Wednesday, November 12, 2014

Greatness of saiva yagnas

Courtesy: Sri.GS.Dattatreyan
சைவ யாகச் சிறப்பு
சைவ யாகச் சிறப்பு. {ஒரு விரிவான பயனுள்ள கட்டுரை}

யக்ஞம், யாகம், ஹோமம், வேள்வி என்ற சொற்கள் ஒரே பொருளைத் தருவனவாகும். இறைவனுக்கு யாகம் செய்து வழிபடுவதும் ஒரு கடமையாகும். யாக மூலமாக முழுப்பலனையும் பெறலாம் என்பது அன்று முதல் இன்று வரை இருந்து வருகின்ற நம்பிக்கையாகும். ஆகவே சிவ சம்பத்தப்பட்ட யாகச் சிறப்பினை இங்கு காண்போம்.

ஹோம குண்டங்கள்...

பொருளை வைக்கப் பாத்திரம் வேண்டும். அது போலவே சிவாக்னியை வைத்து வளர்க்கும் பாத்திரங்கள் ஹோம குண்டங்கள் ஆகும். அவைகள் சதுர குண்டம், திரிகோண குண்டம், அர்த்தசந்திர குண்டம், விருத்த குண்டம், எண்கோண குண்டம், யோனி குண்டம், பத்ம குண்டம், அறுகோண குண்டம் முதலாயின. குண்டங்களை அமைத்தும் அதில் சிவாக்னியை வளர்த்தும் சிவனைப் பற்றிய மூல மந்திரம், காயத்ரி, மாலா மந்திரங்களை உச்சரித்துக் கொண்டு "சிருக்" {யாகக்கரண்டி அல்லது நெய்யினை ஊற்ற உபயோகிக்கும் கருவி.} மூலமாக நெய்யினை ஆஹுதி {ஹோமம்} செய்தல் போன்ற செய்திகளை சைவ ஆகமங்கள் தெரிவிக்கின்றன.

ஐவகை யாகங்கள்.

மானிடர்களுக்கு இன்பமும் துன்பமும் மாறி மாறி வருகின்றன. சிலருக்குத் துன்பமானது தொடர்ந்து வந்தமயமாய் இருந்து வருகின்றன. இதனைப்போக்க ஞானிகள் பலவழிகளை மேற்கொண்டு உள்ளனர். இறைவனது திருக்கோயிலை வணங்குதல், அவனது திருவுருவத்திற்கு அபிஷேகம், அர்ச்சனை முதலான ஆராதனைகளைச் செய்தல், பிரதோசம், சிவராத்திரி, கிருத்திகை, சோமவாரம், வியாழன், வெள்ளி முதலிய நாட்களில் விரதத்தை மேற்கொள்ளுதல், இறுதியில் இறைவனுக்கு உரிய பொருள்களை யாகத்தின் மூலமாக செலுத்தி முழுப்பலனையும் பெறுதல் என்ற முறையைக் கையாளுகின்றனர்.

ராஜசூன்ய யாகம், அஸ்வமேத யாகம், சோம யாகம் இந்த சோம யாகத்திற்கு மூல மூர்த்தி ஸ்ரீ.தக்ஷினாமூர்த்தியே ஆவார். இந்த யாகத்திற்கு அதிமுக்கியமாகக் கருதப்படும் சோமக்கொடியின் சாற்றினை எடுத்து ஆஹுதி செய்தால் நல்ல மழை பெய்யும். இந்த யாகம் 1986.ல் கேரள மாநிலத்தில் நடந்தது. இந்த யாகம் செய்தமையால் நல்ல மழையும் பெய்தது. இந்த யாகாதி நிகழ்ச்சிகளில் அயல்நாட்டு அறிஞர்கள் கலந்துகொண்டு ஆய்வும் செய்தனர் என்பதைப் பலரும் அறிவர். தமிழக முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர் அவர்கள் உடல் நிலை மோசமாக இருந்த தருணத்தில் ஆர்.எம்.வி மூலமாக சென்னை அப்பல்லோ ஆஸ்பிட்டலில் அதிருத்ர யாகம் என் தாத்தா ஜி.எஸ்.விஸ்வநாத சிவாச்சார்யார் தலைமையில் நடைப்பெற்றது. அவரும் உடல் நிலை முன்னேற்றம் கண்டு சென்னை வந்தார். அதேமாதிரி 20.வருடங்கள் முன் இலங்கை யால்பானம் பகுதியை காப்பாற்ற பிரம்மாண்ட அளவில் அஸ்வமேதயாகம் என் தாத்தா தலைமையில் 1500 சிவாச்சார்யார்கள் களந்துகொண்டு சிறப்பாக நடைப்பெற்றன. நடிகர் சிவாஜிகனேசன் மற்றும் அவரது மகன் பிரபு அவர்களுக்காக அதிருத்ர யாகம் அவர்களது இல்லத்தில் நடத்தி அவர்கள் காரியம் வெற்றியடைந்தது இதல்லாம் அனுபவத்தில் கண்ட உண்மை. { இம்மூன்று யாகங்களும் மன்னர்கள் காலத்தில் செய்யப்பட்டன} கணபதி ஹோமம், சிவ ஹோமம், அதிருத்ர ஹோமம், மிருத்யுஞ்சய ஹோமம், {இவைகள் சிவ சம்பத்தப்பட்ட யாகங்கள்} துர்க்கா ஹோமம், சண்டி ஹோமம், நவசக்தி ஹோமம், {இவைகள் சக்திக்குறிய ஹோமங்கள்} இவைகளை தவிர புத்திர காமேஷ்டி யாகம், நவக்ரஹ யாகம், தனாகர்ஷ்ன யாகம், சத்ருசம்ஹார யாகம், முதலிய எண்ணற்ற ஹோமங்கள் செய்யப்படுகின்றன. சௌரமானவர்களுக்கும் வைஷ்ணவர்களுக்கும் இதுபோலவே தனித்தனியாக ஹோமங்கள் இருக்கின்றன.

மெய்ஞானத்தில் விஞ்ஞானம்...

திருக்கோயில் வழிபாடு, திருவிழாக்கள், அபிஷேக ஆராதனைகள், வேத மந்திரங்களை உச்சரித்தல், வேள்வி சம்பத்தப்பட்ட காரியங்கள் எல்லாம் விஞ்ஞான அடிப்படையில் அமைந்துள்ளன. ஆகவேதான் இன்று வரை நம் சமயமானது நிலைத்து நிற்கின்றது என்பது வெளிநாட்டு விஞ்ஞானிகள் கருத்தாகும்.

யாகத்தில் போடப்படும் பொருள்கள் அனைத்தும் நறுமணப் பொருள்களும், மருந்துப் பொருள்களும், விஷத்தை முறிக்கும் கொடி வகைகளும், தேவ சமித்துகளுமே, யாகம் செய்யும் காலத்தில் சுபிக்ஷத்திற்கும், காரிய சித்திக்குண்டான மந்திரங்களைச் சொல்லியும் மருந்துப் பொருள்களைத் தனித்தனியாக அக்னியில் சேர்ப்பித்தும் பசு நெய்யினை ஆஹுதியாகக் கொடுக்கப்படுகிறது.

யாகம் செய்கின்ற காலத்தில் எழும் யாகப் புகையானது வானத்தினைச் சுத்தம் செய்து மழைக்கு ஏதுவாகக் கர்ப்ப நீரோட்டத்தை அமைக்கிறது. மழையினால் தானிய உற்பத்தியும் செழுமையும் ஏற்படுகிறது. சமித்து மற்றும் மூலிகை மருந்துகளால் யாகம் செய்யப்படுவதால் ஓசோன் மண்டலம் பாதுகாக்கப்படுகிறது. யாகப்புகையினால் ஓசோன் மண்டலத்தில் உள்ள ஓட்டைகளை அடைக்க இது உதவுகிறது என்று நாசா விஞ்ஞானிகள் கூறுகின்றன.

ஹோமத்திலிருந்து வருகின்ற புகையும் எடுக்கப்பட்ட சாம்பலும் தோல் வியாதிகளை நீக்குகின்றன. {பிரான்ஸ் நாட்டில் சில பள்ளிக்குழந்தைகளுக்கு ஏற்பட்ட " காக்காய் வலிப்பு " நோய் வேள்விப் புகையின் மூலமாக நிவர்த்தியாயிற்று. என்ற 1981 – ஆம் ஆண்டுச் செய்தி கூறுகிறது. உதாரணமாக நாயுருவி என்ற செடியின் புகையானது சருமத்தில் உள்ள கெட்ட நீரினை அகற்றுகிறது. தோல் வியாதிகளைப் போக்குகிறது. ஆகவே இதனை யாகசாலைகளில் முக்கிய சமித்தாகக் கையாளுகின்றனர்.} மேலும் உடலிள்ள கெட்ட நீரினை அகற்றுகிறது. எலுமிச்சம் பழச்செடி, நாரத்தம்பழச்செடி, முல்லைச்செடி முதலான செடிகளுக்கு ஹோமச்சாம்பல் எருவாக இடப்படுதலினால் அவை பழங்களையும், பூக்களையும் அதிக அளவில் கொடுக்கின்றன என்பது தாவரவியல் விஞ்ஞானத்தில் கண்ட உண்மையாகும்.

இறைவனுக்குச் செய்யப்படும் யாகங்களில் 94.விதமான மருந்து பொருள்களைத் தனித் தனியே கொடுத்தும் அத்துடன் பசு நெய்யினால் ஆஹுதியும் கொடுப்பதனால் இறைவன் {சிவபிரான்} ஆனந்தம் கொண்டு அருள் என்ற பாலைக்கொடுக்கிறான் என்பது சமய கருத்து.

மேற்கூறிய மருந்துப் பொருள்களைத் தனித்தனியாக இடித்து, வஸ்த்திர காயம் செய்து நெய் விட்டுக்காய்ச்சி லேகியமாக்கித் தாயானவன் உண்டு தன் குழந்தைக்குப் பாலினைக் கொடுத்து உறுதியான குழந்தையை உருவாக்குகின்றாள். இந்நுட்பத்தை மேற்கூறியவாறு தெய்வ காரியமாக நம்மவர்கள் திருக்கோயிலில் நடத்தி வருவது கண்கூடாகும்.
ஸ்ரீ.ருத்ரம்...

எல்லா தெய்வங்களுக்கும் தனித்தனியே ஹோமங்கள், சைவ ஆகமங்களில் தெரிய வருகின்றன. சிவனைப் போற்றும் பல ஆராதனைகள் இருப்பினும் யாகமே சிறந்தது என முன்னோர்கள் கண்ட முடிவு ஆகும். " நம சிவாய ச சிவதராய ச" {ஸ்ரீ.ருத்ரம் 8-1} சிவன் என்னும் சொல் "மங்களம்" எனப் பொருள்படும். சிவதரன் என்பது தன்னையடைந்தாரை சிவமாக்குகிறவன் என்பது பொருள்படும். 121.பேர் பதினோறு நாள் 1331.முறை சொன்னால் அதுதான் " அதி ருத்ர மஹா யக்ஞம் " உலக நலனுக்காக நிகழ்த்தப்படும் இந்த மஹா யக்ஞம் அனந்தகோடி மங்களங்களையும் சுபிட்சத்தையும் மக்களுக்கு தரவல்லது என்பது நிருபிக்கப்பட்ட உண்மை. இன்றைய அளவில் "ஸ்ரீ.ருத்ரம்" எல்லாச் சிவாலயங்களிலும் நித்திய, நைமித்திக காலங்களில் சொல்லப்பட்டு வருகின்றது. யாகத்தில் சிறந்ததும் மங்களத்தைக் கொடுக்கச் செய்வதுமாகிய ஹோமம் அதிருத்ர ஹோமமாகும்.

ரிக்,யஜுர்,சாம,அதர்வன என்ற நான்கு வேதங்களில் அதர்வணம் நீக்கி, மற்ற மூன்று வேதங்களின் நடுநாயகமாக விளங்கும் யஜுர் வேதத்தில் உள்ள அத்தியாயத்தின் நடுப்பகுதியில் அமைந்துள்ளது ஸ்ரீ.ருத்ரம் என்ற "நமசிவாய" மந்திரமாகும்.

சிவனை வணங்க இந்த ருத்திரத்தை விடச் சிறந்த மந்திரம் வேறில்லை. "சிவாயநம: எனும் மந்திரத்தின் சிறப்பைத் திருமுறைப் பாடல்களில் காணலாம், ரிஷிகளும், நாயன்பார்களும், சமயாச்சாரியர்களும், சந்தானச்சார்யார்களும் தன்னகத்தே கொண்ட மந்திரம் "சிவாயநம" என்ற பஞ்சாட்சரமாகும். பஞ்சாட்சரமாகவே ஸ்ரீ,நடராஜப்பெருமானின் திருவுருவம் அமைந்துள்ளது என்பது ஆன்றோர் வாக்கு. அபிஷேகம், அர்ச்சனை, நமஸ்காரம், யாகக்காலம், விரதகாலம் அனைத்திலும் சொல்லத்தக்கது நமசிவாய மந்திரமான ஸ்ரீ.ருத்ரமாகும்.

இதை பாராயணம் செய்யச் செய்ய செய்பவர் ஆற்றல் கூடுகிறது. பாராயணம் செய்கின்ற ஒருவர் 11.முறை இதை பாராயணம் செய்தால் "ஸ்ரீ.ருத்ரம்" 11.பேர் சேர்ந்து 121.முறை சொன்னால் அது " ருத்ர ஏகாதசி " பதினோரு பேர் 1331 முறை சொன்னால் அது " மஹா ருத்ரம் " 121.பேர் 11.நாள் 1331.முறை சொன்னால் அது " அதிருத்ரம் "

சிவபெருமானுக்கு "யக்ஞாய" "யக்ஞரூபாய" என்ற எண்ணற்ற சிறப்பு நாமாக்கள் இருக்கின்றன. திருக்கோயிலின் கும்பாபிஷேக நாட்களில் இறைவனை :அக்னி" ரூபமாகவே வழிபடுகின்றனர். யாகத்தின் முடிவில் " மஹா பூர்ணாஹுதி " செய்யப்படும் சமயத்தில் யாகாக்க்னியை நன்றாக வளர்த்தும் வணங்கியும், அவ்வேள்வி மூலமாக 36. தத்துவங்களையும் ஒன்று சேர்த்து இறைவனை ஆவாஹனம் செய்த கும்பத்திலே சேர்ப்பித்தும் ஷோடச உபசாரங்கள் முதலியன செய்தும் வழிபடுவது இன்று வரை நிகழ்ந்த வண்ணமாய் இருந்து வருகின்றது.

யாக சம்பத்தப்பட்ட செய்திகள் வேதங்களில் சூக்ஷ்மமாகக் கூறப்பட்டாலும் சிவாகமங்களில் செயல் முறைக்கு ஏற்ப விரிவாகவும் விளக்கமாகவும் கூறப்படுகிறது. இந்தச் சைவயாகாதி செயல்முறைகளை எல்லாம் ஆகமம் வழிநின்று ஒழுகும் பெரியோர்கள் மூலம் நேரிடையாகக் கேட்டு அறிந்து தெளிதல் சாலப் பொருத்தமாகும்... ஓம் நமசிவாய... .

No comments:

Post a Comment