ஸ்ரீராமபிரான்,எறும்பியப்பாவுக்குக் காட்டி அருளிய லக்ஷ்மணஅவதாரம்
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
இன்று(27/10/2023), ஐப்பசி ரேவதி.
மணவாள மாமுனிகளின் அஷ்டதிக்கஜங்களுள் ஒருவரான
ஸ்ரீ எறும்பியப்பா ஸ்வாமியின் திருநட்சித்திரம்.
ஸ்வாமியின் தனியன்:
🥁🔔🎷🎺🥁🔔🎷🎺
"செளயஜாமாத்ரு யோகீந்த்ர
சரணாம்புஜ ஷட்பதம்!
தேவராஜகுரும் வந்தே திவ்ய
ஜ்ஞான ப்ரதம் சுபம்"
"மேன்மை தங்கிய அழகிய மணவாள மாமுனிகளின் திருவடித் தாமரைகளில் வண்டு போன்றவரும்,நம்மை ஞானம் தந்து காக்கும் ஸ்பாவருமான
தேவராஜ குரு என்னும் எறும்பியப்பாவை வணங்குகிறேன்"
ராமாநுஜர் வாழ்வில் நடந்த சிறந்த வைபவங்கள், அவருடைய சம்பிரதாயத்தை வளர்த்த,ஆசார்ய புருஷர்களின் வாழ்க்கையிலும்,
கைங்கர்யங்களிலும் சிறந்த பாதிப்பை ஏற்படுத்தி உள்ளன.அவ்வழியில் இன்று எறும்பியப்பாவின் வைபவங்களைப் பார்ப்போம்.
1.பெரும்புதூர் மாமுனியும், எறும்பியப்பாவும்:
🔔🔔🔔🔔🔔🔔🔔
ராமாநுஜர்,அவர் அவதரித்த (காஞ்சிக்கு அருகிலுள்ள) ஸ்ரீபெரும்புதூருடன் சேர்த்து 'பெரும்புதூர் மாமுனி',
'பெரும்புதூர் வள்ளல்', 'பூதபுரீஸ்வரர்' என்றெல்லாம் போற்றப்படுகிறார்.
சோழசிம்மபுரத்துக்கு(சோளிங்கர்) அருகிலுள்ள எறும்பி என்னும் கிராம
த்தில் தோன்றிய தேவராஜனுக்கு ஊர்ப்பெயரு டன் சேர்ந்த "எறும்பி அப்பா" என்னும் பெயரே நிலைத்து விட்டது.
2."சத்யம்,ஞானம்,அனந்தம்,ப்ரஹ்மம்"
ஏற்படுத்திய திருப்புமுனை:
👉👉👉👉👉👉👉👉👉
ராமாநுஜர் யாதவப்பிரகாசர் பாடசாலையில் பயின்ற போது,
அவருக்கும் யாதவப் பிரகாசருக்கும் வேதாந்த/உபநிஷத் விளக்கங்களில் பல கருத்து வேற்றுமைகள் ஏற்பட்டன.அதில் முக்கியமானது தைத்திரீய உபநிடத மந்த்ரமான"ஸத்யம்,ஞானம்,அனந்தம்,
ப்ரஹ்மம்"என்பதற்கானவிளக்கம்.யாதவப்பிரகாசர் அத்வைத விளக்கத்தைக் கூறினார்.ராமாநுஜர் அதை மறுத்து உண்மையான விஸிஷ்டாத்வைத விளக்கத்தை எடுத்துரைத்தார். இதனால் இருவருக்கும் இடையே வேறுபாடுகள் அதிகமாகி, உடையவர் அவரை விட்டுவிலகி, திருக்கச்சி நம்பிகள் மூலம், தேவப் பெருமாளிடம் ஆறு வார்த்தைகள் அருளப் பெற்றார்.
எறும்பியப்பா, மாமுனிகள் வைபவங்
களைப் பற்றிக் கேள்விப்பட்டு,
அவரைச் சேவிக்க ஸ்ரீரங்கம் வந்தார். அவர் வந்த போது,மாமுனிகள் தம் காலட்சேபத்தில், திருவாய் மொழியின் முதல் பாசுரமான'உயர்வற உயர்நலம் உடையவன் யவனவன்' என்பதற்கு மிகச்சிறந்த வியாக்யானம் செய்து கொண்டிருந்தார்.எம்பெருமானாரின் 'சத்யம்,ஞானம்' விளக்கத்துக்கு இணையாக ப்ரஹ்மத்தின் பரத்வத்தை யும்,மேன்மையையும் ,வேத வேதாந்தங்களின் சாரத்தோடு
எடுத்துரைத்ததைக் கேட்ட, எறும்பியப்பா மிக நெகிழ்ந்து மாமுனிகள் பால் பெரிதும் ஈர்க்கப்பட்டார்.
3.'போனகம் செய்த சேடம் தருவரேல் புனிதம்' கிடைக்காமை செய்த மாயம்.
🍚🍲🍚🍲🍚🍲🍚🍲
ராமாநுஜர்,திருக்கச்சி நம்பிகள் உண்ட (போனகம் செய்த) மிச்சத்தை(சேடம்) உண்ண விரும்பினார்.ஆனால் அவரது மனைவியார், அக்கால அந்தணர் குடும்பவழக்கப்படி, அவற்றைத் தூரப் போட்டு, சமைத்த பாத்திரங்களையும், நம்பிகள் உண்ட இடத்தையும் கழுவி சுத்தப் படுத்தி விட்டார். போனகம் செய்த சேடம்-புனிதம் மறுக்கப்பட்ட உடையவர் துறவறம் பூணுவதற்கான முதல் உத்வேகத்தைக் கொடுத்தது இந்த நிகழ்வு.
மாமுனிகள் காலட்சேபம் முடித்து, எறும்பியப்பா உள்பட கூடியிருந்தோரை பிரசாதம் ஸ்வீகரித்து விட்டுச் செல்லுமாறு சொன்னார்.ஆனால் 'சந்யாசி கொடுக்கும் உணவை உட்கொள்தல் பாவம் என்றும், அவ்வுணவை உட்கொண்டால் ஒரு மாதகாலம் சாந்த்ராயண விரதம் இருக்க வேண்டும்' என்னும் சாமான்ய சாஸ்த்ர த்தை மனதில் கொண்டு எறும்பியப்பா அங்கு பிரசாதம் கொள்ளாமல் சென்று விட்டார்.மேலும் அங்கு பிரசாதம் உட்கொண்ட கோவில் அண்ணன்
முதலான ஆசார்யர்களையும் தவறாகப் பார்த்தார்.இப்படி எறும்பியப்பா
மாமுனிகள் பிரசாதத்தை ஸ்வீகரிக்கா மலேயே சென்றுவிட்டார், என்பதை அறிந்த கோவில் அண்ணன் ஸ்வாமி,
அவர் உஜ்ஜீவிக்க வேண்டும் என்னும் பரம கிருபையாலே மாமுனிகளைப் பிரார்த்தித்து, அவரைக் கொண்டே எறும்பியப்பாவை மறுபடியும் தம்மிடம் வரும்படி அழைக்கும் ஒரு ஸ்ரீமுகம்
(கடிதம்),எழுதி உடனே ஒரு ஆள் மூலம் அனுப்பிவைத்தார்.
ஸ்ரீரங்கத்திலிருந்து புறப்பட்ட எறும்பியப்பா எறும்பி சென்று சேர்ந்த போது,மாமுனிகள் அனுப்பிய ஸ்ரீமுகமும் வந்து சேர்ந்தது;அதைப் படித்தும் அப்பாவுக்கு மாமுனிகளிடம் திரும்பி வரவேண்டும் என்று உடனே தோன்றவில்லை.
மறுநாள் காலை தம் திருவாராதனைப் பெருமாளுக்கு திருவாராதனை செய்ய, பெருமாள் இருக்கும் பெட்டி/அறையை (கோயிலாழ்வார்)த் திருக்காப்பு நீக்கித் திறக்க முயன்ற போது அவரால் திறக்க முடியவில்லை.எப்படியெல்லாம் முயன்றும் திருக்காப்பு நீக்கமுடிய
வில்லை.பெருமாளுக்கு என்ன அபச்சாரம் செய்தேனோ என்று மிகுந்த துக்கத்துடன், உண்ணாமலேயே முசித்துப் படுத்து விட்டார்.அன்றிரவு அவர் கனவில் தோன்றிய திருவாராதனைப் பெருமாள்
ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி "ஆதிசேஷனின் அவதாரமான மாமுனிகளிடம் நீர் அபச்சாரப் பட்டுவிட்டீர்.உம்மிடம் பரம க்ருபையால் கோவில் அண்ணனால் பிரார்த்திக்கப் பட்டு அவர் அனுப்பிய ஸ்ரீமுகத்தையும் உபேக்ஷித்து விட்டீர்.நீர் உடனே சென்று மாமுனிகளை ஆஸ்ரயித்தால் ஒழிய நாம் உம்முடைய உபசாரங்களை ஏற்க மாட்டோம்"என்றார்.
தவறுணர்ந்த அப்பா உடனே ஸ்ரீரங்கத்து க்குக் கடிது சென்றார்.மாமுனிகளிடம் தண்டம் சமர்ப்பித்து மனமுருகி வேண்டினார்.இந்த வைபவத்தை அப்பா தாம் மாமுனிகளைப் பற்றி எழுதிய வரவரமுநி ஸதகத்தில் 'நித்யம் பத்யு:' 'ஸாரா ஸாரப்ரமிதி' என்று தொடங்கும் 15&25 ஆம் ஸ்லோகங்களில் விவரித்து ள்ளார்.அவற்றின் தமிழாக்கம்:
15:"வரவர முநிவரே!எப்போதும் எம்பெருமானுக்குக் கைங்கர்யம் செய்கையாலும்,வெள்ளை நிறத்தாலும்,
கங்கா ப்ரவாஹத்தை ஒத்த வாக் வைபவத்தாலும்,அடியேன் திருவாராதனைப் பெருமாளான சக்ரவர்த்தித் திருமகனாரின் அசரீரி வாக்கையொழியவே,தேவரீரை ஆதிசேஷ அவதார மென்று யார் தான் அறுதியிட முடியாது"
25:"ஸ்ரீமத் வரவரமுனிவரே! கைக்கொள்ளத் தக்கது எது? கைவிடத் தக்கது எது? என்று அறியாத அடியேன், நான்மறைகள் தேடியும் என்றும் காண மாட்டாத செல்வனான, என்னுடைய பெருமானான சீதாராமன், தேவரீருடைய ஸ்ரீமுகத்தைத் தலைமேல் கொண்டு ஆணையிடாமல் இருந்தால், அதைக் குரங்கு கைப் பூமாலை போல அவமதித்திருப்பேன்".
மாமுனிகளிடம் பஞ்ச சம்ஸ்ஹாரம் செய்து கொண்டு,பல உன்னத அர்த்தங்களைப் கற்று அவரது அஷ்ட திக்கஜங்களுள் ஒருவரானார்.
4.மாமுனிகள் மங்களாசாசனம் செய்த அவதார ஸ்தலங்கள்:!
🖐🖐🖐🖐🖐🖐🖐
உடையவர் அவதரித்த ஸ்ரீபெரும்புதூரு
க்கு,முதன்முதலாகச் சென்ற மாமுனிகள்,
"இதுவோ ஸ்ரீபெரும்புதூர்!
இந்த மண்ணிலோ எதிராசர் அவதரித்தார்!!
எம் இடர் கடிய அவதரித்தார்"என்று மங்களாசாசனம் செய்தார்.
திருமலையிலிருந்து ஸ்ரீரங்கம் திரும்பும் வழியில்,எறும்பி வந்த மாமுனிகள் அப்பா அவதரித்த, ஒப்பற்ற ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி கோவில் கொண்டுள்ள எறும்பி யை 'வட திருவரங்கம்' என்று கொண்டாடினார்.
5.எறும்பியப்பா இயற்றிய அற்புதமான கிரந்தங்கள்:
📖📔📕📙📔📘
மாமுனிகளைப் பற்றிய,
பூர்வ தினசர்யா,உத்தர தினசர்யா,
வரவரமுநி சதகம் மற்றும் பூர்வாசார்ய ஸ்ரீஸுக்தி களை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட
"விலக்ஷ்ண மோக்ஷ அதிகாரி நிர்ணயம்" என்னும் கிரந்தம்.
மிக முக்கியமாக ஸ்ரீவைஷ்ணவர்கள் அனைவரும் அனுதினமும் அநுஸந்திக்கும்,
"மன்னுயிர்காள்!இங்கே மணவாள மாமுனிவன்,
பொன்னடியாம் செங்கமலப் போதுகளை-உன்னிச்
சிரத்தாலே தீண்டில், அமானுவனும் நம்மைக்
கரத்தாலே தீண்டல் கடன்"
என்னும் பாசுரம்
(அடியேன் பார்த்தசாரதி ராமாநுஜ தாசன்)
No comments:
Post a Comment