Saturday, April 13, 2024

Sraaddham - do's

*ஸ்ரார்த்த விதிமுறைகள் தொடர்ச்சி*

*#சில_குறிப்புகள்*

1.சிராத்தம் நடக்கும் போதும், சமையல் செய்யும் போதும், யாரும் (சாப்பிட வரும் பிராம்ஹணாள் உட்பட) அதிகப் பேச்சுக்களோ, வம்பு, அரசியல் போன்ற விவாதங்களில் ஈடுபடுவதோ கூடாது.

2.சங்கீதம், பக்தி கேசட்டுகளைக் கூட ஓட விடக்கூடாது. இவற்றையெல்லாம் கேட்டால் பித்ருக்கள் திரும்பி போய்விடுவார்களாம்.

3 .வீட்டில் சமையல் செய்து சிராத்தம் செய்ய வேண்டும். கர்த்தாவின் தர்மபத்தினி தளிகை செய்வது உத்தமம்.

4.ஸ்ரார்த்த முதல் நாள் எந்த பட்க்ஷண்மும் தயார் செய்து வைத்து, ஸ்ரார்த்ததில் உபயோகிக்கக் கூடாது.

5.சிலர் சமாராதனை சாப்பாடாக, தேங்காய் முதலியவைகளை சேர்த்து செய்வார்கள். இதுவும் சரிதான். ஏனெனில் சாப்பிடுபவர்கள் திருப்தியாக சாப்பிட இதில் வாய்ப்பு அதிகம்.

திருப்தியாக ப்ராம்ஹணர்க்ள சாப்பிட வேண்டுமென்பது மிக முக்கியம் அல்லவா? எங்காத்து வழக்கம் என்று முரண் பிடிக்காமல் தளிகை ருசியாக சமாராதனை ரூபத்தில் தயாரித்தால் தவறில்லை.

6.அதற்காக ஸ்ரார்த்ததில் விலக்கப்படவேண்டிய காய்கறிகளையும், பொருட்களையும் விலக்காமல் இருக்கக் கூடாது.

7.மொத்தத்தில் தளிகை நன்கு சாப்பிடும்படியாக இருக்க வேண்டும். அவரவர்கள் இல்லத்து பெரியோர்களின் ஒப்புதலோடு சமாராதனை சாப்பாடு ஏற்புபுடையதே என்பது அடியேனுடைய கருத்து.

8.தயாரிக்கும் மற்றும் பரிமாறும் ஸ்த்ரீகள் மிகவும் மடியாகவும், மடிசார் புடவையுடன் தான் இருக்க வேண்டும்.

9.தூய்மையிலாத பந்துக்கள் ஸ்ராத்த இடத்தில் இருக்கக் கூடாது.

10.தளிகை செய்து எல்லாம் ஆறி அலர்ந்து போயிருக்கக் கூடாது. சுடச்சுட ருசியாக சாப்பிடும்படி பரிமாறுவது அவசியம்.

11.தான் சந்தோஷமிக்கவனாக, ஸ்ரார்த்த ப்ராஹ்மணாளை சந்தோஷப்படுத்தியவாறே மெதுமெதுவாக அவர்கள் சாப்பிடுமாறு பரிமாறுவது முக்கியம்.

12.பதார்த்தங்களை அவர்கள் சமீபம் கொண்டு சென்று இந்த அத்ருஸம் ருசியாக செய்யப்பட்டுள்ளது;

இந்த வடை சூடாக உள்ளது; இன்னுமொன்று போட்டுக்கோங்கோ என்று பவ்யமாகக் கேட்டு திருப்தியாக சாப்பிடும்படி அவர்களை உற்சாகப்படுத்த வேண்டும். (அதற்காக அவர்கள் வேண்டாம் என்ற சைகை காட்டியபோதும், அவர்கள் மீது திணிக்கக் கூடாது. அவர்களை ச்ரமப்படுத்தக் கூடாது).

13.தளிகையில் கோதுமை, உளுந்து, பயறு, எண்ணையில் செய்யப்பட்ட பதார்த்தங்கள், இவைகளை கட்டாயம் ஏதாவது ஒரு வடிவத்தில் சேர்க்க வேண்டும்.

14.கர்த்தா, சகோதரர்கள், பெண், புத்திர பௌத்திரர்கள், தௌஹித்திரர்கள், ஸபிண்ட ஞாதிகள், பித்ரு சேஷம் சாப்பிடலாம்.

15.ஒருவன் தனது மாமனார், மாமா இவர்களுடைய பித்ரு சேஷம் சாப்பிடலாம்.

16.ஸந்தியாவந்தனம் தொடர்ந்து செய்யாதவர்கள் ஸ்ரார்த்த நாள் அன்றாவது த்ரிகால ஸந்தியாவந்தனம் செய்துதான் ஆக வேண்டும்.

17.தளிகை ருசியாக உள்ளதா என்று கர்த்தா சாப்பிடும் ப்ராஹ்மணர்களிடம் வாய் தவறியும் கேட்கக் கூடாது.

18.கருப்பு எள் சாதத்தில் மிகவும் அவசியமான ஒன்று. ராக்ஷஸர்களை விரட்டி பித்ருக்களுக்கு திருப்தி தரக் கூடியது (எள்ளை ஆள்காட்டி விரலாலும் கட்டை விரலாலும் சேர்த்து எடுக்கக் கூடாது)

19.பழத்தைத் தவிர மற்றதை வெறும் கையால் பரிமாறக் கூடாது.

20.உப்பை தனியாக பரிமாறக் கூடாது.

21.ஸ்ராத்ததன்று காலையில் சிராத்தம் முடியும் வரயில் கர்த்தாவும் அவரது துணைவியாரும் எதுவும் சாப்பிடக் கூடாது.

22.அன்று மத்தியானம் போஜனமானபின் இரவில் சாப்பிடும் பழக்கம் தவறு.

23.மிக அவசியமெனில், திரவமாக சிறிது உணவு உட்கொள்ளலாம். உடல் நலம் குன்றியவர்களுக்கும் இது பொருந்தும்.

24.மாத்யாஹ்னிகம் செய்த பிறகு, ஸ்ரார்த்த கர்மா ஆரம்பிக்கலாம்.
க்ருஸரம் கொடுப்பதாக இருந்தால், சிராத்தாங்க ஸ்நானத்தை (2-வது ஸ்நானம்) பிறகு தான் செய்ய வேண்டும்.

25.ஸ்ரார்த்தம் அன்று காலை நனைத்து உலர்த்திய மடி வஸ்த்ரத்தைதான் உடுத்த வேண்டும். ஸ்ரார்த்ததில் மடி மிக முக்கியம்.

26.அபிச்ரவணம் சொல்பவர் கிடைக்காவிட்டால், தானே இதிகாச புராணங்கள் பாசுரமோ, ஸ்லோகங்களையோ, சூக்தாதிகளையோ, ப்ராம்ஹணாள் சாப்பிடும்போது சொல்லலாம்.

27.ஸ்ரார்த்த நாளன்று கோபமும், அவசரமும் கூடாது. மணி ஓசை, கோலம் முதலியவை கூடாது.

28.சிராத்தம் ஆரம்பித்து, அவர்கள் சாப்பிட்டு எழுந்திருக்கும் வரையில் கர்த்தா, அந்த ப்ராம்ஹணர்களுடன் பேசுவதையோ, பார்ப்பதையோ தவிர்க்கவும்.

29.இரும்புப் பாத்திரத்தை ஸ்ரார்த்ததில் உபயோகிக்கக் கூடாது.

30.மடிசார் புடவை, கட்டிக்கொண்டு ஸ்ரார்த்தம்  பண்ணுவது மிக உசத்தியானது. மகிமை வாய்ந்தது. அதை நாம் எப்போதும் அணிந்திருக்க வேண்டும். குறைந்தது ஸ்ரார்த்த கர்மா அன்றாவது கட்டிக் கொள்வது அவசியம். அவ்வாறே பஞ்சகச்சமும்.

31.தினசரி செய்யும் ஆத்து பூஜையை சிராத்தம் முடிந்த பிறகு செய்ய வேண்டும்.

*#ஸ்ரார்த்தத்தை_நம்_விருப்பத்திற்குத்_தள்ளிப்_போடக்_கூடாது*.

ஒரு வேளை தீட்டு, ஞாபக மறதி போன்ற காரணங்களினால் உரிய தேதியில் செய்ய முடியாமல் போய்விட்டால், அன்று உபவாசமிருந்து மறுநாள் சிராத்தம் செய்யலாம்.

கர்த்தா ஸ்ரார்த்தத்தையே மறந்துவிட்டு இருந்தால்,

அவருக்கு ஞாபகம் வந்தவுடன் அடுத்து வரக்கூடிய க்ருஷ்ண பக்ஷ அஷ்டமி, ஏகாதசி, அம்மாவாசை, இதில் ஏதாவது ஒரு திதியில் செய்ய வேண்டும்.

ப்ராஜாபத்ய க்ருச்ரம் செய்து ஆரம்பிக்கவேண்டும்.

ஒருவேளை சிராத்தம் செய்பவருக்கு உடல் நலம் குன்றியோ, அல்லது தள்ளாமையோ வந்தால்,

பிறரை விட்டு (மகனாக இருந்தாலும் தோஷமில்லை) ஹோமம் செய்து ஸ்ரார்த்தத்தை நடத்தலாம்.

கயா ஸ்ரார்த்தமும், ப்ரத்யாப்திக ஸ்ரார்த்தமும் சமீப காலமாக ஒரு கருத்து ஆங்காங்கு நிலவி வருகிறது.

கயாவில் ஒரு தடவை சிராத்தம் செய்து விட்டால் வருஷா வருஷம் இனி சிராத்தம் செய்யத் தேவையில்லை என்பதே அது.

*#இது_சுத்த_அபத்தம்*.

*#சாஸ்த்திர_விரோதமானது*.

ஒரு சிறு உதாரணத்தின் மூலமாக இதை புரிந்து கொள்ள முயற்சி செய்வோம்.

ஒரு நாள் பிரமாதமான மிக ருசியான உயர்ந்த விலையில் பலவகைகளுடன் மிகவும் காஸ்ட்லியான விருந்து (பெரிய நக்ஷத்ரஓட்டலாகவும் அது இருக்கலாம்) சாப்பிட்டு விட்டால், மறுநாள் நாம் சாப்பிடாமல் இருந்து விடுகிறோமா?

கயா சிராத்தம் மிக உன்னதமானது. ஜன்மாவில் ஒரு தடவையாவது கயா சிராத்தம் செய்ய வேண்டும்.

ஆனால் அதற்கும் வருஷாவருஷம் செய்யும் ப்ரத்யாப்திக ஸ்ரார்த்ததிற்கும் சம்பந்தம் கிடையாது. இது வேறு. அது வேறு.

*#ஔபாஸன_அக்னி*

ஔபாஸனம் நமக்கு நித்ய கர்மாவாகும்.

ஆனால் இக்காலத்தில் நாம் செய்வதில்லை.

ஸ்ரார்த்தத்தன்று ஔபாஸனம் செய்கின்றோம். ஹிரண்யமாக சிராத்தம் செய்யும்போதும் அல்லது பெரியவரோடு மற்ற தம்பிகள் சேர்ந்து ஒரே ஸ்ரார்த்தமாக செய்யும்போது, ஔபாஸனம் நம்மை விட்டு அறவே விலகிவிட வாய்ப்புள்ளது

கிருஹஸ்தனுக்கு அடையாளமான ஔபாஸனம் விலகி விடாமல பார்த்துக் கொள்ள வேண்டும் அல்லவா?

ஸ்ரார்தம் பார்வணமாகத்தான் (ஹோமத்துடன்) செய்ய வேண்டும்

(பிரம்மச்சாரி கர்த்தாவாக இருந்தால் ஔபாஸனத்திற்கு பதிலாக ஸமிதாதானம் சொல்லப்பட்டுள்ளது).

*#நம்பிக்கை*

அவரவர்கள் அவரவர் சூத்திரப்படி சிராத்தம் செய்வதுதான் முறை.

ஒரு வேளை குறிப்பிட்ட சூத்திரம் பண்ணிவைக்க ஆசாரியன் கிடைக்காத பட்சத்தில் எந்த சூத்திர வாத்தியார் கிடைப்பாரோ அந்த சூத்திரபடியாவது சிராத்தம் செய்யலாம்.

*#கர்மாவை_விடக்கூடாது*.

அதே மாதிரி வாத்யார்களை குறை சொல்லவும் தேவையில்லை. அவரவர்கள் கர்மா அவரவர்களுடையது.

நமது ச்ரத்தையும், பார்வையும் தான் முக்கியம். அதைக் கவனத்தில் வைத்துக் கொள்ள வெண்டும்.

*#சம்பாவனை*

ஸ்ரார்த்ததில் இப்பொழுதெல்லாம் இன்னொரு விஷயமும் பிரச்சனையாகி வருகின்றதை நாம் சில இடங்களில் பார்க்கின்றோம்.

அது சம்பாவனை விஷயத்தில். எங்கள் அப்பா அப்போதெல்லாம் இவ்வளவுதான் கொடுப்பார் என்ற ஆர்க்யுமெண்ட். சிறிது யோசித்தாலும் நமக்கே புறியும், இது எவ்வளவு அபத்தமென்று.

சிலர் குறிப்பிடுகின்ற அந்த காலத்தின் ஒரு ரூபாய் என்பது இன்று கிட்டத்தட்ட 100 ரூபாய்க்கு சமமல்லவா?

அதனால் இப்படியெல்லாம் வாதிடாமல் தன்னால் முடிந்ததை திருப்தியாக சம்பாவனை அளிப்பது உசிதம்

வாதயாரை தேவதாஸ்வரூபமாக நினைப்பதுதான் நமது பாரம்பரியம்.

*#சாப்பிடும்_ப்ராம்ஹணாள்*

எக்காரணம் கொண்டும் வரிக்கப்பட்ட பிராம்ஹணாளை அவமானப்படுத்தும் எண்ணமே நமக்கு வரக்கூடாது.

நாம் எல்லோருமே ப்ராம்மணார்த்தம் சாப்பிட வேண்டிய குலத்தில் பிறந்தவர்கள்தானே!

நம் முன்னோர்களும் ஒரு காலத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்கள்தானே!

ஆனால் இன்று நம்மில் எத்தனை பேர் இன்னொரு வீட்டில் போய் ப்ராம்மணார்த்தம் சாப்பிடத் தயார்? நம்மால் முடியாதல்லவா?

அப்படிஇருக்கும்போதுமற்றவர்களைகுறைகூறுவதில் நமக்கு என்ன யோக்யதை இருக்கு?

ப்ராம்மணார்த்தம் சாப்பிடுபவர்களும் ஒரு வகையில் பொது சேவை செய்பவர்கள்தான்.

அவர்கள் இல்லாவிடில் கர்மா எப்படி நடக்கும். நாம் யோசிக்க வேண்டிய விஷயம்.

*#வைதீகம்*

வைதீகத்தில் நம்பிக்கை வளர வேண்டும் அதற்க்கு பண்ணிவைக்கும் வாத்யார்மீது நம்பிக்கையும், மரியாதையும் வைப்பதுதான் ஒரே வழி.

வைதீக தர்மத்தை அனுஷ்டிப்பது நமது கடமையாக் இருப்பதால் மிக முக்கியமான மந்திரங்களையாவது நாம் ஒவ்வொருவரும் அத்யாயனம் செய்ய வேண்டும்.

கேசட்டுகளை நம்பக் கூடாது. ஏனெனில் அது நம்மைத் திருத்தாது. மேலும் கேசட்டுக்களைக் கேட்கும்போது, நம்மை அறியாமலே நமக்கு ஒரு திருப்தி மாயை ஏற்பட்டு விடுகின்றது. நாம் வாயை திறந்து சொன்னால்தான் பலன் கிடைக்கும்.

ஒரு நாளும் ஸந்தியாவந்தனம் செய்யாமல் இருக்க வேண்டாம்.

குறிப்பாக ஸந்தியாவந்தனத்தில் வரும் ப்ராணாயாமம், சூரிய த்யானம், தர்ப்பணம், காயத்ரி ஜபம் போன்றவைகளை கவனமாக செய்யப் பழகுவது நல்லது.

கூடியமானவரை ஆசார நியமங்களை நாம் கடைபிடித்தால், நமக்கு ச்ரேயஸ் உண்டாகும் என்பதில் சந்தேகமில்லை.

*#பித்ரு_தோஷம்_இல்லாமல்_இருக்க_நாம்_அனைவரும்**#_அவர்களுக்கு_ஸ்ரார்த்தம்_பண்ணுவது_மிகவும்_அவசியம்_பண்ணுங்கள்*

முற்றும்

No comments:

Post a Comment