Courtesy:Sri.Sundarnarayanan
ஆன்மிகம்:: நாமசங்கீர்த்தனத்தின்பெருமையும்விஷ்ணுசஹஸ்ரநாமத்தின்மகிமையும்!
ஆன்மிகம்
நாமசங்கீர்த்தனத்தின்பெருமையும்விஷ்ணுசஹஸ்ரநாமத்தின்மகிமையும்!
சிலமாதங்களுக்குமுன்பு, உறவினர்ஒருவரின்மகனுக்குநடைபெற்றஉபநயனத்தில்கலந்துகொள்ளசேலம்சென்றிருந்தோம். சேலம்வியாசராஜமடத்தில்நடைபெற்றசமஷ்டிஉபநயனம்அது. உபநயனத்தில்ஒருஅங்கமாகமுந்தையதினம்மாலை'நாமசங்கீர்த்தனம்' நடைபெற்றது. இதுபோன்றஒருநாமசங்கீர்த்தனத்தைஇதுவரைநாம்கண்டதில்லை, ரசித்ததில்லைஇனியும்காணப்போவதில்லைஎன்னுமளவிற்குமிகமிகப்பிரமாதமாகஇருந்தது.
நம்வீட்டுசுபநிகழ்ச்சிகளின்போதுஒன்றுக்கும்பயனற்றவிஷயங்களில்பணத்தைவாரிஇறைப்பதைவிட, நாமசங்கீர்த்தனம் போன்றவிஷயங்களில்கவனம்செலுத்தலாம். வசதியும்வாய்ப்பும்உள்ளஅன்பர்கள்மற்றும்நண்பர்கள், தங்கள்வீட்டுவிசேஷங்களின்போதுநாம சங்கீர்த்தனத்தையும்நிகழ்ச்சிநிரலில்சேர்த்துதங்களுக்கும்புண்ணியம்சேர்த்துக்கொண்டு, மற்றவர்களுக்கும்புண்ணியம்சேர்க்கஉதவும்படிகேட்டுக்கொள்கிறோம்.
நாமசங்கீர்த்தனம்மூலம்பெறும்புண்ணியம்உங்கள்தலைமுறைகளைசுபிக்ஷமாகவாழவைக்கும்.
நாமசங்கீர்த்தனம்என்பதுஅனைவருக்கும்பொதுவானது. யார்வேண்டுமானாலும்நாமசங்கீர்த்தனம்செய்யலாம். திருமால்அடியவர்களின்திவ்யசரிதங்களைகூறும்ஸ்ரீமஹாபக்தவிஜயத்தில்வரும்அடியவர்கள்பலர்சமூகத்தில்வெவ்வேறுபிரிவைசேர்ந்தவர்கள். நாமசங்கீர்த்தனம்என்றஒன்றின்மூலமேஅவன்அருளைபெற்றவர்கள்அவர்கள்.
நாமசங்கீர்த்தனத்தின்மகத்துவம்பற்றியும்அதன்அருமைகளைபற்றியும்மேற்கூறியசேலம்நிகழ்ச்சிக்குவந்திருந்தசொற்பொழிவாளர்ஒருவர்அற்புதமானஉரைஒன்றைநிகழ்த்தினார்.
'நானில்லை… என்கோவிந்தநாமம்திரௌபதியைரக்ஷித்தது!
பரம்பொருளானஇறைவனைஅடையஅவனிடம்பக்திசெலுத்தபலவகைகள்உண்டு. அவற்றுள்முக்கியமானவழி, இறைவனின்திருநாமத்தைச்சொல்லிப்பாடுவது. இதை"திவ்யநாமசங்கீர்த்தனம்' என்பர். கலியுகத்தில்நாமசங்கீர்த்தனம்ஒன்றேமிகச்சிறந்தவழி. "நாமசங்கீர்த்தனம்பெரியபயன்கள்அளிக்கவல்லது; நாமசங்கீர்த்தனத்தின்பெருமையைவார்த்தைகளால்சொல்லிவிடமுடியாது' என்பர்.
"இறைவனிடம்மனம்ஒன்றாமல்சிதறுமானால்அதைஅடக்கஒருவழிஇருக்கிறது. அதுகைகளைத்தட்டியபடிஇறைவன்திருநாமங்களைப்பாடல்களாகப்பாடுவது. ஒருமரத்தின்அடியிலிருந்து கைதட்டினால், அம்மரத்தின்கிளைகளில்அமர்ந்திருக்கும்பறவைகள்நாலாப்பக்கங்களிலும்சிதறி, சிறகடித்துப்பறந்துபோவதைப்போலஇறைவனின்லீலைகளையும்அவனதுபெருங்கருணையையும் பாடலாகப்பாடி, கைத்தட்டியபடிநாமசங்கீர்த்தனம்செய்தால், நம்உள்மனத்திலுள்ளதீயசிந்தனைகள்எல்லாம்அகன்றோடிவிடும். கைகளால்தாளம்போட்டுக்கொண்டேஇறைநாமசங்கீர்த்தனம்செய். அப்போதுஉனக்குஏகாந்தசிந்திஉண்டாகும்' என்றுதன்சீடர்களிடம்கூறினாராம்ஒருகுருநாதர்.
மேலும், பகவத்கீதையில்ஸ்ரீகிருஷ்ணர், "யஞ்ஞானாம்ஜபயஞ்ஞோஸ்மி" அதாவது, அனைத்துவகையஞ்ஞங்களிலும்நான்ஜப(நாமசங்கீர்த்தனம்) யஞ்ஞமாகஇருக்கிறேன்என்கிறார்.
==============================================================================
ஸ்ரீவிஷ்ணுபுராணம், கிருதயுகத்தில்த்யானமார்க்கத்திலும், த்ரேதாயுகத்தில்யஞ்ஞங்களாலும், துவாபரயுகத்தில்அர்ச்சாவடிவைபூஜிப்பதாலும்கிடைக்கும்பலன்(அதாவதுபகவத்அனுக்கிரஹம்) கலியுகத்தில்நாமசங்கீர்த்தனத்திலேயேஎளிதில்கிடைத்துவிடும்என்கிறது.
"ஹரேர்நாமைவநாமைவநாமைவமமஜீவனம், கலெü நாஸ்தியேவநாஸ்தியேவநாஸ்தியேவகதிர்அன்யதா" – ஹரிநாமசங்கீர்த்தனமே, ஹரிநாமசங்கீர்த்தனமே, ஹரிநாமசங்கீர்த்தனமேஎனது ஜீவனம். கலியுகத்தில்வேறுவழிகிடையாது, வேறுவழிகிடையாதுஎன்கிறதுபிருஹத்நாரதீயபுராணம்.
"கெடும்இடராயவெல்லாம்கேசவாவென்னநாளும்கொடுவினைசெய்யும்கூற்றின்தமர்களும்குறுககில்லார்" – பகவானின்திருநாமத்தைஉச்சரிக்கும்பக்தர்களையமதூதர்கள்நெருங்கவும்அஞ்சுவர். இதனால்நமதுதுயர்கள்அனைத்தும்விலகும்என்கிறார்நம்மாழ்வார். ""நலம்தரும்நான்கண்டுகொண்டேன்நாராயணாவென்னும்நாமம்" என்றுள்ளார்திருமங்கையாழ்வார். இப்படிஸ்ரீகிருஷ்ணன்முதல், பலஆச்சார்யார்களும், பலஅருளாளர்களும்இறைவனின்திவ்யநாமசங்கீர்த்தனத்தைப்போற்றியுள்ளனர்.
க்ருஷ்ணக்ருஷ்ணேதிராமேதிஸஞ்ஜபன்ஹரிதத்பர
ராஜஸூயஸஹஸ்ராணாம்பலமாப்னோதிமானவ;"
க்ருஷ்ண! க்ருஷ்ண! ராம! என்றுஹரிநாமகீர்த்தனம்செய்வானானால்ஆயிரம்ராஜஸூயங்கள்செய்தபலனைஅடைவான்என்றுவஸிஷ்டஸ்ம்ருதிகூறுகிறது.
விஸருதாநிபஹூன்யேவதீர்த்தானிவிவிதானிச|
கோட்யம்ஸேனாபிதுல்யானிஹரேர்நாமஜபேனவை
கணக்குவழக்கற்றபுண்யதீர்த்தங்களைக்கேள்விப்படுகிறோம். அவைஹரிநாமஜபத்தின்மஹிமையில்கோடியில்ஒருபங்குகூடஆகாதுஎன்றுவிச்வாமித்ரஸ்ம்ருதிகூறுகிறது.
ஸர்வபாபயுதோயஸ்துந்ருஹரேர்நாமகீர்த்தனாத்
விமுச்யஸர்வதுர்காணியாதிப்ரும்மஸனாதனம்
ஸகலபாபங்களையும்செய்தவனாயினும்நரஸிம்மநாமத்தைக்கீர்த்தனம்செய்பவன்ஸகலகஷ்டங்களையும்தாண்டிஸனாதனமானப்ரும்மத்தைஅடைகிறான்என்றுகாலவஸ்ம்ருதிகூறுகிறது.
இவ்வாறுகணக்குவழக்கற்றஸ்ம்ருதிகள்பகவந்நாமகீர்த்தனவைபவத்தைச்சொல்லுகின்றன.
வேதத்திலே… திருநாமவைபவம்பற்றிச்சொல்லியிருக்கிறதா..? திவ்யமாய்ச்சொல்லியிருக்கிறது! நம்மைப்பார்த்துரொம்பஆதரவாகஅந்தவேதம்சொல்கிறது.
பகவான்கட்டிப்பொன்போலே… அவன்திருநாமம்ஆபரணங்களைப்போலே…
கட்டிப்பொன்மிகஉசத்தியானதுதான். ஆனால்அதைத்தலையில்வைச்சுக்கமுடியுமா? கழுத்திலேபோட்டுக்கமுடியுமா? அல்லதுமுதுகிலேதாங்கிக்கொண்டுநிற்கத்தான்முடியுமா?
ஆனால்பகவானின்திருநாமங்களோஉடனேஎடுத்தாளக்கூடியஆபரணங்கள். அணிந்தும், அணியச்செய்தும்மகிழலாம்; அழகுபார்க்கலாம்.
==============================================================================
பாரதத்தில்வஸ்திரஅபஹரணம்நடக்கும்போதுதிரௌபதிகூப்பிட்டாள்: 'ஹேகிருஷ்ணா… ரக்ஷமாம்சரணாகதாம்…' என்று. ஆனால்பகவான்அவளைரக்ஷிக்கவில்லை. இதைஅந்தபகவானேசொல்கிறார்;
"ஒவ்வோர்அவதாரத்திலும்ஒருகுறைஉண்டு. கிருஷ்ணாவதாரத்திலேதிரௌபதியைஉடனடியாகரக்ஷிக்காததுஎன்குறை…" என்கிறார்.
'திரௌபதிக்குஆடைசுரந்ததே… உன்னாலன்றிவேறுயாரால்அதுசாத்தியமானதாம்…?' என்றுகேட்டால்பகவான்சொல்கிறார்:
'நானில்லை; என்கோவிந்தநாமம்அவளைரக்ஷித்தது…'
பகவானின்நாமமேநம்மைரக்ஷிக்கும். அவனைவிடநம்மிடம்அதிகப்பரிவுடையதுஅவன்நாமம்.
பாண்டித்யம்இல்லாவிட்டாலும்பகவான்நாமத்தைச்சொல்லலாம். ஆனால்அதைஇடைவிடாதுசங்கீர்த்தனம்பண்ணணும்.
இதற்குத்தான்நாமசங்கீர்த்தனத்தைநமக்குவாழ்க்கைமுறையாகவேவைத்திருக்கிறது.
==============================================================================
பெருமாளைஎழுந்தருளப்பண்ணுகிறவர்களுக்குத்தோளிலேகாய்த்துப்போயிருக்கும். அதுபோலநாமசங்கீர்த்தனத்தைப்பழக்கமாகப்பண்ணிக்கொள்ளணும். 'நாவிலேயேதழும்புஏற்பட்டுப்போகும்அளவுக்குதிருநாமத்தைஉச்சாடணம்பண்ணணும்; எத்தனைமுறைன்னுகேட்கக்கூடாது' என்கிறார், திருமங்கையாழ்வார்.
தழும்புஎப்படிஉண்டாகும்? மீண்டும்மீண்டும்சொல்வதால். அதற்குத்தான்நியமம்ஏற்பட்டிருக்கிறது.
எழுந்திருக்கும்போது– துயிலெழும்போது; 'ஹரிர்ஹரி:, ஹரிர்ஹரி:' என்றுஏழுமுறைசொல்லவேண்டும்.
உரக்க, பெரிசாச்சொல்லணுமா? மனசுக்குள்ளேசொன்னால்போதாதா? மனசுக்குள்ளேசொன்னால்பலன்நமக்குமட்டும். பெரிசாசொன்னாஅக்கம்பக்கத்திலேஇருப்போரும்அதைக்கேட்டபடிஎழுந்திருப்பார்கள். பரோபகரமாகவும்இருக்கும்.
வெளியிலேகிளம்பிப்போகும்போது'கேசவா' என்றுஉச்சரிக்கணும்.
திருவனந்தபுரத்துஅனந்தபத்மநாபசுவாமிகுறித்துநம்மாழ்வார்பாடுகிறார்.
'கெடும்இடராயவெல்லாம்கேசவாஎன்ன..'
'கேசவா' என்றுசொன்னால்இடர்களெல்லாம்கெடுமாம். அதனால்தான்ஒருகாரியமாகப்புறப்படும்போது'கேசவா' என்றுஅழைப்பது.
ஆண்டாள்இந்தஅனுஷ்டானத்தைக்கடைப்பிடித்திருக்கிறார்.
"கேசவனைப்பாடவும்நீகேட்டேகிடத்தியோ
தேசமுடையாய்திறவேலோர்எம்பாவாய்…"
என்கிறதுதிருப்பாவை. 'கேசவாகேசவா' என்றுபாடிக்கொண்டுபுறப்பட்டுவிட்டோம். நீஅதைக்கேட்டும்கிடந்துறங்குகிறாயே..' என்றுதுயிலெழுப்புகிறார்.
அடுத்ததுஉணவுகொள்வதற்குமுன்னால்கோவிந்தாஎன்றுசொல்லிவிட்டுச்சாப்பிடவேண்டும். கோவர்த்தனகிரியைக்குடையாய்ப்பிடித்தவனைஇப்படிஅழைப்பதன்மூலம்நித்யஅன்னம்கிடைக்கஉத்தரவாதம்செய்துகொள்கிறோம்.
சிரமம்இல்லை, கஷ்டமானநியமமில்லை. ஹரீ, கேசவா,கோவிந்தா, மாதவாஎன்றுஎளியநாமங்களைநாம்தினமும்செய்கிறகாரியங்களோடுசேர்த்துவிட்டிருக்கறதாலேஎந்தவிதக்கூடுதல்முயற்சியுமில்லாமலேநாமசங்கீர்த்தனம்நடைபெற்றுவிடுகிறது.
ஆனால்சொல்கிறஅந்தநேரத்திலேமனசுஅளவுகடந்தபக்தியிலேநிரம்பியிருக்கணும். 'சொல்லிப்பார்ப்போமே, பலனிருக்கிறதாவென்று…" அப்படின்னுபரீட்சார்த்தமாகச்சொல்லக்கூடாது.
காரணம்அவனதுநாமங்கள்சர்வஉத்தமமானவை: "சர்வோத்தமஸ்யகிருபையா…" சர்வஉத்தமமானஅவனுடையநாமங்களைநம்மைஉச்சரிக்கவைப்பதும்அவனுடையகிருபைதான்… கருணைதான்!
முதலிலேஇந்தநித்யகாரியங்களுடனானநாமஉச்சாடனத்தைப்பழகிக்கொண்டுவிட்டால்மனசுமேலும்மேலும்அந்தசத்அனுபவத்தைக்கேட்கும். அந்தமனசுக்குதெய்வானுபவம்தரக்கூடியதாய்அமையப்பெற்றதுவிஷ்ணுசஹஸ்ரநாமம்.
சஹஸ்ரநாமம்என்றால்ஆயிரம்நாமங்கள்– திருப்பெயர்கள். பகவானுக்குவெறும்ஆயிரம்பெயர்கள்தானா…?
ஆயிரம்நாமங்கள்என்றுவெறும்எண்ணிக்கையிலேமட்டும்சொல்லவந்ததன்று. சஹஸ்ரம்என்பதற்கு'பலபல' என்றும்பொருள்உண்டு.
'பலபலவேஆபரணம்; பேரும்பலபலவே' என்றுஆழ்வார்சொல்கிறார்.
எல்லாரும்புரிந்துகொண்டுசொல்வதற்குஏற்பஅங்கங்கேஉள்ளரத்தினங்களைச்சேகரித்து, மாலைதொடுத்ததுபோலேதொடுக்கப்பட்டதுவிஷ்ணுசஹஸ்ரநாமம்.
'சஹஸ்ரநாமம்' என்றுசொன்னாலேஅதுவிஷ்ணுசகஸ்ரநாமத்தைத்தான்குறிக்கும்என்கிறஅளவுக்குப்பெருமையுடையது.
ஆதிசங்கரபகவத்பாதாள், காஷ்மீரில்யாத்திரைசெய்துகொண்டிருந்தபோது, தம்சிஷ்யரைஅழைத்து, புஸ்தகபாண்டாகாரத்திலிருந்துலலிதாசஹஸ்ரநாமத்தைஎடுத்துவரும்படிஆக்ஞாபித்தார். அதற்குபாஷ்யம்பண்ணவேண்டும்என்றுஅவருக்குத்திருவுள்ளம்.
அங்கேயிருந்துபோனார்சிஷ்யர். அவர்எடுத்துவந்துகொடுத்ததைப்பார்த்தால்… அதுவிஷ்ணுசஹஸ்ரநாமம். "நான்இதைக்கேட்கலையே…நான்கேட்டதுலலிதாசஹஸ்ரநாமம்அல்லவா..? நீவிஷ்ணுசஹஸ்ரநாமத்தைக்கொண்டுவந்திருக்கியே…" என்றுசிஷ்யரைத்திரும்பவும்அனுப்பினார். திரும்பவும்சிஷ்யர்எடுத்துவந்ததுவிஷ்ணுசஹஸ்ரநாமமாகவேஇருந்தது! அப்போதுஆதிசங்கரர்சிஷ்யரைக்கேட்கிட்டார்.
"நான்சொல்வதுஎன்ன, நீசெய்வதுஎன்ன…?"
'சுவாமி! நான்என்னசெய்வேன்? அங்கேபோய்லலிதாஸஹஸ்ரநாமத்தைஎடுக்கணும்னுகையைவைச்சா, ஒருசின்னகன்யாபெண்வந்துநின்னுண்டு, அதைவைச்சிடு; இதைஎடுத்துண்டுபோ'ன்னுசொல்கிறாள். நான்என்னசெய்வேன்…?" என்றார்சிஷ்யர்.
அப்போதுஆதிசங்கரர்தம்திருவுள்ளத்திலேநினைத்தார்: அந்தஅம்பிகையேஇங்குபாலையாய்வந்து, அந்தஎம்பெருமான்நாராயணனுடையதிருநாமத்துக்குபாஷ்யம்பண்ணும்படியாய்நம்மைநியமிக்கிறாள்…
அதன்பிறகுவிஷ்ணுசஹஸ்ரநாமபாஷ்யம்(உரைஎழுதுவது) பண்ணினார்பகவத்பாதர்.
இப்படிலலிதையேபோற்றும்படியான, லலிதமானசஹஸ்ரநாமம், எல்லாரும்கொண்டாடும்படியானஏற்றம்உடையது. எல்லாசஹஸ்ரநாமங்களுக்கும்ஆதியானசஹஸ்ரநாமம்இதுதான். ஆகையினாலே, சஹஸ்ரநாமம்என்றுசொன்னாலேஅதுவிஷ்ணுசஹஸ்ரநாமத்தைத்தான்குறிக்கும்.
ஆயிரம்திருநாமங்களுக்குஎன்னஏற்றம்…? அந்தசஹஸ்ரநாமம்சொல்லப்பட்டதுயாராலே…? ஞானிகளுடன்அக்ரகண்யரானபீஷ்மரால்.. பீஷ்மர்என்றாலேபயப்படத்தக்கவர்என்றுஅர்த்தம்.
அம்புப்படுக்கையில்இருந்தார்பீஷ்மர். அந்தக்காட்சியைப்பார்த்து, தர்மபுத்திரரைஅழைத்துச்சென்றார்பகவான்கிருஷ்ணர். "அணையும்நெருப்பைப்போலேஇருக்கிறார்பீஷ்மர். அவர்போனால், தர்மத்தைச்சொல்லயார்இருக்கிறார்கள்…? போ! அவர்சொல்வதைப்போய்க்கேள்" என்றுதர்மபுத்திரரைஅனுப்பினார்.
'ஏன்பீஷ்மர்போய்விட்டால்பகவானேஇருக்கிறாரே– தர்மத்தைச்சொல்ல…?' என்றுநமக்குக்கேட்கத்தோன்றும்.
பகவான்இருந்துபிரயோஜனமில்லை; அவரைவிளங்கச்செய்யக்கூடியமகான்கள்இருக்கணும்! இந்தஉண்மைக்குசாட்சியமாகத்தான்பகவானேபீஷ்மர்அம்புப்படுக்கையிலேஇருந்தபடிசொன்னஅந்தவிஷ்ணுசஹஸ்ரநாமத்தைக்கேட்டார். பலபேர்கேட்டார்கள். அவர்களுடன்அந்தவாசுதேவனேகேட்டான். அவன்சொன்னதுகீதை; கேட்பதுசஹஸ்ரநாமம். இப்படிஅவன்ஆனந்தமாய்க்கேட்டதேஅவன்பெருமை, உயர்வு.
==============================================================================
பராசரபட்டர், விஷ்ணுசஹஸ்ரநாமத்துக்குபாஷ்யம்செய்திருக்கிறார். பகவத்குணதர்ப்பணம்என்றுஅதற்குப்பெயர். 'பகவானுடையதிருக்கல்யாணகுணங்களைக்காட்டக்கூடியகண்ணாடி' என்றுபொருள். விஷ்ணுசஹஸ்ரநாமம்என்னும்போதுபகவானுடையநாமாக்களைச்சொல்கிறோமா? அவன்குணங்களைச்சொல்கிறோமாஎன்றுசந்தேகம்வேண்டாம்… அவன்குணங்களையேதெரிவிக்கும்படியானநாமாக்கள்அவை. அத்தனையும்சுகுணங்கள்!
சிறியகண்ணாடியானதுமிகப்பெரியயானையின்உருவத்தைக்கூடக்காட்டவல்லதுஇல்லையா..? அதைப்போலேசர்வவியாபகனானவனைஅந்தசின்னத்திருநாமங்கள்நமக்குப்படம்பிடித்துக்காட்டுகின்றன.
இந்தபகவத்குணதர்ப்பணம்என்கிறபாஷ்யத்திலே, பராசரபட்டர், விஷ்ணுசஹஸ்ரநாமத்துக்குரியஏற்றங்களைச்சொல்கிறார்.
நித்யம்பகவத்சந்நிதியில்விளக்கேற்றிசஹஸ்ரநாமம்பாராயணம்பண்றவழக்கம்வைத்துக்கொண்டால்அந்தக்குடும்பத்திலேசண்டை, கலகம்இருக்காது. சர்வசம்பத்தும்வந்துசேரும். அந்நியோன்யம்வளரும்; துர்தேவதைகள்பிரவேசிக்காது… நம்சித்தத்திலும்நுழையாது.
ஸ்ரீமஹாபெரியவாள்தினம்பிக்ஷைசெய்யஆரம்பிக்கும்முன், அங்கிருக்கும்சிஷ்யர்களைஸ்ரீவிஷ்ணுஸஹஸ்ரநாமபாராயணத்தைசொல்லும்படிசமிக்ஞைசெய்வார்கள். [தலையில்கையினால்குட்டிக்கொண்டுசமிக்ஞைசெய்வார்கள்; "சுக்லாம்பரதரம்" என்றுஆரம்பிக்கவேண்டும்என்றுஅர்த்தம்]. அவர்கள்எல்லோரும்ஸ்ரீவிஷ்ணுஸஹஸ்ரநாமபாராயணம்தினம்இரண்டுஆவர்த்திசொல்லுவார்கள். ஸ்ரீபெரியவாள்அதைச்ரவணம்செய்துகொண்டேபிக்ஷைசெய்வதுவழக்கம்.
கீதைக்குச்சமானமாகஏதாவதுஉலகத்திலேஉண்டாஎன்றுகேட்டால்அதுவிஷ்ணுசஹஸ்ரநாமம்தான். இன்னும்கேட்டால், கீதையைவிடஉயர்வானது. கீதையைச்சொன்னதுபகவான். அந்தபகவத்சரணாரவிந்தத்திலேஅசஞ்சலமானபக்திஉடையஞானி(பீஷ்மர்) சொன்னவார்த்தைவிஷ்ணுசஹஸ்ரநாமம். பகவானைக்காட்டிலும்ஞானிஉயர்ந்தவரானதாலேஅவர்வார்த்தைக்குமதிப்புஅதிகம்.
வேதமேசொல்கிறது. 'யக்ஞமேபண்ணவேண்டாம். அவன்திருநாமத்தைச்சொன்னாலேபோதும். யக்ஞம்பண்ணினபலன்கிடைக்கும்…,
கலியுகத்திலேகடும்அனுஷ்டானங்களைக்கடைப்பிடித்துயக்ஞமெல்லாம்பண்ணமுடியாதுன்னுவேதத்துக்கேதெரியும்!
கீதையின்கடைசிப்பேச்சாகவருவதைசரமஸ்லோகம்னுசொல்றது. மகாமந்திரம்அது. அதுஎன்னசொல்கிறதுதெரியுமா…? 'எல்லாதர்மங்களையும்நன்றாகவிட்டு, என்னையேசரணமடைவாய்…' என்கிறது.
தர்மங்களைவிடுவதுஎன்பதுநித்யகடமைகளானசந்தியாவந்தனம், மாத்யானிகம்போன்றவற்றைவிட்டுவிடுவதல்ல… நியமத்தோடுபண்ணமுடியாதபெரியயக்ஞங்களைவிட்டுவிடலாம்என்றுஅர்த்தம்.
இதற்குஇன்னொருவியாக்யானமும்சொல்வதுண்டு… கலியுகத்திலேஎல்லாதர்மங்களும்நம்மைவிட்டுதூர, தள்ளிஅகன்றுபோய்விடுகின்றன…! 'இவனாலேயக்ஞமெல்லாம்முறைப்படிபண்ணமுடியாது' என்றுஅவற்றுக்குத்தெரியுமாம்! அதனால்தான்நம்மேலேபரிவுகொண்டு, வீணானவிஷயங்களிலேநாம்காலத்தைக்கழித்துவிடஅனுமதிக்காமல்மாற்றுவழிசொல்லியிருக்கிறது. யக்ஞம்பண்ணினால்என்னதிருப்தியைபகவான்அடைவானோ, அதேதிருப்தியைஅவன்திருநாமத்தைச்சொன்னால்அடைஞ்சுடுவான். எம்பெருமான்நாமங்களால்சமஸ்தயக்ஞபலனும்நமக்குக்கிடைக்கும்.
பகவான்நாமத்தையாருடையநாக்குமறவாமல்உச்சரித்துக்கொண்டுஇருக்கிறதோஅவன்சாஸ்திரங்களைஅறிந்தவனாயினும்அறியாதவனாயினும்சுத்தனாயினும், அசுத்தனாயினும், எக்குலத்தில்பிறந்தவனாயினும், சத்தியரூபத்தைஅடைகிறான். பகவானுடையநாமத்திற்குஅத்தகையமகத்துவம்இருக்கிறது. நாமசங்கீர்த்தனம்செய்பவன்பதிதைகளானபெண்டிர், லோபிகள்பாஷாண்டிகள்நடுவில்இருந்தபோதிலும்சீக்கிரமேவிடுதலையடைந்துவிடுகிறார்கள். எல்லாவிதமானஅசுத்தங்களையும்அகற்றிஅபாரதங்களிலிருந்துநிவாரணம்அளிப்பதும்அசுபங்களிலிருந்துமீட்டுசுகத்தைஉண்டாக்குவதும்பகவானுடையநாமம்மட்டுமேஎன்றுபகவானின்நாமமகிமைகளை, பத்மபுராணம்நமக்குக்கூறுகிறது.
சமுத்திரத்தின்நீரைஒருகைப்பிடிஎடுத்துவிட்டு, இதோபார்த்தாயாசமுத்திரம்என்கையில்என்றுகூறுவதுபோலத்தான்விஷ்ணுசஹஸ்ரநாமத்தின்பெருமையையும்மகத்துவத்தையும்ஒரேபதிவில்கூறமுயல்வது…
No comments:
Post a Comment