வசந்த கேளிக்கை பவளிம்பு தமிழ் விளக்கம்-18.
ராகம்; சங்கராபரணம் தாளம்; சாபு
பல்லவி; ஸராணாகத வத்சலா ஸர்வஸுலாபா
உன்னயே கதி என்று நம்பும் பக்தர்ஹளை காப்பவனே எல்லோருக்கும் எளிமையானவனே
புருஷர்களில் உயவான குணங்களை உடைய இறைவனே என் கையால் செய்யும் பூஜைகளளை ஏற்றுகொள்வாய்
ச.1.சம்பக ஜாஜி கரவீர புன்லநாக புஷ்பமுலு
கம்பலுகா தெச்சி நிம்பலேனா
ஹிதவுதோ தொதிபுடா ஹிதுல சேயு பூஜ
சங்கர ப்ரியடனு கை கொனவையா—ஸராணாகத
சம்பங்கி, ஜாதி, மனோரஞ்சிதம் பூக்களை கூடை கூடையாக கொண்டுவந்து கொட்டமாட்டேனா இறக்மும் கருணையும் உள்ள்வனே உன் பக்தர்கள் செய்யும் பூஜைகளளை சங்கரனுக்கு பிரியமானவனே ஏற்றுகொள்வாய்
ச.2.இங்க பக்துல நேலு ஈமஹினி வ்யான
சங்கட ஹருடை நீவு சத்ரளபுடே
கங்கதாடி கோ தண்ட ஸ்ரீ கோபாலமூர்த்தி
பங்கஜாஷா ப்ரஸன்ன ராஜ வேங்கடேஸ்
இன்னமும் பக்தர்ஹளை காப்பாற்றி இந்த உலஹத்தில் எதிர்பாராமல் வரும் சங்கடங்களை போக்கும் நீ த்யாமூர்த்தி கங்கையை தாண்டி ப்ருந்தாவனத்தில் பசுக்களை காப்பாற்றிய கோபாலமூர்த்தி தாமரை வைப்போல் கண்களையுடைய தோன்றிய ராஜாவே வேங்கடேஸ்
ச.3.மும்புரம்பு ப்ரஹ்மாண்டமுலு மோசே நீகு நே
செம்புலோனி நீள்ளனு சிலிகின்சேதா
பம்மின இந்திராதேவிபன்னீடி வசந்தமுகா
சம்மதிஞ்சி மாப்புதீர ஜலகமாடவாய்யா
ப்ரளயகாலத்தில் இந்த உலகத்தை தாங்கி காப்பாற்றிய உனக்கு சின்ன செம்பில் தண்ணீரை வைத்துக்கொண்டு தெளிப்பதா?(ஆபோஹிஷ்டா) உன்னுடைய நாயகியின் கையால் பன்னீரை தெளிப்பது polபோல் நினைத்து உன்னுடைய அலுப்puபு தீருமாறு ஸ்நானம் செயுங்கள்
ச.4.பட்டரானி விஸ்வரூபமுலுஜூபே நின்னு நே
பெட்டலோன ஸஞசிலோன பெட்டி கட்டேதா
பட்டபாலு கௌஸல்யா கர்பமந்துன உன்னமேடி
பெட்டசோடு வைகுண்டமுகா பெட்டு கொனவையா
கட்டிபிடிக்கமுடியாத அளவுக்கு விஸ்வரூபத்தை காட்டிய உன்னை பெட்டியிலும் பையிலும் வைத்து கட்டுவதா ஒரு காலத்தில் கௌசல்யாவின் கர்பத்தில் இருந்த மாதிரி உன்னை வைத்து பூஜை செய்யும் சின்ன அறையை வைகுண்டமாஹா நினைத்துக்கொள்
ச.5.அலசராச்ராமுலனு ஆரகிஞ்சே நீகு
வேலையு குண்டலோனி நைவேத்யம் இச்சேதா
அலமேலுமங்க ஸ்ரீவேங்கடேஸ் மீரு அதி
வெலயு பரத்வாஜுல விந்துகா கை கொனவைய
அகில உலஹத்தில் உள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும் உணமவளிக்கும் உனக்கு இந்த சின்ன பானையில் செய்த நைவேத்யங்களை கொடுப்பதா? அல்மேலுமங்கம்மாவின் நாயகனாகிய வேங்கடேஸ்பெருமாளே இராமாயண காலத்தில் இலங்கையிலிருந்து அயோத்திக்கு வருகையில் பரத்வாஜர் ஆஸ்ரமத்தில் அவசரமாக சாப்பிட்ட விருந்துபோல இந்த நைவேத்யத்தை ஏற்றுகொள்.
இந்த பாட்டின் உட் பொருள்
பக்தர்களின் மனதில் உள்ள இறைவனை நீயே கதி என்று நம்புஹிரவர்களுக்கு எளிமையானவனே என்று புகழ்பாடி இறைவனுக்கு உபசாரங்கள் செய்து தனது மனத்திலேயே இருக்கும்படி ப்ரார்த்தனை.
No comments:
Post a Comment