Thursday, May 9, 2024

Which one first? - Kasi,Gaya or Prayagraj

*இன்று ஒரு தகவல் எண்:2103*
தேவப்பிரயாகையில் (அலகாபாத்) கங்கை யமுனை சரஸ்வதி நதிகள் சங்கமிக்கும் திரிவேணியில் நீராடிய பின் வேணிதானம், கரும காரியம் செய்ய வேண்டும். அதன் பின் காசியில் உள்ள கங்கையில் நீராடி சிரார்த்தம் மற்றும் தானம் செய்து காசி விஸ்வநாதரை வழிபட வேண்டும்.பிறகு தம்பதியராக கயா செல்ல வேண்டும். அங்கு முன்னோர்க்கு திதிதர்ப்பணம் செய்து பிண்டம் இட்டு வழிபட வேண்டும். இதைத் தான் பிரயாகையில் *முண்டம்* காசியில் *தண்டம்* கயாவில் *பிண்டம்* என்கிறார்கள். அதாவது முதலில் *பிரயாகை* யில் பாவம் களைதல், *காசி* யில் பாவம் அண்டாமல் தடுத்தல், பின்னர்
*கயா* வில் பாவம் நீங்கி கடவுளோடு இணைதல் என்கிறார்கள்.
*திருச்சிற்றம்பலம்*

No comments:

Post a Comment