Monday, October 14, 2024

Kakikeyi's boon - Kamba ramayana

ராமாயணம் --:அயோத்யா காண்டம்
02/05 கைகேயியின் இரண்டு வரங்களும்
தசரதன் புலம்பலும் (01)

** அரக்கர் பாவமும் அல்லவர் இயற்றிய அறமும் *
துரக்க, நல்லருள் துறந்தனள்  தூமொழி மடமான் *
இரக்கம் இன்மை அன்றோ இன்று இவ்வுலகங்கள் இராமன் *
பரக்கும் தொல் புகழ் அமுதினைப் பருகுகின்றதுவே ** (மந்தரை)

மான் போன்று பிறரை எளிதில் கவரும் தன்மையளான கைகேயி தூய மனத்தோடு மன்னரோடும் ராமனோடும் பேசிப் பழகி வந்தவள். கூனியின் வஞ்சகச் சொற்களால் மனம் மாறி னாள்.  ராமனை தன் மகனாகவே நினைத்தவளுக்கு அவனிட மிருந்த கருணையும் இரக்கமும் மாறியது.‌ அரக்கர்கள் செய்த பாவமும், நல்லோர்கள் செய்த புண்ணியமும் கைகேயியின் மனத்தைக கலக்கி இரக்கமற்றவளாக ஆக்கியதாம். அது மட்டுமன்றி உலகினர் அனைவரும் ராமனின் அழியாப் புகழாம் அமிழ்தனைப் பருகிப் பருகி மகிழச் செய்கிறதாம்.

** எனை உவந்தனை,  இனிய என் மகனுக்கும்,  அனையான்*
புனையும் நீள்முடி பெறும்படி புகலுதி என்றான் *
மாழை ஒண் கணி உரைசெயக் கேட்ட மந்தரை என் *
தோழி வல்லள்,  என் துணை வல்லள் என்று அடி தொழுதாள் *
தாழும் என் இனிஃ? என் உரை தலை நிற்பின், உலகம் *
ஏழும் ஏழும் உன் ஒரு பெருமகற்கு ஆக்குவேன் என்றாள் ** 

கைகேயி "கூனி! உனக்கு என்னிடமும், என் மகனாகிய பரதனிடமும் அளவற்ற அன்பு.  என் மகன் பரதன் சிமாஹா சனத்தில் அமர்ந்து ராஜ்யத்தை ஆட்சி செய்வதற்கு தக்க உபாயம் என்ன என்பதை  புகலுவாய்.  கூனி மகிழ்வுற்று ராணியின் கால்களில் விழுந்து வணங்கி கூறுவாள் --
கைகேயி!  இனி உனக்கு தாழ்ச்சியே கிடையாது.  என் சொற்படி டி நடந்தால் ஏழு உலகங்களையும் பரதன் ஆள்வதற்கு உரிய வாய்ப்பினைப் பெறுவான்."
கூனி  ---" முன்பு தேவர்களுக்கும் அஸுரர்களு க்கும் பெரும்போர் நிகழ்ந்தது.‌‌. இந்திரனுக்கு உதவ தசரதர் பல அரசர்களுடன் உன்னையும் அழைத்துக் கொண்டு வைஜயந்தம் என்னும் நகருக்குச் சென்றார்.‌‌ சம்பரன் என்று ப்ரசித்தி பெற்ற திமித்வஜன் இந்திரனோடு பெரும் போர் செய்து வந்தான். நீ ரதத்தைச்செலுத்த, தசரதர் அஸுரர்களோடு கடுமையாக பெரும் போர் நிகழ்த்தினார்.‌ அஸுர்களால் தசரதருக்கு பலத்த அடி ஏற்பட்டது.‌‌ அப்பொழுது நீ ரதத்தை வேறிடத்திற்குச் செலுத்தி 
தசரதரை மேலும் அடிபட்டால் காப்பாற்றினாய்.‌ மகிந்த அரசர்
உனக்கு இரண்டு வரங்களை அளித்தார்.  அவ்வரங்களை நீ
வேண்டும் போது பெற்றுக் கொள்வதாக சொல்ல அவரும்
ஸம்மதித்தார்.  இவ்வரங்களை இப்பொழுது மன்னரிடம் கேள். ஒன்று பரதனுக்கு முடிசூட்ட வேண்டும்.‌‌ மற்றொன்று பதி னான்கு ஆண்டுகள் ராமன் நாட்டைத் துறந்து கானகம் செல்ல
 வேண்டும். ‌பதிநான்கு ஆண்டுகளுக்கள் நாட்டு மக்களுக்கு ராமனிடம் இருந்த ஆழ்ந்த அன்புமாறி பரதனின் ஆட்சி உறுதி பெற்று விடும்."  என்றாள்.  

கூனி கைகேயியிடம் யோசனை கூறுவாள் -- நீ அரசனோடு கோபித்துக் கொண்டால், ஒரு தனி அறையில் படுத்துக் கொண்டு, பிடிவாதம் பிடிப்பாயே, அந்த அறையில் அலங்கரித்துக் கொள்ளாது, அழுக்காடை அணிந்து வெறும் தரையில் படுத்துக் கொள்.  நீ எது சொன்னாலும் உடனே செய்யக் காத்திருப்பார்.‌‌ நான் சொன்ன இரண்டு வரங்களைக்
கேள். பரதன் நாட்டுக்கு நிலையான அரசனாகி விடுவான்.
முதலில் நாளை பட்டாபிஷேகத்தை நிறுத்தும்படி செய்.‌"

கைகேயி அரண்மனை ரஹஸ்யத்தை எப்படியோ அறிந்து நமக்கு முன்பே சொல்லி விட்டாளே என ஆச்சரியப்பட்டாள்.
புகழ்ந்தாள்.  கைகேயி தன் வசப்பட்டதை அறிந்து ஸந்தோஷத் தோடு கூனி " கல்யாணி! வெள்ளம் வந்து போன பிறகு ஆற்று க்கு வரும் அணை கட்டுவது இல்லை எனவே விரைந்து அலங்கோலமான வேஷத்துடன் மன்னவனை எதிர்பார்த்திரு"
 என்றாள்.

** உரைத்த கூனியை உவந்தனள் உயிருறத் தழுவி *
நிறைத்த மாமணியாரமும் நிதியமும் நீட்டி *
இரைத்த வேலை சூழ் உலகம் என் ஒரு மகற்கு ஈந்தாய் *
தரைக்கு நாயகன் தாய் இனி நீ எனத் தனியா **

** நன்று சொல்லினை தம்பியை நளிர் முடி சூட்டல் *
துன்று கானத்தில் இராமனைத் துரத்தல் இவ்விரண்டும் *
இன்று எய்தாவெனில் அரசன் முன் என்னுயிர் துறந்து *
பொன்றி நீங்குதல் புரிவெல் யான் போதி நீ என்றாள் ** (மந்தரை)

கைகேயி கூனியை இறுகத் தழுவினாள்.  விலை உயர்ந்த மணிகளும் ரத்தினங்களும் இழைத்த ஆரத்தைச் சூட்டினாள்.
"எனது ஒரே மகனாக பரதனுக்கு கடல் சூழ்ந்த உலகத்தை அளித்தாய் . அவனுக்குப்  பெற்றெடுத்த தாய் நீயே.‌‌ நீ சொன்னபடியே பரதனுக்கு ராஜ கிரீடத்தைச் சூட்டும் படியும்,  ராமனே காட்டிற்குப் பொருத்தும் படியும் வரத்தின் மூலம் கேட்பேன். அவர்  இணங்காது, இவ்விரண்டும் கைகூடாவிடில் அவர் முன்னிலையில் என் உயிரை விட்டு இறந்து ஒழிந்து போவேன். நீ போ "என்று கூறி கோப அறைக்குச் சென்றாள்.

விலைமதிக்க வொண்ணாத முத்துமாலைகளை கழற்றி எறிந்தாள்.  திருமங்கல்யம் போன்ற மங்களாபரணங்களையும் கூட அறுத்தெரிந்தாள் விரிப்பு இல்லாத வெறும் தரையில் படுத்துப் புரண்டாள். "பூ உதிர்ந்ததோர் கொம்பு எனப் புவிமிசைப் புரண்டாள்".  என்றார் கம்பன். வாலமீகியோ இருளில் விண்மீன்கள் மேகங்களால் மறைய பொலிவிழந்த வானம் போன்று கோபத்தினால் இயற்கையான அழகு அழியத் தரையில் கிடந்தாள் என்றார்.

**நவ்வி வீழ்ந்து என நாடகம் துயின்று என்ன *
கவ்வை கூர்தர சானகியாம், கடிகமழ் கமலத்து *
அவ்வை நீங்குமென்று அயோத்தி வந்தடைந்த அம்மடந்தை *
தவ்வையாம், எனக் கிடந்தனள் கைகயன் தனையை ** (சூழ்நிலை)

கோபக்ரஹத்தில் முகத்தில் கோபத்தைத் தேக்கி அழுத கண்ணும் சிந்திய மூக்குமான கைகேயி மூதேவி போன்று இருந்தாளாம்.‌ மணங்கமழும் தாமரை மலரில் வசிக்கும் மஹாலக்ஷ்மியிகிய சீதை ராமனுடன் காட்டுக்கு போகப் போகிறாள் என்பதை அறிந்த மூதேவி அயோத்தி வந்து கைகேயி அறையில் அவளோடு ஒன்றிக் கிடக்கிறாளோ என்னும் படி இருந்தாளாம். ஆனால் கோபக்ரஹமோ அவள் கழற்றி எறிந்த நல்லாபரணங்களால் இரவில்  நட்சத்திரங் களால் ஒளிமிளிரும் வானம் போன்று இருந்ததாம்.

** அடைந்து, அவண் நோக்கி,  அரந்தை என்கொலா வந்து *
தொடர்ந்து? எனத் துயர் கொண்டு சோரும் நெஞ்சன் *
மடந்தையை மானை எடுக்கும் ஆனையே போல் *
தடம் கைகள் கொண்டு தழீஇ எடுக்கலுற்றான் **
** நின்று தொடர்ந்த நெடுங்கை தம்மை நீக்கி *
மின் துவள்கின்றது போல மண்ணில் விழுந்தாள் *
ஒன்றும் இயம்பலள் நீடு உயிர்க்கலுற்றாள் *
மன்றல் அருந் தொடை மன்னன் ஆவி அன்னாள் ** (சூழ்நிலை)

ராமனுக்கு முடி சூட்டுவது என்று உறுதியான விஷயத்தை கைகேயியிற்கு தெரிவிப்பதற்காக மிகுந்த ஆர்வத்துடன்
கைகேயியின் அரண்மனையில் அந்தப்புரத்தில் நுழைந்தார்.
அங்கு அவள் இல்லை. காவலன் கூற கோபக்ரஹத்திற்குச் சென்றார்.‌‌. அங்கு கைகேயி அலங்கோலமாய் வெறும் தரையில் விழுந்து கிடப்பதைக் கண்டு பெரும் துன்பத்திற்கு ஆளானார்.
அருகில் அமர்ந்து அடிபட்ட பெண் யானையை ஆண் யானைத் துதிக்கையால் தடவுவது போல ஆசையோடு இரு கைகளாலும் அணைத்துக்கொண்டு தூக்கினார்.  அவளோ அரசனின் கை களை நீக்கி மின்னல் கொடிபோல் துவண்டு கீழே விழுந்தாள்.

தசரதர் "கைகேயி! எவருக்கும் எவ்வித தீங்கும் செய்யாத நான் இருக்கும் பொழுது நீ வெறும் தரையில் படுக்கலாமா? உனக்கு வியாதி ஏதாவது இருந்தால் சொல். நீ யாரையாவது தண்டிக்க விரும்புகிறாயா? உனக்கு யாராவது கெடுதல் பண்ணினார் களா? நீ உடலை வருத்திக் கொள்ளாதே.  உனக்காக எதையும் செய்யத் தயார். நீ விரும்பியதை உடலையும் உயிரையும் பணயம் வைத்துச் செய்கிறேன். எழுந்திரு.‌ விரும்பியதைச் சொல் . என்றார்.

** கள்ளவிழ்  கோதை கருத்து உணராத மன்னன் *
வெள்ளம் நெடும் சுடர் மின்னின் மின்ன நக்கான் *
உள்ளம் உவந்தது செய்வேன் ஒன்றும் உலோபேன் *
வள்ளல் இராமன் உன் மைந்தன் ஆணை என்றான் **(சூழ்வினை)

** நாஸ்மி விப்ரக்ருதா தேவகேனசித் நாவமானிதா |
அபிப்பிராய: துமே கச்சித் தம் இச்சாமி த்வயாக்ருதம் ||
தம் உவாச மஹாதேஜா: கைகேயிம் ஈஷத்உத்ஸ்மித: |
காமீ ஹஸ்தேன ஸங்க்ருஹ்ய மூர்தஜேஷுபிவிஸ்திதாம் ||
அவலிப்தே நஜானாஸி த்வத்த: ப்ரியதமா மம |
மனுஜ: மனுஜவ்யாக்ராத் ராமாத் அன்ய: நவித்யதே ||
யம் முஹூர்தம் அபச்யன்து நஜீவேயம் அஹம் த்ருவம் |
தேந ராமேன கைகேயி! சபேதே வசனக்ரியாம் || **

கைகேயி " நான் எவராலும் அவமதிக்கப்படவில்லை. நீர்? ஏற்கனவே ப்ரதிஜ்ஞை செய்ததை இப்போது விரும்புகிறேன்" என்றாள்.‌‌ கைகேயின் மனதை அறியாத தசரதன் "நீயோ எனக்கு பிரியமானவள். நானும் உனக்கு மிக மிகப் பிரியமானவன். மனிதர்கள் மேம்பட்டவன் ராமன்.‌அவனே எனக்கு பிரியமான வன். அவனை ஒரு கணம் பார்க்காவிட்டால் எனக்கு உயிர் தரிக்காது.‌ அத்தகு உன் மகன் ராமன் மீது ஆணையிட்டுச் சொல்கிறேன்.‌ நான் உன் சொற்படி நடப்பேன்" என்று கூறினான்

கைகேயிக்கு சிறிது ஐயம்.‌ எந்த ராமனை காட்டுக்கு அனுப்பக் கேட்கப் போகிறோமோ அவனிடமுள்ள உள்ள தனது அன்பை உறுதிப்படுத்திக்கொண்டு அவன் மீதே ஆணையிடுகிறார். எனவே என் செய்வாரோ?  எனும் ஐயத்தினால் சாட்சிகளாக தேவதைகளை அழைத்துப் பேசுகிறாள்.‌ "அக்னி தேவனை முன்னிட்ட முப்பத்தி முக்கோடி  தேவதைகளே!  ராமன் மீது ஆணையிட்டு வரங்களைத் தருவதாகப் பேசுகிறார். பேச்சு மீண்டும் வழுவாக இருக்க நீங்கள் எல்லோரும் ஸாக்ஷிகள்" .‌‌. 

கைகேயி " ஏற்கனவே சம்பராசுர யுத்தத்தில் இருமுறை தன்னைக் காப்பாற்றியதற்காகக் கொடுத்த வரங்களை வேண்டும்போது வாங்கிக்கொள்வதாக அடகு வைத்திருந்தேன் அவற்றியே இப்போது கேட்கின்றேன். உறுதி மொழியை மீறி வரங்களைக் கொடாவிடில் அவமதிக்கப்பட்ட நான் இப்பொழுதே உயிரைத் துறப்பேன்" என்றாள்.‌‌

**அபிஷேகஸமாரம்ப: ராகவஸ்ய உபகல்பித: |
அனே ஸவை அபிஷுகேந பரத: மே அபிஷிசாயதாம் ||
நவ பஞ்ச சவர்ஷாணி தண்டகாரண்யம் ஆச்ரித: |
சீராஜின ஜடாதாரீ ராம: பவது தாபஸ: || **

கைகேயி "ராமனுடைய  பட்டாபிஷேகத்திற்காக சேமிக்கப்பட்ட ஸாமக்ரிகளைக்கொண்டே என் மகன் பரதனுக்கு பட்டாபி ஷேகம் செய்யுங்கள். ராமனோ மர உரியையும்,  மான் தோலை யும் ஆடையாகக் கொண்டு ஒன்பது ஆண்டுகள் மேலும் ஐந்து ஆண்டுகள் தவமுனிவனாக வாழட்டும்.  பரதன் இளவரசனாய் நாட்டை ஆளட்டும்.  இதுவே என் ஆசை. கொடுத்த வாக்கை காப்பாற்றி உங்கள் பண்பையும் குலப்பெருமையும் காத்த ருளும். " என்றாள்.

No comments:

Post a Comment