ॐ श्री गुरुभ्यो नमः।
सर्वेभ्यः सुप्रभातं नमस्काराः च। அனைவர்க்கும் நற்காலையும், வணக்கங்களும்!
* ஸரஸ்வதி பூஜையானது சரத்காலத்தில் வருகிறது. "ஶரத்" காலத்தில் நிகழ்வதால் தான் இந்த நவராத்ரிக்கே " ஶாரத நவராத்ரி" என்று பெயர் ஏற்பட்டிருக்கிறது.
* "ஶாரதா" என்ற பெயர் ஸரஸ்வதி தேவிக்கும் ஏற்பட்டிருக்கிறது. காஷ்மீரத்தில் பண்டிதர்கள் அதிகம். அங்கே இப்படி வித்வத் கோஷ்டி நிறைய இருந்ததற்குக் காரணமே, வாக்தேவியான ஸரஸ்வதி ஆராதனை காஷ்மீர மண்டலத்தில் மிக அதிகமாக இருந்தது தான். அங்கே "ஶாரதா பீடம்" என்றே ஒன்று இருந்தது.
* நம் தமிழ்நாட்டில், தொண்டை மண்டலத்தில் இருக்கிற காஞ்சிப் பகுதிக்கும் காஷ்மீர மண்டலம் என்ற ஒரு பெயர் இருந்திருக்கிறது. வடக்கே கிருஷ்ணன் அவதரித்த மதுரை இருந்தால், தெற்கே மீனாக்ஷி அவதரித்த மதுரை இருக்கிறது.
* அங்கே ஒரு பாடலிபுத்ரம் இருப்பது போலவே, இங்கேயும் நடுநாட்டிலே ஒரு பாடலிபுத்ரம் உண்டு; அது தான் திருப்பாதிரிப்புலியூர். வடக்கே காசி இருப்பது போல, இங்கும் திருநெல்வேலியில் தென்காசி இருக்கிறது. இம்மாதிரி, காஞ்சி மண்டலமே தக்ஷிண காஷ்மீரம். இங்கே ஸரஸ்வதியின் அருள் விசேஷமாக சான்னித்யம் பெற்றிருக்கிறது என்பதை மூகரும் "ஸாரஸ்வத புருஷகார ஸாம்ராஜ்யே" என்கிறார். ஊமையாக இருந்த இந்த மூகருக்கு சாக்ஷாத் காமாக்ஷியே வாக்தேவியாக வந்து அனுகிரஹித்த விசேஷத்தால் தான் அவர் மஹா கவியானார்.
* நம் ஆதி ஆசார்யாள் காஞ்சிபுரத்தில் சகல கலைகளிலும் தம் ஞானத்தைக் காட்டி ஸர்வஞ பீடம் ஏறினார். இங்கே ஸ்தாபித்த (காமகோடி பீடம்) மடத்துக்கு "ஶாரதா மடம்" என்றே பெயரிட்டார். இதெல்லாம் காஞ்சிபுரத்துக்கும், ஸரஸ்வதிக்கும் இருக்கப்பட்ட விசேஷமான சம்பந்தத்தைக் காட்டுகின்றன.
* ஜபமாலையும், ஏட்டுச்சுவடியும் ஞானத்தைத் தெரிவிக்கிற அடையாளங்கள் என்று எல்லாருக்கும் தெரியும். பரம ஞான மூர்த்திகளான தக்ஷிணாமூர்த்தி, ஸரஸ்வதி தேவி இருவர் கைகளிலும் இவற்றைக் காணலாம்.
* ஏட்டுச்சுவடி வித்யையைக் குறிப்பது. "வித்யை" என்றால் படிப்பு என்று மட்டும் அர்த்தம் பண்ணிக்கொண்டு, இப்போது இருக்கிற படிப்பு முறையைப் பார்த்தால், வித்யை வேறு, ஞானம் வேறு என்றே தோன்றுகிறது. வித்யை தான் ஞானம் என்கிற பழைய முறை போய்விட்டது. முன்பெல்லாம் சகல வித்யைகளும் பரமாத்மாவைக் காட்டிக் கொடுக்கவே ஏற்பட்டிருந்தன.
* திருவள்ளுவரும், பரமேஸ்வரனைப் பாதபூஜை பண்ணவைக்காத ஒரு படிப்பினால் என்ன பயன் என்று கேட்கிறார்:
"கற்றதனால் ஆயபயன் என்கொல் வால்அறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்?"
* அஹங்காரம் எல்லாம் அடிபட்டுப்போய் பரமாத்ம வஸ்துவுடன் சேருகிற ஞானத்தைத் தரவே சகல வித்யைகளும் ஆதியில் ஏற்பட்டிருந்தன. மற்ற அஹங்காரங்கள் ஒரு பக்கம் இருக்க, "நாம் வித்வான்" என்பதாக படிப்பினாலேயே ஒரு பெரிய அஹம்பாவம் வந்துவிடும். இதனால் தான், நம் பூர்விகர்கள் வித்தையோடு, விநயத்தையும் சேர்த்துச் சேர்த்துச் சொன்னார்கள்: "வித்யா விநய ஸம்பன்னே" [विद्या विनय सम्पन्ने].
* இப்போது படிப்பு எல்லாம் லௌகீகத்துக்குத் தான் என்று ஆகிவிட்டது. பலவிதமான வித்யைகள், ஸயன்ஸுகள் ஆகியவற்றைத் தெரிந்துகொண்டு வெகு ஸாமர்த்தியமாக பாபங்களைப் பண்ணிப் பிறரிடமிருந்து தப்பித்துக்கொண்டு பெருமைப்படுகிறோம். இப்போதைய படிப்பினால் வருகிற விஷய அறிவை ஞானம் என்று சொல்வதானால், "அஞ்ஞானம் தான் மோக்ஷ ஸாதனம்" என்று கூடச் சொல்லிவிடுவேன்.
* ஸரஸ்வதி, தக்ஷிணாமூர்த்தி இருவரும் அக்ஷமாலை, சுவடி இவற்றோடு சந்திர கலையைத் தலையில் தரித்திருக்கிரார்கள். அதற்கு பெயரே கலை - எது வளர்கிறதோ அது கலை. வித்யைக்கு முடிவே இல்லை. " கற்றது கை மண்ணளவு, கல்லாதது உலகளவு" என்று ஸரஸ்வதியே விநயத்துடன் நினைக்கிறாளாம். இவள் தலையில் உள்ளது மூன்றாம் பிறை; அது பூரண சந்திரனாக வளரவேண்டும்.
* ஸரஸ்வதிக்கும் தட்சிணாமூர்த்தியைப் போலவே நெற்றிக்கண் உண்டு. ஆசை பஸ்மமானல் ஒழிய ஞானம் இல்லை. அதற்காகத் தான் காமனை எரித்த நெற்றிக்கண் இவளிடத்திலும் இருக்கிறது. இவ்விரண்டு தெய்வங்களுடமும் ஜடா மகுடம் இருக்கிறது; இதுவும் ஞானிகளின் அடையாளம்.
* இருவருமே வெள்ளை வெளேரென்று இருக்கிறார்கள்; ஏழு வர்ணங்களில் சேராத வெள்ளை, பரம நிர்மலமான சுத்த ஸத்வ நிலையைக் குறிப்பது. இந்த வெள்ளையும் கூட இன்னும் நிர்மலமாக, தன் வழியாக ஒளி ஊடுருவிச் செல்கிற அளவுக்கு (transparent) தெளிந்துவிடுகிறபோது ஸ்படிகம் ஆகிறது. இருவருமே இப்படி ஸ்படிகத்தினால் ஆன அக்ஷமாலையைத் தான் வைத்திருக்கிறார்கள் - வெள்ளை நிறம், சந்திர கலை, ஸ்படிக மாலை ஆகிய இவற்றை நினைத்தாலே நமக்கு ஒரு தூய்மை, தாப சாந்தி, அமைதி எல்லாம் உண்டாகின்றன.
Today's Stotra Samarpanam:
தனம்தரும் கல்விதரும் ஒருநாளும் தளர்வறியா
மனம்தரும் தெய்வவடிவம்தரும் நெஞ்சில் வஞ்சமில்லா
இனம்தரும் நல்லனவெல்லாம்தரும் அன்பர்யென்பவர்க்கே
கனம்தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே!
On this auspicious 9th day of Navarātri, which is also Sri Sarasvati Pooja, let's realise that the purpose of our education is to remain humble always and continuously seek for the Brahma Gnāna (eternal real knowledge) and do submit ourselves to the lotus feet of Jaganmātā svarūpa Jagadguru!
प्रदोष शङ्कर। प्रत्यक्ष शङ्कर।।
Pradosha Shankara। Pratyaksha Shankara।। 🙏🙏🙏🙏
No comments:
Post a Comment