Friday, July 4, 2025

Lalita sahasranam 10 to 20 in tamil

ஸ்ரீ  லலிதா ஸஹஸ்ரநாமம்   -  நங்கநல்லூர்  J K SIVAN

நாமங்கள்:  10- 20

मनोरूपेक्षु-कोदण्डा पञ्चतन्मात्र-सायका ।
निजारुण-प्रभापूर-मज्जद्ब्रह्माण्ड-मण्डला ॥ ३॥

Mano Rupeshu Kodanda Pancha than mathra sayaka  
Nijaruna prabha poora majjath brahmanda mandala

மநோரூபேக்ஷு கோதண்டா  பஞ்சதந்மாத்ரஸாயகா |
 நிஜாருண ப்ரபாபூர மஜ்ஜத் ப்ரஹ்மாண்ட மண்டலா || 3

चम्पकाशोक-पुन्नाग-सौगन्धिक-लसत्कचा ।  
कुरुविन्दमणि-श्रेणी-कनत्कोटीर-मण्डिता ॥ ४॥

Champakasoka – punnaga-sowgandhika-lasath kacha
 Kuru vinda mani – sreni-kanath kotira manditha

சம்பகாசோகபுந்நாக ஸௌகந்திகலஸத்கசா | 
குருவிந்தமணி ச்ரேணீகநத்  கோடீரமண்டிதா || 4

अष्टमीचन्द्र-विभ्राज-दलिकस्थल-शोभिता ।
मुखचन्द्र-कलङ्काभ-मृगनाभि-विशेषका ॥ ५॥

Ashtami Chandra vibhraja – dhalika sthala shobhitha
Muka Chandra kalankabha mriganabhi viseshaka

அஷ்டமீசந்த்ர விப்ராஜ  தளிகஸ்தல சோபிதா |
முகசந்த்ர களங்காப ம்ருக நாபி விசேஷகா || 5

वदनस्मर-माङ्गल्य-गृहतोरण-चिल्लिका ।
वक्त्रलक्ष्मी-परीवाह-चलन्मीनाभ-लोचना ॥ ६॥

Vadana smara mangalya griha thorana chillaka
Vakthra lakshmi –parivaha-chalan meenabha lochana

வதநஸ்மரமாங்கல்யக்ருஹதோரணசில்லிகா |
வக்த்ரலக்ஷ்மீபரீவாஹசலந்மீநாப லோசநா || 6

नवचम्पक-पुष्पाभ-नासादण्ड-विराजिता ।
ताराकान्ति-तिरस्कारि-नासाभरण-भासुरा ॥ ७॥

Nava champaka –pushpabha-nasa dhanda virajitha
Thara kanthi thiraskari nasabharana bhasura

நவசம்பக புஷ்பாப நாஸாதண்ட விராஜிதா |
தாராகாந்திதிரஸ்காரிநாஸாபரண பாஸுரா || 7


 ஸ்ரீ லலிதாம்பிகையின் நாமங்கள்  அர்த்தம்:  10-20

* 10 *  मनोरूपेक्षुकोदण्डा -  மநோரூபேக்ஷு கோதண்டா  -
அவள் கையில் இருக்கும்  கரும்பு வில் என்ன உணர்த்துகிறது?  . அவள் இனிய மனத்தை தான்  குறிப்பிடுகிறது. பக்தர்களை அன்போடு ரட்சிக்கும் தாயல்லவா?   அதனால் ஒரு இடது கையில் கரும்பு வில். நல்லவர்க்கு கரும்பு.  அதுவே  தீயோர்க்கு  இரும்பு !

* 11 *  पञ्चतन्मात्रसायका -பஞ்சதந்மாத்ரஸாயகா -
தன்மாத்திரைகள் ஐந்து என்ன தெரியுமா? ஐம்புலன்களினால் நான்  அனுபவிப்பது.
 தொடுவது, நுகர்வது, கேட்பது, ருசிப்பது,  காண்பது. இவற்றை அவள் அளித்த, மெய், வாய் கண் மூக்கு செவி எனும் இந்திரியங்களால் உணர்கிறோம். இவை ஐந்தும் ஐந்து வில்லாக  ஏந்தியவள் . அவளின்றி நாம் ஏதும் செய்ய இயலாதவர்கள் என்று பொருள் தருகிறது அல்லவா?

 12 * निजारुणप्रभापूरमज्जद्ब्रह्माण्डमण्डला - நிஜாருண ப்ரபாபூர மஜ்ஜத்  ப்ரஹ்மாண்ட மண்டலா -  
 உதய சூரியனை கண்டு ஆனந்தித்ததுண்டா? செக்கச்செவேலென கிழக்கே, பெரிய  உருண்டை யாக, இன்னொரு  உலகமோ என்று வியக்க வைக்கும் செந்நிறம் அம்பாளுடையது. அதில் இந்த புவனமே அடக்கம்., எல்லா மண்டலங்களுமே  என்கிறார் ஹயக்ரீவர் அகஸ்தியருக்கு.

* 13 *  चम्पकाशोकपुन्नागसौगन्धिकलसत्कचा -சம்பகாசோக புந்நாக ஸௌகந்திகலஸத் கசா   - 
அம்பாள் தனது சிரசில் என்னென்ன மலர்களை சூடிக்கொண்டிருக்கிறாள் என்று ஹயக்ரீவர் அறிவார் அல்லவா?.  சொல்கிறார் அகஸ்தியருக்கும்  நமக்கும். "செண்பகம், புன்னாகம், சௌகந்திகா, (இந்த நறுமண மலரைத் தேடிக்கொண்டு தான் பீமன் விண்ணுலகு சென்று வழியில் ஹனுமான் வாலை நகர்த்தமுடியாமல் தவித்தான்)

* 14 * कुरुविन्दमणिश्रेणीकनत्कोटीरमण्डिता -குருவிந்தமணி  ச்ரேணீகநத் கோடீரமண்டிதா -  
ஆஹா,   வரிசை வரிசையாக பல வித வர்ணங்களில் கண்ணைப்பறிக்கும் நவரத்ன ஈடற்ற மணிகள் பதித்த பத்ம ராக, வைர வைடூர்ய, கோமேதக, மாணிக்கம் , முத்து, பவழ  மணி மகுடம் தரித்திருக்
கிறாள் அன்னை ஸ்ரீ லலிதாம்பிகை.  குருவிந்தமணியைத்தான்  குந்துமணி என்று பிள்ளையாருக்கு கண்ணாக  வைத்து விநாயக சதுர்த்தியில்  களிமண் பிள்ளையார் வாங்குகிறோம். சிவப்பில் கருப்பு புள்ளி  அழகோ அழகு.

 * 15 * अष्टमीचन्द्रविभ्राजदलिकस्थलशोभिता -அஷ்டமீசந்த்ர விப்ராஜ தளிகஸ்தல சோபிதா -   
அஷ்டமி அன்று ராத்திரி  சந்திரன் கண்டு களித்ததுண்டா?ஒருநாள்  மொட்டைமாடியில் நின்று ரசித்தால்  தெரியும்.  அந்தமாதிரி  ஒளியுள்ள, பூரண காந்தியான நெற்றிஅவள் முக லாவண்யத் திற்கு எடுப்பாக, பொருத்தமாக இருப்பவள்.

* 16 *मुखचन्द्रकलङ्काभमृगनाभिविशेषका - முகசந்த்ர களங்காப ம்ருக நாபி விசேஷகா --  
எவ்வளவு விசாலமான அழகிய சந்திரன் போன்ற நெற்றி. அதில் அழகு சேர்க்கும்  கஸ்தூரி திலகம்,  ஹயக்ரீவர் அது எப்படி இருக்கிறது என்று ஒரு உதாரணம் தருகிறார். நான்  மேலே சொன்ன சந்திரனில் ஒரு கருப்பு நிழல் தெரியுமே அது போல , என்கிறார்.  சிலர்  அதை பாட்டி உட்கார்ந்து தோசைக்கு  மாவு அரைக்கிறாள் என்பார்கள், சிலர் முயல் என்பார்கள், சந்தாமா, அம்புலிமா,  பத்ரிகை இந்த முயல்சின்னத்தை பிரபலமாக்கியது. 
 
* 17 * वदनस्मरमाङ्गल्यगृहतोरणचिल्लिका -வதநஸ்மரமாங்கல்ய க்ருஹதோரணசில்லிகா --  
இதோ அழகாக இருக்கிறதே  இது தான் மன்மதன் வசிக்கும் இடமா  என்று சந்தேகம் வருகிறதா?   இல்லை, அத

No comments:

Post a Comment