*ஶ்ரீராமாவதாரத்திற்கும் ஶ்ரீகிருஷ்ணாவதாரத்திற்கும் உள்ள வித்தியாசங்கள்* 🌹
*உபன்யாஸத்தில் கேட்டது* :
*1.ஶ்ரீராமர் சூரிய வம்ஸம்.*
*ஶ்ரீகிருஷ்ணர் சந்திர வம்ஸம்.*
*2.ஶ்ரீராமர் நடுப்பகலில் அவதாரம்.*
*ஶ்ரீகிருஷ்ணர் நடுஇரவில் அவதாரம்.*
*3.ஶ்ரீராமர் நவமி திதி.*
*ஶ்ரீகிருஷ்ணர் அஷ்டமி திதி.*
*4.ஶ்ரீராமர் சுக்ல பக்ஷம்.*
*ஶ்ரீகிருஷ்ணர் கிருஷ்ண பக்ஷம்.*
*5.ஶ்ரீராமர் உத்தராயணம்.*
*ஶ்ரீகிருஷ்ணர் தக்ஷிணாயணம்.*
*6.ஶ்ரீராமர் குணாவதாரம்.*
*அதாவது, குணங்கள் முக்கியம்.*
*ஶ்ரீகிருஷ்ணர் லீலாவதாரம்.*
*7.ஶ்ரீராமாவதாரத்தில் ஆரம்பத்தில் ஸ்த்ரீ வதம்---தாடகா.*
*ஶ்ரீகிருஷ்ணாவதாரத்தில் ஆரம்பத்தில் ஸ்த்ரீ வதம்---பூதனா.*
*8.ஶ்ரீராமாவதாரத்தில் ஆயுதம் எடுத்து ராவணன் வதம்.*
*ஶ்ரீகிருஷ்ணாவதாரத்தில் ஆயுதம் எடுக்காமல் கௌரவர்கள் வதம்.*
*9.ஶ்ரீராமர் ஆரம்பத்தில் 24 வயது வரை ஆனந்தம் ;*
*பிறகு துக்கம்.*
*ஶ்ரீகிருஷ்ணர், ஆரம்பத்தில் கஷ்டம் ;*
*பிறகு ஆனந்தம்.*
*10.ஶ்ரீராமருக்கு ஒரே மனைவி சீதா.*
*ஶ்ரீகிருஷ்ணருக்கு 16,108 மனைவிகள்.*
*11.ஶ்ரீராமாவதாரம் அனுஷ்டானம்.*
*ஶ்ரீகிருஷ்ணாவதாரம் உபதேசம்.*
*12.ஶ்ரீராமாவதாரம் சோகரஸம்/துக்கம்.*
*ஶ்ரீகிருஷ்ணாவதாரம் ஆனந்தம்.*
*13.ஶ்ரீராமர், 11,000 வருஷங்கள் வாழ்ந்தார்.*
*ஶ்ரீகிருஷ்ணர் 125 வருஷங்கள் வாழ்ந்தார்.*
*14.ஶ்ரீராமர், தர்மத்திற்கு கட்டுப்பட்டு செய்தார்.*
*ஶ்ரீகிருஷ்ணர், தான் செய்வதே தர்மம் என்றார்.*
*15.Spiritual evolution.*
*ஶ்ரீராமர், சாஸ்த்ரோக்தமாக தர்மத்தை அனுஷ்டித்து வாழ்ந்தார்.*
*ஶ்ரீகிருஷ்ணர் செய்தது Spiritual revolution.*
*16.ஶ்ரீராமர் அரசன் & வனவாஸம்.*
*ஶ்ரீகிருஷ்ணர் வனவாஸம் இல்லை.*
*17.ஶ்ரீராமர் All transparent.*
*ஶ்ரீகிருஷ்ணர் All ரகசியம்.*
*18.ஶ்ரீராமர் "மரியாதா புருஷோத்தமன்".*
*ஶ்ரீகிருஷ்ணர் "பூரண புருஷோத்தமன்".*
*அதாவது, பூரணமாக பகவான் சக்தி.*
*19.ஶ்ரீராமர் அம்ஸாவதாரம்.*
*ஶ்ரீகிருஷ்ணர் அம்ஸாவதாரம் & பூர்ணாவதாரம் both.*
*20.ஶ்ரீராமர் "பூர்ணத்வம்".*
*ஶ்ரீகிருஷ்ணர் "ஷோடஸ கலா".*
*அதாவது,16 கலைகள்.*
*21.ஶ்ரீராமருடன் சம்பந்தப்பட்ட மோக்ஷபுரி---*
*அயோத்யா.*
*ஶ்ரீகிருஷ்ணருடன் சம்பந்தப்பட்ட மோக்ஷபுரி---*
*மதுரா,*
*துவாரகா,*
*உஜ்ஜெயின்.*
*ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே*
🙏
*ஸர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* 🌹
No comments:
Post a Comment