அன்புள்ள ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு,
கோத்ரம் ! என்றால் வம்ஸாவளி என்று பொருள். அதாவது இந்துக்களாகப் பிறந்த நாம் ஒவ்வொருவரும். ஒரு ரிஷி / முனிவர்கள் சந்ததியில் வந்தவர்கள்தாம். உதாரணமாக பரத்வாஜர் வம்சத்தில் வந்தவர்களை பாரத்வாஜ கோத்ரத்தைச் சேர்ந்தவர்கள் என்கிறோம். இதுபோன்று பலகோத்ரங்கள் இருக்கின்றன. தாங்கள் எந்த முனிவரின் சந்ததியில் வந்தவர்கள் என்று அறியாதவர்கள்கூட, சிவபக்தர்களாக இருந்தால், சிவகோத்ரம் என்றும், விஷ்ணு பக்தர்களாக இருந்தால், விஷ்ணுகோத்ரம் என்று தங்களைக் கூறிக்கொள்வர். ஒரு கோத்ரத்தில் பிறந்த அனைவருக்குமே ரத்த சம்மந்தமுண்டு. அவர்கள் சகோதர, சகோதரிகளாகிறார்கள். எனவேதான் ஒரே கோத்ரத்தைச்சேர்ந்த ஒரு பெண்ணுக்கும், பிள்ளைக்கும் திருமணம் செய்வதில்லை.மேலும் ஒரே கோத்ரத்தைச்சேர்ந்தவர்கள் திருமணம் புரிந்துகொண்டால் அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் ஊனத்துடன் பிறக்க வாய்ப்புண்டு.
அந்த நாளில், மணமகன் வாத்யார் ஸ்வாமிகள் சொல்லும் மந்திரங்களை அவற்றின் அர்த்தம் தெரியாவிட்டாலும் கூடவே சிரத்தையாகச்சொல்வான். அவர் சொல்வதையெல்லாம் செய்வான். அவற்றிர்கு நல்லபலன் உண்டு. ஆகையால் விவாகரத்துயென்பதுமிகக்குறைவாகவே இருந்தது. திருமணங்களும் ஒரேநாளில், அதாவது முதல்நாள்மாலை திருமணஅழைப்பு, மறுநாள் காலை திருமணம்முடிந்தது. வைதீக காரியங்கள் சரிவர நடப்பதேயில்லை. மணமகனும் மந்திரங்களைச் சொல்வதில்லை. மணமகளின் கையைதிருமணசடங்குகள் முடியும்வரை அவன் விடவேக்கூடாது. ஆனால் அவன் வந்தவர்களுக்கு நமஸ்காரம் சொல்வதும், அவர்கள் கையைகுலுக்குவதுமாகத்தான் இருப்பான். அடியேன் சமீபத்தில் ஒருதிருமண-த்திற்குச் சென்றிருந்தேன். அங்கு "சப்தபதியே" நடக்கவில்லை.சப்தபதிதான் திருமணத்தின் உயிர்நாடியே ! ஆனால்வாத்தியார் ஸ்வாமிகளும் கண்டும் காணாததுமாக இருக்கின்றனர். விளைவு !ஒரேமாதத்தில் பல திருமணங்கள் விவா-கரத்திலேயே முடிவடைகின்றன. நம் விவாகமந்திரங்களை அவற்றின் பொருள் தெரிந்துசொன்னால் நிச்சயம் விவாகரத்துகள் குறையும் என்று ஆணித்தரமாகச் சொல்வேன். அதைமனதில் கொண்டுதான் அடியேன்," விவாகமந்திரங்களும் அவற்றின் விளக்கங்களும் " என்ற தமிழ்கட்டுரையை எழுதினேன். அந்த மந்திரங்களையும் அவற்றின் பொருளையும் கீழே தந்துள்ளேன் எல்லோரும் படித்து பயன் பெற வேண்டுமென்ற எண்ணத்தில்.
|
https://drive.google.com/file/d/0ByHsyol17T5XVXVwdllJekNvZjQ/view?usp=sharing
No comments:
Post a Comment