Friday, May 2, 2025

Sri gurukrupa vilasam - charcha on dharma

*Continuation from yesterday's posting..*
 
*Source:ஸ்ரீ குருகிருபா விலாஸம்*
 
தர்ம விஷயமாகவும் வீண் சர்ச்சை செய்வதில் ஸ்ரீமத் ஆசார்யாரவர்களுக்கு திருப்தி கிடையாது. ஏதாவது ஒரு விஷயத்தில் அது எப்படி இது எப்படி என்று பொதுவாகக் கேட்டால் அவர்கள் பதில் சொல்வது கிடையாது. அப்படியல்லாமல் ஒரு குறிப்பிட்ட ஸந்தர்ப்பத்தில், தான் எப்படி நடந்துகொள்ள வேண்டுமென்று ஒரு சிஷ்யன் கேட்டால், தம்முடைய உபதேசப்படி அவன் நடப்பானென்று அவர்களுக்குத் தோன்றினால் மாத்திரம் அவனுக்குத் தக்கபடி உபதேசம் செய்வார்கள். ஆனால் அவ்வுபதேசம் அவனுக்கு மாத்திரம்தான். இன்னொரு சிஷ்யன் அதே ஸந்தர்ப்பங்களோ அதே யோக்கியதையோ தனக்கு இருப்பதாக நினைத்துக்கொண்டு அதேமாதிரி தானும் நடக்கலாமாவென்று கேட்டுவிட்டால், அநேகமாய் கூடாது என்றே பதில் வரும். இவனுக்குத் தக்கபடி வேறு உபதேசம் கிடைக்கும். சிஷ்யர்கள் தங்கள் தங்களுக்குக் கிடைத்த உபதேசங்களை ஒருவருக்கொருவர் சொல்லிக்கொண்டு சரிபார்த்துக் கொள்வது சரியில்லையென்றும் சொல்வார்கள். ஆகையால் ஒவ்வொருவனுக்கும் அவன் எப்படி நடந்துகொள்ள வேண்டுமென்ற உபதேசமே பிரயோஜனமுள்ளதென்றும் எல்லோருக்கும் பொதுவாக உபயோகப்படக் கூடிய உபதேசம்
ஒருவருக்கொருவர் சொல்லிக்கொண்டு கொள்வது சரியில்லையென்றும் சொல்வார்கள். ஆகையால் ஒவ்வொருவனுக்கும் அவன் எப்படி நடந்துகொள்ள வேண்டுமென்ற உபதேசமே பிரயோஜனமுள்ளதென்றும் எல்லோருக்கும் பொதுவாக உபயோகப்படக் கூடிய உபதேசம் யாதொன்றும் கிடையாதென்றும் அவர்களின் அபிப்பிராயம். இதே காரணத்தினால் மத விஷயமாக பொதுஜனங்களை உத்தேசித்து உபந்யாஸம் செய்வது என்பதில் அவர்களுக்கு ஒருநாளும் திருப்தி கிடையாது. அதிலிருந்து சொல்லுகிறவருக்காவது கேட்கிறவர்களுக்காவது எவ்வித பிரயோஜனமும் கிடையாது என்பதே அவர்களின் தீர்மானம். 
 
*To be continued.*

No comments:

Post a Comment