசும் தொட்டில். ப்ர்ஹ்மாண்டத்தில் உண்டாஹும் ஒலியினால் ஏற்படும் பயம் தெரியாமல் நொய் நொய் என்று சப்தம் எழுப்பும் தொட்டில்

 

ச.3. பதிலமுக வேதமுலு பங்காரு சேருலை

      பட்டபயலை தோசுனு உய்யால

      வதலகனு தரணி தேவதயு பீடம்பாய

      வர்ணிம்பதகு நீகுனு உய்யால

 

உன்னதமான வேதங்கள் தங்கத்தாலான சங்கிலியாக நாடுபகல்போல்

ஒளிர்ஹிறது தொட்டில் அசையாத பூமிதேவி உட்காரும் பலகையாஹ வர்ணனைக்கு அப்பாற்பட்ட உனக்கு தொட்டில்

 

ச.4. கமலயனு பூஸதியு கதல மெதலக நின்னு

      கௌகலிம்பக நூதுரு உய்யால

      அமராங்கனுலு நீகு வாமபாகமுனந்து

      அந்தம்புகாநூதுரு உய்யால

 

தாமரை பூவில் இருக்கும் மகாலக்ஷ்மியும் பூமாதேவியும் உன் இருபக்கமும் இருந்து உஞ்சல் அசைவினால் சாய்ந்து விடாமல் கட்டிப்பிடிதுகொண்டுள்ளனர். அழஹான பெண்கள் உன் இடது பக்கம் இருந்து அழஹாஹ்  ஆட்டுஹிரார்கள் தொட்டிலை

 

ச.5. பாலின்ட்ல கதலகா பய்யதலு ஜாரக

      பாமாலிருகடனு ஊதுரு உய்யால

      நீல சைலமு வண்டி நீ மேனு காந்தியு

      நிண்டி வெலுகுசுனுன்டுனு உய்யால

 

தொட்டிலை ஒரே மாதிரியாக ஆட்டிக்கொண்டு தொட்டிலில் உள்ள இறைவன் ஆடாமலும் சய்ந்துவிடாமலும் இருக்குமாறு இருபக்கமும் இருக்கும் அழஹான பெண்கள் ஆட்டுஹிரார்கள் தொட்டிலை நீல வர்ணமலைபோல் உள்ள உன் உடம்பு ஒளிர்வதால் தொட்டிலே ஒளிமயமாஹா பிரகாசிக்கிறது

 

ச.6. கமலாஸனாதுலகு கன்னுல பண்டுகை

      கனுதிம்பராது  நீகுய்யால

      கமநீயமூர்த்தி ஸ்ரீவேங்கடேஸ்வர நீகு

      கடுவேட்கலாய நீகுய்யால

 

தாமரை பூவை உட்காரும் பீடமாஹ உள்ள ப்ரஹம்ம தேவனின் கண்ணுக்கு விருந்தாஹவும் காணக்கிடைக்காத அளவுக்கு இருக்கிறது உன் தொட்டில் சாந்தமான ஸ்ரீவேங்கடேஸ்வர அதிக விருப்பமாஹா நீ விரும்பியபடி இருக்கிறது உன்னுடைய இந்த தொட்டில்

 

இந்த பாட்டின் உட் பொருள்

 

கவி இந்த உலகத்தை தொட்டிலாஹ் பாவித்து பக்தர்களின் மனதை இந்த தொட்டிலுக்கு ஸமமாஹா பாவித்திருக்கிறார் இறைவன் பக்தர்களின் மனதில் இருப்பதால் வேதம் படித்தமவர்களுக்கு இணையான ஒளி பக்தருக்கு கிடைக்கிறது வேறு எந்த ஒளியும் ஒலியும் இவர்ஹளை பாதிப்பது iஇல்லை ப்ரஹம்ம தேவனும் இந்த ஆத்மாவினால் சந்தோஷமடைஹிறார். இறைவன் ஆடும் தொட்டிலாஹ் பக்தர்களின் மனது இருக்கிறது

No comments:

Post a Comment