பார் ஆண்ட பாதுகை*
தாயிடமிருந்து எந்த பதிலும் கிடைக்கப் போவதில்லை என்பதை உணர்ந்தான் பரதன்.
தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறு அடி பாயும்தானே? உடனே தன் அரச உடையை துறந்தான் பரதன்.தானும் மரவுறி தரித்தான்.காட்டை நோக்கிப் புறப்பட்டான். காட்டில் சிறிது தூரம் சென்றவுடனேயே கால் நொந்தது பரதனுக்கு. தன்னைச் சுற்றிலும் அரசப் பரிவாரங்கள் இருந்தாலும், குதிரை, யானை, பல்லக்கு என்ற எந்த வாகன சௌகரியத்தையும் ஏற்காமல், அண்ணன் எவ்வாறு கால் நோக நடந்திருப்பானோ அதே மாதிரி தானும் செல்லவே அவன் விரும்பினான்.
அது மட்டுமல்ல, அண்ணல் பாதம் பதிந்த தரையில், தன் பாதுகை படக்கூடாது என்று கருதிய அவன் வெற்றுப் பாதங்களாலேயே வனத்தில் நடந்தான்.
''ராம், ராம், ராம்...'' என்று மந்திரமாக அண்ணன் திருநாமத்தை அவன் ஜபிக்க, கூடி வந்தவர்கள் அனைவரும் அதனைப் பின் மொழிந்தனர்.
இந்தக் கூட்டத்தைப் பார்த்தாயே தவிர, அங்கிருந்து புறப்படும் 'ராம' ஜபத்தைக் கேட்டாயா? அந்தக் கூட்டம் நமக்கு எதிரானதல்ல, நம்மைச் சார்ந்ததுதான் என்பதைப் புரிந்துகொள்" என்றான் ராமன்.
"அப்படியானால்... அப்படியானால் வருபவர்கள் அயோத்தி மக்களா?" -லட்சுமணன் கேட்டான்.
"அவர்களும் வருகிறார்கள். அவர்களை தலைமை ஏற்று நடத்தி வருகிறவன் பரதன்!" -ராமன் அமைதியாகச் சொன்னான்.
அவ்வளவுதான். லட்சுமணன் துள்ளி குதித்தான். "பரதனா? உங்களை அயோத்தியை விட்டு விரட்டியது போதாதென்று இப்போது காட்டிற்கும் துரத்தி வருகிறானா? நீங்கள் நிரந்தரமாக நாடு திரும்பவே கூடாது என்று நினைத்து அதை முயற்சிக்க வருகிறானோ?" என்று கோபமாகக் கேட்டான்.
அவனை ராமன் ஆசுவாசப்படுத்துவதற்குள், ராமனை தொலை தூரத்திலேயே பார்த்துவிட்ட பரதன் பசுவை நோக்கித் தாவும் கன்றுபோல ஓடோடிச் சென்று ராமன் பாதத்தில் வீழ்ந்தான்.
கண்களிலிருந்து கண்ணீர் மாலையாகப் பெருகி, ராமனின் பாதங்களை அர்ச்சித்தது. அவனை ஆதூரத்துடன் தூக்கி எடுத்து அணைத்துக் கொண்டான் ராமன். இருவரையும் அணைத்துக் கொண்டான் ராமன்.
உணர்ச்சிவசப்பட்டு, அதனால் தோன்றும் கற்பனைக்கேற்ப அவற்றை விதவிதமாக, பெரும்பாலும் தப்பாகவே புரிந்து கொள்கிறோம்.
அப்போதே அவற்றின் அர்த்தம் புரியாவிட்டாலும் சற்று பொறுத்திருந்தால், ஏற்படும் விளைவுகள் நன்மைகளாகவே அமைவதை அறிந்து கொள்ள முடியும்'' என்று ஆறுதலளிக்க முயன்றான்.
"உங்களுடைய இந்தப் பெருந்தன்மைதான், கெடுமதி படைத்தவர்களுக்கு சலுகையாக அமைந்து விடுகிறது," பரதன் சொன்னான். என் கோரிக்கையை ஏற்றுக் கொள்ளுங்கள். என்னுடன் இப்போதே அயோத்திக்குத் திரும்புங்கள். ராஜ கிரீடம் சூடிக் கொள்ளுங்கள்.
அயோத்தி அரச குடும்பம் மட்டுமல்ல அயோத்தி மக்கள் அனைவரது விருப்பத்தையும் நிறைவேற்றுங்கள். கோசலை ராமன் ராஜா ராமனாக வேண்டும்..." மன்றாடிக் கேட்டான் பரதன்.
சுற்றியிருந்த அனைவரும் ராமனின் சம்மதமான தலையசைப்பை எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள். அவர்கள் அனைவரையும் பார்த்த ராமன், பரதனிடம் சொன்னான்,
"உன்னுடைய அன்பால் நான் கரைகிறேன் பரதா. மூத்தவனிருக்க இளையவன் அரச பட்டம் ஏற்பது பொருந்தாது என்ற உன் அரசியல் எனக்குப் புரிகிறது. ஆனால், கொடுத்த வாக்கைக் காப்பதும் அரசியலில் ஒரு அம்சம் என்பது உனக்குத் தெரியாதா என்ன?
பதினான்கு ஆண்டுகள் காட்டில் வசிப்பதாகவும், உன்னை தசரதனின் அரசியல் வாரிசாக ஆக்குவதற்கு சம்மதிப்பதாக வும் நான் கொடுத்த வாக்கு பொய்த்துவிடக்கூடாது, இல்லையா?
உன் விருப்பத்தை நிறைவேற்ற நான் உன்னுடன் வருவதாகவே வைத்துக் கொள்வோம்.
அது தாயார் கைகேயிக்கு நான் செய்யும் வாக்கு துரோகம் என்பது மட்டுமல்ல, அவர்களை கேலி செய்வது போலவும் ஆகும்.
இப்போதைய உன் மனநிலைப்படி, அப்படி நான் நடந்து கொண்டால் நீ கைகேயியை உன் தாயார் என்றும் பாராமல் கேலி செய்து துன்புறுத்துவாய். உன்னைப் பார்த்து பிற எல்லோரும் அன்னையை கிண்டல் செய்து சொல்லம்புகளால் தாக்குவார்கள்.
'என்னாயிற்று உன் வரம்? யாருக்காக நீ வரம் கேட்டாயோ அந்த பரதனே இப்போது ராமனை அழைத்து வந்துவிட்டானே, இப்போது உன் முகத்தை எங்கே கொண்டுபோய் வைத்துக் கொள்வாய்?' என்றெல்லாம் கேட்டு வேதனைப்படுத்துவார்கள்.
ஒரு ராஜமாதங்கி, சக்கரவர்த்தினி இப்படி அவமானப்படுவது தகுமா? அதற்கு நீயும் நானும் காரணமாவது முறையா? உன் கோபம் பிற எல்லோருக்கும் வக்கர மனதைக் கொடுப்பது சரிதானா?
'உன்னால் நல்லது எதுவும் செய்ய முடியா விட்டாலும், தீயதைச் செய்யாமல் இரு' என்பார்களே, அந்த கொள்கைப்படி நடந்துகொள்ள முயற்சிக்க வேண்டாமா?
ஒரு பாதிப்பு நிகழ்ந்துவிட்டது என்றால் அதற்கு மாற்று, அதற்குக் காரணமானவர்களை பாதிப்படைய வைப்பதா?
உடலில் வலி ஏற்படச் செய்வதுதான் வன்முறை என்றில்லை, யாருடைய உள்ளத்திலும் வேதனை தோன்ற வைத்தால் அதுவும் வன்முறைதான்.
அதற்கு உன்னையும், உன் மூலமாக என்னையும் காரணமாக்கி விடாதே..."
ராமன் பேசப்பேச எல்லோருக்கும் அவன் மீதான அபிமானம் அதிகரித்தது. அதே சமயம் இத்தகைய உத்தம புருஷனை பதினான்கு ஆண்டுகள் வனவாசத்திற்கு அனுப்பிய கைகேயியின் மீதான வெறுப்பையும் அதிகரிக்க வைத்தது.
இவர்களில், ராமன் என்ற பெருந்தகையாளனை, தங்கள் தமையனை, கைகேயி வேதனைக் குள்ளாக்கியதை லட்சுமணனாலும், பரதனாலும் சிறிதும் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.
தன் முயற்சியில் தான் தோற்றுவிட்டாலும், தன் கொள்கையிலிருந்து மாறாதிருப்பதில் உறுதியானான் ராமன். தான் அயோத்திக்கு வரவே முடியாது என்று தீர்மானமாக தெரிவித்துவிட்டான்.
உள்ளம் சோர்வடைய, அதனால் உடலும் தொய்வடைய, அப்படியே ராமன் காலடியில் சரிந்தான் பரதன். தன் முகத்தை ராமனின் பாதத்தில் அழுந்தினான்...
இதோ... ராமனின் பாதுகை. இதைக் கேட்கலாம். ராமனிடம் இதைக் கேட்கலாம்... மளமளவென்று மனசுக்குள் திட்டம் உருவானது.
"ராமா, நீங்கள்தான் வரவில்லை, தங்கள் பிரதிநிதியாக உங்கள் பாதுகையையாவது என்னுடன் அனுப்பி வைப்பீர்களா?"
-நா தழுதழுக்கக் கேட்டான் பரதன்.
உடனே வெகுண்டான் லட்சுமணன். "உன் தாயைவிட கொடுமைக்காரன் நீ. அவளாவது காட்டுக்கு அனுப்பியதோடு நின்றுவிட்டாள்.
நீ என்னடாவென்றால் அண்ணனின் பாதுகையைப் பறித்துக் கொண்டு, இந்த காட்டின் கல்லிலும், முள்ளிலும் பாதம் நோக அவரை நடக்க வைக்கத் துணிகிறாய்" என்று பரதன் மீது கோபம் கொண்டான்.
அவனை அமைதிப்படுத்தினான் ராமன்.
"பரதன் ஏமாற்றமடைய விரும்பவில்லை. பெருத்த எதிர்பார்ப்புடன் என்னை அயோத்திக்கு அழைத்துச் செல்ல நினைத்த அவன், தன் நோக்கம் ஓரளவாவது நிறைவேற வேண்டும் என்ற ஆதங்கத்தில் என் பாதுகைகளைக் கோருகிறான்.
அந்த கோரிக்கையை நிறைவேற்றி வைப்பது என் கடமை.
அதோடு, நீயும், சீதையும் வெற்றுக் கால்களுடன் என்னுடன் வரும்போது நான் மட்டும் பாதுகை அணிந்திருப்பது எந்த வகையில் நியாயம்?
எனக்கு இப்படி ஒரு படிப்பினையைக் கொடுத்த பரதனுக்கு நான் நன்றி சொல்ல வேண்டும்..." என்று உள்ளம் நெகிழ்ந்த ராமன் பாதுகைகளை விட்டு நீங்கினான்.
குனிந்து அந்தப் பாதங்களை எடுத்துக் கொண்ட பரதன் அவற்றைத் தன் கண்களில் ஒற்றிக் கொண்டான்.
எந்த அரியாசனத்தில் ராமன் அமரக்கூடாது; நான் அமர வேண்டும் என்று என் தாய் விரும்பினாளோ, அந்த அரியாசனத்தில் இதோ நம் அண்ணனின் பாதுகைகளை அமர வைக்கப் போகிறேன்.
லட்சுமணன் திருப்தியுடன், முக மலர்ச்சியுடன் தலையசைத்தான்.
அயோத்தி, ராம பாதுகா பட்டாபிஷேகம் கண்டது. பரதன் தன் மனைவியுடன் தினமும் அவற்றை வணங்கி வந்தான்.
No comments:
Post a Comment