ஸ்ரீ ராகவேந்திரர் மந்த்ராலய மகான். ஜீவசமாதியில் இருந்துகொண்டு இன்றும் பக்தர்களை போஷிப்பவர்.
மூல பிருந்தாவனத்தில் இருந்து பிரசாதமாக அளிக்கப்படும் மிரிதிகா என்னும் மண் எண்ணற்ற நோய்களை குணப்படுத்துவதாக பக்தர்கள் கூறுவர். குரு ராகவேந்திரர் வாழ்வில் எண்ணற்ற அதிசயங்கள் நிகழ்ந்தன என்றாலும் ஒருசிலவற்றை மட்டும் இங்கு பேசுவோம்:
ஒரு முறை சோழ ராஜாவின் ஆட்சியில் அரசியல் சிக்கல் உட்பூசல் உண்டாகி மன்னன் மனம் வாடிய நேரம். ராஜ்யம் கலகத்தால், கொள்ளைகளால் .பஞ்சம் வந்து தவித்தது. அரசன் கஜானாவை காலிசெய்தும் போதாமல் தன் சொந்த சொத்து, நகைகளையும் விற்று மக்களுக்கு சேவை செய்தான். அப்படியும் பஞ்சம் தீரவில்லை. குரு ராகவேந்திரரை பற்றி கேள்விப்பட்டு அவர் அருளை வேண்டினான். மகான் உடனே தஞ்சை விரைந்தார். பன்னிரண்டு
ஆண்டுகள் தங்கி தன் தவ வலிமையால் அமைதி நிலைநாட்டி சோழநாடு மீண்டும் செழித்து மக்கள் சந்தோஷமாக வாழ வகை செய்தார். அரசன் மகிழ்வோடு ஒரு மிக விலையுயர்ந்த மணி மாலையை பரிசளித்தான். மகான் அதை வாங்கி தான் அப்போது பூஜை செய்து கொண்டிருந்த யாக(ஹோம) தீயிலிட்டார். அரசன் அவர் தன்னை அவமானம் செய்ததாக நினைத்து வருந்தினான். அவன் மனநிலையை அறிந்த ராகவேந்திரர் யாகத்தீயில் அக்னி அம்சமான பரசுராமரை பிரார்த்தித்தார் . யாக தீயிலிருந்து மணிமாலை மீண்டும் வெளி தோன்றியது. அரசன் மகானின் காலில் வீழ்ந்து ஆசி வேண்டினான்
ராகவேந்திரருடைய சீடர்களில் ஒருவர் தன் கல்வி கேள்வி பூர்த்தி ஆனவுடன் ஆச்சர்யன் ஆசியுடன் தன் வீடு திரும்பும் நேரம். அவர் விடைபெறும்போது மகான் துங்கபத்ரை நதிக்கரையில் ஸ்நானத்துக்கு தயாராயிருந்தார். வழக்கமாக சிஷ்யர்கள் குருகுல ஆஸ்ரமம் முடிந்து திரும்புகையில் சிலருக்கு எதாவது பணமுடிப்பும் தரப்படும். இந்த சிஷ்யரோ பரம ஏழை. ஆனால் அந்த நேரம் அவர் என்ன செய்யமுடியும்? "என்னிடம் உனக்கு தர ஒன்றுமில்லேயே அப்பா? என்றார் குரு.."சுவாமி எனக்கு ஒன்றுமே வேண்டாம். எனக்கு கல்வியறிவு புகட்டிய செல்வமே போதும். உங்கள் கையால் சிறிதளவு இந்த ஆற்று மண்ணை தந்தா அதுவே எனக்கு பெரும் செல்வம்." என்றான் சீடன். ஒருகணம் கண்மூடி தியானித்து குனிந்து ஒரு கைப்பிடி மண்ணை கொடுத்தார் மகான். அதை பொக்கிஷமாக போற்றி துணியில் முடிந்து தலைமேல் வைத்துகொண்டு புறப்பட்டான் சீடன். நாளெல்லாம் நடந்து இரவில் தங்க ஒரு ஊரின் ஒரு மாளிகை வாசலுக்கு வந்தான். உள்ளே சென்று ஒதுங்க வழியில்லை. வெளியே படுத்தான்.. அன்றிரவு அந்த மாளிகையின் பிரபுவின் மனைவிக்கும் பிரசவ காலம். இதுவரை நான்கு ஐந்து முறை பிரசவித்து உடனே அந்த சிசு மரணமடைந்த வருத்தம். இன்றிரவாவது குழந்தை பிழைக்காதா என்ற ஏக்கம் அவர்களுக்கு. பிரசவநேரத்தின் பொது வாசலில் ஒரு கரிய பூதம் தோன்றி உள்ளே நுழைய முயற்சித்தது. அனால் சீடன் வாசலில் தலைக்கு வைத்து படுத்திருந்த சிறிய மணல் மூட்டை பெருந்தீ அரணாக அதை உள்ளே செல்ல விடாமல் தடுத்தது. அதன் வெப்பத்தில் பூதம் கத்தியது. சீடன் எழுந்து அதை நோக்கினான். குருவை நினைத்து சிறிது மணலை எடுத்து அதன் மீது வீசினான். பெரும் காட்டுத்தீயாக மாறி அந்த மணல் பூதத்தை சுட்டெரித்தது. பெரும் கூச்சலுடன் அது எரிந்து சாம்பலாகியது. சப்தத்தை கேட்டு பிரபு வெளியே ஓடிவந்தார். விவரம் அறிந்தார். ஏன் ஒவ்வொருமுறையும் தன் குழந்தைகள் மடிந்தன என்று உணர்ந்தார். அதற்குள் உள்ளேயிருந்து மருத்துவச்சி வெளியே ஓடி வந்து "அய்யா உங்களுக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்திருக்கிறான்" என்று சந்தோஷத்தோடு அறிவித்தாள். இதற்கப்புறம் பிரபு தன் தங்கையை அந்த சீடனுக்கு மனம் செய்வித்து அவனும் ஒரு ப்ரபுவானான் என்று கதை நீளும். அறியவேண்டிய உண்மை மந்த்ராலய மகானின் கைப்பிடி மண்ணும் பொன்னுக்கு நிகராக ஒருவனை வாழ்வில் உயர்த்தியதுதான.
ஒரு சமயம் ஒரு பிரபு அவரை சீண்டினான். அந்த ஊரில் ஒரு பெரும் பூஜை செய்ய மகானை அழைத்தான். எல்லோர் முன்னிலையிலும் அன்று அவரை அவமதிக்க எண்ணி ஒரு உலர்ந்த கட்டையை அவர் முன் வைத்து, " தவ வலிமையால் இதை துளிர்க்க செய்வீர்களா"என சவால் விட்டான். மகான் கண்மூடி " மூலராமா!! இது உனக்கு விட்ட சவால் அல்லவோ?. என்னசெய்யவேண்டுமோ செய்" என்று கமண்டல ஜலம் சிறிது அதன் மீது தெளித்தார். கட்டை அழகிய பச்சை இலைகளுடன் துளிர்த்ததை சொல்லவேண்டுமா?
அநேக அதிசயங்களை அவர் நிகழ்த்தியிருக்கிறார். ஒன்றை கூறி நிறுத்துகிறேன்.
வெள்ளையர் நம்மை ஆண்ட காலம். கிழக்கிந்திய கம்பனியில் அப்போது மன்றோ கலெக்டராக இருந்தார். மந்த்ராலயம் ராகவேந்திரா மடத்துக்கு சொந்தம் என்பதற்கு போதிய ஆவணம் காட்டவில்லை எனவே மந்த்ராலயத்தை கம்பனி ஆட்சிக்குள் கொண்டுவர நிர்பந்தம். அதை நிறைவேற்றுமுன் மந்த்ராலயத்தை ஒருமுறை சென்று பார்த்துவிட்டு முடிவு எடுக்க மன்றோ சென்றார். ஒரு ஆவணமும் இல்லாத நிலையில் அந்த மடத்தை அப்புறப்படுத்தவேண்டும் என்ற முடிவுசெய்யுமுன் அந்த பிருந்தாவனத்துக்கு வணக்கம் செலுத்த மன்றோ உள்ளே நுழைந்தார். எதிரே ராகவேந்திரரே அவர் முன் தோன்றி இருவருக்கும் வாக்குவாதம். எந்த நாளில் எந்த ஓலைச்சுவடியில், எந்த அரசாங்க முதிரையுடன் மந்த்ராலயம் மடத்துக்கு யாரால் எப்போது வழங்கப்பட்டது என்ற புள்ளிவிவரங்களை மகான் தெரிவித்தவுடன் மன்றோ "உடனே அவற்றை பரிசீலித்துவிட்டு பிறகு முடிவெடுக்கிறேன்" என மகிழ்ச்சியோடு வெளியேறினார். போகுமுன் ராகவேந்த்ரர் கையால் பிரசாதம் பெற்றார் மன்றோ. ஆவணங்கள் இருந்தன. மந்த்ராலயம் மடத்திற்கே சொந்தம் அரசாங்கம் தலையிடகூடாது என மன்றோ ஆணை பிறப்பித்தார். பிறகு குருவருளால் மன்றோ தென் மாநிலங்களுக்கு கவர்னர் ஆனார். இன்றும் குதிரை மேல் சென்னையில் கிழக்கு நோக்கி காட்சியளிக்கிறார்.
மகானும் மன்றோவும் பேசியது எவர் கண்ணிலும் படவில்லை எவர் காதிலும் விழவில்லை. ஆனால் இது நடந்தது உண்மை என மன்றோ வெளியிட்ட அரசாங்க அதிகார செய்தி வெளிவந்தது. கீழே அதன் நகல் கொடுக்கப்பட்டுள்ளது. படித்து மகிழவும். |
the Gazette is listed below. |


No comments:
Post a Comment