courtesy:http://swamiindology.blogspot.in/2015/01/blog-post_55.html
என்ன நினைக்கிறாயோ அதுவாகவே ஆவாய் !
अन्धस्यैवान्धलग्नस्य न्यायः
andhasyaivandha lagnasya nyayah
அந்தஸ்யைவாந்த லக்னஸ்ய நியாயம்
குருடனுடன் சேர்வது பற்றிய நியாயம் இது. குருடனுடன் சேர்வதால் ஒருவனுக்கு என்ன லாபம்? அதே போல குறைந்த அறிவு உடைய ஒருவனுடன் சேர்வதால் யாருக்கு என்ன பயன்? எப்போதுமே அறிவில் சிறந்த ஒருவருடன் தொடர்பு கொள்வது அவசியம். தன்னை விட மேம்பட்ட அறிவில் சிறந்த ஒழுக்கத்தில் மேன்மையான அரிய குணங்களுடைய ஞானம் பெற்ற ஒருவரின் பழக்கம் அல்லவா சிறந்தது. இதை எடுத்துக் கூற வந்த நியாயம் இது!
.
अल्पस्यहेतोर्बहुहातुमिच्छिन्निति न्यायः
alpasya hetorbahuhatumicchanniti nyayah
அல்பஸ்ய ஹேதோர்பஹுஹாதுமிச்சந்நிதி நியாயம்
சிறிது லாபம் பெற ஒருவன் பெரிய தியாகம் செய்வதைக் குறிக்கும் நியாயம் இது.
எதை ஒன்றை யாராலும் அடைய முடியாதோ அதைப் பெற தியாகம் ஒன்றைச் செய்தால் அதில் அர்த்தம் உண்டு. பெறுதற்கரிய மெய்ஞானத்தைப் பெற புலன்களால் அனுபவிக்கும் உலகியல் இன்பங்களைத் துறக்கலாம். ஆனால் நீடித்து இருக்காத இன்பங்களுக்காக தன்னைத் தியாகம் செய்யலாகுமா? ஆங்கிலப் பழமொழியான 'Penny-wise Pound foolsih' என்ற பழமொழி இந்த நியாயத்துடன் ஒப்பு நோக்குதற்குரியது. இந்த அர்த்தத்திலும் உலகியல் வழக்கில் இதைப் பயன்படுத்துவர். ஒரு காசை சேமித்து ஒன்பது காசை கோட்டை விடுவான் என்பது உலகியல் வழக்கு!
अण्डकुक्कुटन्यायः
anda kukkutta nyayah
அண்ட குக்குட நியாயம்
கோழியும் முட்டையும் பற்றிய இந்த நியாயம் மிகவும் பிரபலமானது. இது பற்றிய கதை கிராமப்புறங்களிலிருந்து எல்லா இடங்களிலும் புழங்கி வரும் கதை. கோழி ஒன்று ஒரு நாளைக்கு ஒரு முட்டை தான் இடும். அதன் சொந்தக்காரனோ ஒரு பெரிய பேராசைக்காரன். அது 'வைத்திருக்கும்' எல்லா முட்டைகளையும் உடனே பெற அவனுக்கு பேராசை! ஆகவே அதன் வயிற்றை அறுத்து உள்ளே பார்த்தான்! என்ன பரிதாபம், அங்கு அவன் எதிர்பார்த்த முட்டைகள் இல்லை. பேராசை பெரு நஷ்டம் என்ற பழமொழி உலகியலில் அன்றாடம் வழங்கும் பழமொழி. பொன் முட்டை இடும் வாத்து என்ற கதையும் இதே கருத்தை வலியுறுத்தும் ஒன்று!
अश्वभृत्यन्यायः
asvabhrtya nyayah
அஸ்வப்ருத்ய நியாயம்
ஒரு குதிரையும் அதைப் பராமரிக்கும் விதண்டாவாதியான வேலைக்காரனையும் பற்றிய நியாயம் இது.
குதிரை ஒன்றை பராமரித்து வந்தான் விதண்டாவாதியான வேலைக்காரன் ஒருவன். அவனிடம் வந்த ஒருவன் குதிரையைக் காட்டி"இந்தக் குதிரை யாருடையது?" என்று கேட்டான்.
அதற்கு அந்த விதண்டாவாதி," எவனுக்கு நான் வேலைக்காரனோ அவருக்கு சொந்தமானது இது" என்றான்.
"நீ யாரிடம் வேலை பார்க்கிறாய்?' என்று அடுத்த கேள்வியைக் கேட்டான் வந்தவன்.
'இந்த குதிரை யாருக்கு சொந்தமோ அவரிடம் தான் வேலை பார்க்கிறேன் நான்" என்றான் விதண்டாவாதி.
பயனற்ற விதத்தில் நேரடியாக பதில் சொல்லாமல் அனாவசியமாக விவாதித்துக் கொண்டே இருக்கும் வக்ரமான விதண்டாவாதம் பற்றிய நியாயம் இது!
மழுப்பலான பதில்களைச் சுட்டிக் காட்டுபவருக்கும் இந்த நியாயம் பொருந்தும்.
अन्ते या मति: सा गति:
ante ya mati sa gatih
அந்தே யா மதி ச கதி நியாயம் (கடைசியில் என்ன நினைக்கிறாயோ அதுவே கதி நியாயம்)
ஹிந்து மதத்தின் முக்கியமான ஒரு கோட்பாட்டை விளக்கும் நியாயம் இது. ஒருவன் இறக்கும் போது கடைசியில் எதை நினைக்கிறானோ அதுவாகவே அவன் ஆவான் என்று இந்த நியாயம் விளக்குகிறது.
இதை விளக்க புராணங்களில் ஏராளமான கதைகள் உள்ளன என்றாலும் பாகவதத்தில் கூறப்படும் பரத மன்னனின் கதை மிகவும் பிரசித்தமானது. அவனிடம் மான் ஒன்று இருந்தது. அவன் எங்கு போனாலும் கூடவே அந்த மானும் போகும். அதை அவன் உயிருக்கு உயிராக நேசித்து வந்தான். அவன் மரணப்படுக்கையில் இறக்கும் போது அந்த மான் நினைவாகவே உயிரை விட்டான்.மறுபிறவியில் அவன் ஒரு மானாகப் பிறந்தான்.
பகவத்கீதையில் எட்டாம் அத்தியாயத்தில் வரும் கீழ்க்கண்ட 5 மற்றும் ஆறாம் ஸ்லோகங்கள் இந்த உண்மையைத் தெளிவாகக் கூறுவதைப் பார்க்கலாம்.
अन्तकाले च मामेव स्मरन्मुक्त्वा कलेवरम् ।
यः प्रयाति स मद्भावं याति नास्त्यत्र संशयः ॥८- ५॥
यः प्रयाति स मद्भावं याति नास्त्यत्र संशयः ॥८- ५॥
Anta-kale ca mam eva smaran muktva kalevaram I
Yah prayaati sa mad-bhaavam yaati nasty atra-samsya: II
அந்தகாலே ச மாமேவ ஸ்மரந்முக்த்வா கலேவரம் |
ய: ப்ரயாதி ஸ மத்³பா⁴வம் யாதி நாஸ்த்யத்ர ஸம்ஸ²ய: || 8- 5||
ய: ப்ரயாதி ஸ மத்³பா⁴வம் யாதி நாஸ்த்யத்ர ஸம்ஸ²ய: || 8- 5||
எவன் ஒருவன் , உடலைத் துறந்து இறக்கும் போது என்னை நினைக்கிறானோ அவன் என் இயல்பை அடைவான். இதில் சந்தேகமில்லை.
यं यं वापि स्मरन्भावं त्यजत्यन्ते कलेवरम् ।
तं तमेवैति कौन्तेय सदा तद्भावभावितः ॥८- ६॥
तं तमेवैति कौन्तेय सदा तद्भावभावितः ॥८- ६॥
Yam Yam Va-api Smran Bhaavam Tyajathi-anthae Kalaevaram । Tam Tam-eva-aethi Kounthaeya Sadaa Tat-bhaava-bhavitha: ॥
யம் யம் வாபி ஸ்மரந்பா⁴வம் த்யஜத்யந்தே கலேவரம் |
தம் தமேவைதி கௌந்தேய ஸதா³ தத்³பா⁴வபா⁴வித: || 8- 6||
தம் தமேவைதி கௌந்தேய ஸதா³ தத்³பா⁴வபா⁴வித: || 8- 6||
குந்தியின் மகனே! ஒருவன் முடிவில் எந்தெந்த தன்மையை நினைப்பனாய் உடலைத் துறக்கின்றானோ, அவன் எப்போதும் அத்தன்மையிலே கருத்துடையவனாய் அதனையே எய்துவான்.
No comments:
Post a Comment