Friday, October 11, 2024

Stitha pragya

கீதாசாரம்-அத்தியாயம் 2 தொடர்ச்சி

ப்ரஜஹாதி யதா காமான் ஸர்வான் பார்த்த மனோகதான் |
ஆத்மன்யைவாத்மனா துஷ்ட: ஸ்தித ப்ரக்ஞஸ்ததோச்யதே||

மனதில் தோன்றும் எல்லா ஆசைகளையும் அறவே துறக்கிறானோ மேலும் ஆத்மாவிலேயே ஆனந்தம் கொண்டவனாக  இருக்கிறானோ அவனே ஸ்தித ஸ்தித ப்ரக்ஞன் எனப்படுகிறான்.

இதன் பொருள் என்னவென்றால், துஷ்ட: என்றால் திருப்தி அடைந்தவன் என்று பொருள். எப்போது மனிதன் திருப்திடயடைந்தவனாக  ஆகிறான்? உதாரணமாக பிள்ளை வேண்டும் என்று  ஆசையுள்ளவன் பிள்ளை பிறந்தபோது ஆனந்தம் அடைகிறான் . அது எது வரையில்?வேறு எந்த ஆசையும் வராமல் இருக்கும் வரைதானே?இது எதைக்குறிக்கிறது என்றால்  ஆனந்தம் என்பது ஆசை பூர்த்தி ஆனதும் வருவது அல்ல ஆசையே இல்லாமல் இருக்கும்போது வருவதுதான் என்று தெரிகிறதல்லவா?

 அதனால் ஆனந்தமாக் இருக்க வேண்டுமானால் ஒரு இஷ்டம் பூர்த்தி ஆனதும் இன்னொன்று வராமல் தடுப்பதுதான். ஒரு ஆசைக்கும் இன்னொன்றிற்கும் உள்ள இடைவெளியே ஆனந்தத்தைத் தருகிறது.
ஸ்வாமி சின்மயானந்தர் இதை ஒரு சமன்பாடு (equation)மூலம் தெளிவு படுத்துகிறார்
  
Number of desires fulfilled (நிறைவடைந்த ஆசைகள் (1)
------------------------------------    =  the quotient of happiness.(ஆனந்தத்தின் அளவு)(3)
Number of desires entertained( மனதில் எழும் ஆசைகள்)(2)
.(2) =0 ஆனால் (1)=~ எந்த எண்ணையும் 0 வால்வகுத்தால் கிடைப்பது ~ அதாவது அனந்தம், அளவில்லாதது. அதனால் மனதில ஆசைகளே இல்லை என்றால் கிடைக்கும் ஆனந்தம் அளவில்லாதது. இதை எளிதில் புரிந்துகொள்ளலாம் .

 ஒரு குழந்தை ஆனந்த்மாகா இருக்கிறது ஏனென்றால் அதற்கு ஆசைகளே இல்லை. எப்போது ஆசைப்பட ஆரம்பிக்கிறதோ அதிலிருந்து ஆனந்தம் குறைய ஆரம்பிக்கிறது.சென்றைய தலைமுறையில் குழந்தைப்பருவம் ஆனந்தமாக இருந்தது. ஏனென்றால் ஆசைகளே இல்லை அல்லது அற்ப ஆசைகள்தான். எளிய வாழ்க்கையில் ஆனந்தம் அடைந்தவர்களாக இருந்தோம். இப்போதைய குழந்தைகளைப் பார்த்தால் ஆசை என்பது குழந்தைப்பருவத்திலேயே  பெற்றோர்களாலேயே அறிமுகப்படுத்தப் படுகிறது. வளர வளர ஆசைகள் நிறைவிற முடியாத அளவில் வளர்கின்றன.குடிசை வாசியானாலும் மாளிகை வாசியானாலும் இது ஒரே மாதிரி உள்ளது. உலகத்திலேயே சிறந்த பணம் படைத்தோரும் ஆசையற்று இருப்பதில்லை.

No comments:

Post a Comment