Thursday, March 7, 2024

chanakya niti

சாணக்ய நீதி -- நங்கநல்லூர் J K SIVAN
வடக்கே எத்தனையோ சாம்ராஜ்யங்கள் தோன்றி அழிந்து விட்டன. சரித்திர பக்கங்கள் நிறைய இதைப் பற்றி சொல்கிறது. 2500 வருஷங்கள் முன்பு கிரேக்க நாட்டரசன் அலெக்ஸாண்டர் படையோடு இந்தியாவில் நுழைந்து எதிர்த்த அத்தனை குட்டி குட்டி ராஜாக்களை வென்று தனது உடைமையாக்கிக் கொண்டான். அப்போது நந்தர்கள் என்ற வம்சம் ஒரு ராஜ்யத்தை ஆண்டுவந்தது. அதில் நந்தராஜாவின் அடிமை வேலைக்காரிக்கு பிறந்த சந்திரகுப்தனை ராஜா வாரிசாக கொள்ளவில்லை. சந்திரகுப்தன் சிறந்த வீரன். இயற்கையாகவே புத்திசாலி. தேகபலம் மிக்கவன். இவனே இந்த நந்த ராஜ்யத்துக்கு சரியான அரசனாக ஆள்வதற்கு தக்கவன் என்று நந்த ராஜ்யத்திலிருந்த ஒரு அறிவாளி, சாணக்கியன் புரிந்து கொண்டு அவனை எப்படியும் ராஜாவாக்கிவிட பயிற்சி கொடுத்தான். கடைசி நந்தராஜா இறந்தபின் சந்திரகுப்தனை ராஜாவாக்கினான். மற்ற குறுநில மன்னர்களை இணைத்து சந்திரகுப்தன் தலைமையில் ஒரு பெரிய படை தயார் செய்தான். அந்த நேரத்தில் தான் அலெக்சாண்டரின் படை நந்த ராஜ்யத்தில் நுழைந்தது. சந்திரகுப்தன் தயார் நிலையில் தனது பெரும்படையோடு அலெக்சாண்டரின் படைத்தளபதி செலுக்கஸ் நிகேட்டார் என்பவனை போரில் வென்றான். சந்திரகுப்தனின் புகழ் எங்கும் பரவியது. மற்ற எல்லா ராஜாக்களும் அவன் கீழ் இணைந்தனர். குப்த சாம்ராஜ்யம் பறந்து விரிந்ததற்கு காரணம் சாணக்யனின் புத்தி கூர்மை. அவன் தான் சந்திரகுப்தனின் பிரதம மந்திரி. சாணக்யரின் அறிவுத்திறனை அவன் எழுதிய நீதி சாஸ்திர நூல்களில் அறிந்து வியக்கிறோம். இன்றும் அவை பிரபலமாக பின்பற்றப்பட்டு வருகிறது. இந்தியா முழுதும் வென்ற சந்திரகுப்தனின் ராஜ்யம் வடமேற்கே அரபு நாடுகள் வரை, தெற்கே மைசூர் வரை விரிந்தது. சகல வேதமும் அறிந்தவன் சாணக்கியன். அவனது நீதி சாஸ்திரத்திலிருந்து சிலவற்றை உங்களுக்கு அளிக்கிறேன்.
நான் உலக சரித்ரம் ஆர்வமாக படித்திருக்கி றேன். இருந்தாலும் சரித்ரம் இங்கே எழுதப் போவதில்லை. அநேகர் விரும்ப மாட் டார்கள். ரெண்டாயிரம் வருஷம் முன்பு வாழ்ந்த ஒரு அறிவாளி கௌடில்யன் எனும் சாணக்கியன். அவனைப் போல் இன்னொருவனை இன்னும் பாரத தேசம் காணவில்லை. தலை சிறந்த தத்துவ வாதியா, பொருளாதார நிபுணனா, நீதிபதியா, சாஸ்திரங்கள் கற்ற வேத ப்ராமணனா, ராஜகுருவா.... யார் ?? கிங் மேக்கர் KING MAKER என்கிறோமே கௌடில்யன் உண்மையில் EMPEROR MAKER விஷ்ணு குப்தன், கௌடில்யன் என்ற அவனது இயற் பெயர்கள் மறைந்து சாணக்கியன் என்று உலகமுழுதும் அறியப்படுபவன். எது எப்படி இருந்தாலும் சாணக்யன் சொன்னதாக சில வார்த்தைகள் நமக்கு கிடைத்து அதைப் படிக்கும்போது அவன் எவ்வளவு தீர்க்க சிந்தனையாளன் என்பது புலப்படுகிறது. அவனது சாணக்ய நீதியைப் படிக்கும்போது தான் அவனது தொலை நோக்கு, பக்தி, சமூக சிந்தனை, பேரன்பு, தியாகம், நேர்மை, நிர்வாக ஆற்றல், ராஜரீகம் எல்லாம் புரிபடுகிறது.
प्रणम्य शिरसा विष्णुं त्रैलोक्याधिपतिं प्रभुम् । नानाशास्त्रोद्धृतं वक्ष्ये राजनीतिसमुच्चयम् ॥ 1-1
ப்ரணம்ய ஶிரஸா விஷ்ணும் த்ரைலோக்யாதி⁴பதிம் ப்ரபு⁴ம் । நாநாஶாஸ்த்ரோத்³த்⁴ரு'தம் வக்ஷ்யே ராஜநீதிஸமுச்சயம் ॥
சாணக்கியன் எனும் கௌடில்யன் சொல்கிறான்:
நான் யார்? ஒரு பொம்மை, இயந்திரம், என்னைச் செலுத்துபவன் அந்த சாக்ஷாத் மஹா விஷ்ணு, மூவுலகுக்கும் அதிபதி, லோக காரணன், அவனை வணங்கி நமஸ்கரித்து என் மனதில் தோன்றியதை ஓலைச்சுவடியில் வடிக்கிறேன். ராஜரீக கொள்கைகள் கோட்பாடுகள், நீதி நெறி பற்றி சொல்கிறேன்.
अधीत्येदं यथाशास्त्रं नरो जानाति सत्तमः । धर्मोपदेशविख्यातं कार्याकार्यं शुभाशुभम् ॥1-2
அதீ⁴த்யேத³ம் யதா²ஶாஸ்த்ரம் நரோ ஜாநாதி ஸத்தம: । த⁴ர்மோபதே³ஶவிக்²யாதம் கார்யாகார்யம் ஶுபா⁴ஶுப⁴ம் ॥ 01-02
எவன் இதை நன்றாக அறிந்துகொண்டு, சாஸ்திரம் சொல்வதை புரிந்துகொண்டு, தனது கடமையை சாஸ்திரம் சொல்லும் வகையில், வழியில் கடைபிடிக்கிறானோ, எதை பின்பற்றவேண்டும், எது கூடாது என்று பகுத்தறிகிறவனோ, அவனே சிறந்த மனிதருள் மாணிக்கம்.
तदहं सम्प्रवक्ष्यामि लोकानां हितकाम्यया ।येन विज्ञातमात्रेण सर्वज्ञात्वं प्रपद्यते ॥ 1-3
தத³ஹம் ஸம்ப்ரவக்ஷ்யாமி லோகாநாம் ஹிதகாம்யயா । யேந விஜ்ஞாதமாத்ரேண ஸர்வஜ்ஞாத்வம் ப்ரபத்³யதே ॥ 01-03
சமூகநலத்தினை கருத்தில் கொண்டு, நான் இதைச் சொல்கிறேன், அதை நான் நினைக்கிறபடியே புரிந்துகொண்டு கடைபிடித்தால் எல்லாம் இனிதாகவே, நல்லதாகவே நடக்கும்.  
मूर्खशिष्योपदेशेन दुष्टस्त्रीभरणेन च ।दुःखितैः सम्प्रयोगेण पण्डितोऽप्यवसीदति ॥ 1-4
மூர்க²ஶிஷ்யோபதே³ஶேந து³ஷ்டஸ்த்ரீப⁴ரணேந ச ।து:³கி²தை: ஸம்ப்ரயோகே³ண பண்டி³தோऽப்யவஸீத³தி ॥ 01-04
எவ்வளவு தான் கற்றுணர்ந்த அனுபவ ஞானி என்றாலும் ஒரு முட்டாள் சிஷ்யனுக்கு கற்பிக்கும்போது, ஒரு தவறான பெண்ணோடு வசிக்கும்போது, துன்பப்படும் வியாதியஸ்தர்கள் இடையே இருக்கும்போதும், அவன் மிகுந்த துக்கம் அடைகிறான்.

No comments:

Post a Comment