Thursday, November 25, 2021

Apadi Kim karaneeyam - Appaya & nilkantha Dikshitar

குழந்தே!! இங்க வா!! சற்றே நடுங்கும் குரலில் அப்பய்ய தீக்ஷிதர் தனது ஒன்று விட்ட பெயரனை அழைத்தார். 

சுற்றி இருப்பவர்களுக்கு ஆஸ்சர்யம். "இத்தனை பேர் இருக்கும் போது சிறுபிள்ளையை அருகில் அழைக்கிறாரே அப்பய்ய தீக்ஷிதர்!! அதுவும் பரசிவத்தோடு அபின்னமாகும் தருவாயில்!!" என.

நீலகண்டன் தாத்தாவின் அருகில் வந்தான். "ஆஹா!! என்ன தேஜஸ்!! அப்பய்ய தீக்ஷிதருக்கு ஆனந்தம் பிடிபடவில்லை. ஏதோ ஹாஸ்யத்தைக் கண்டது போல் கடகடவென நகைத்தார்.

"ஆபதி கிம் ஸ்மரணீயம்!!?" என அக்குழந்தையிடம் கேட்டார். சுற்றியுள்ள அனைவரும் "தீக்ஷிதருக்கு பித்து பிடிச்சுடுத்தோ!! சின்ன குழந்தை கிட்ட போய் "ஆபத்து வந்தா என்ன செய்வே"ன்னு கேக்கறாரே" என ப்ரமித்து நின்றனர்.

குழந்தை க்ஷணம் கூட தாமதிக்கவில்லை. கணீர் எனும் குரலில் "ஸ்மரணீயம் சரணயுகளம் அம்பாயா:" எனக் கூறினான். 

எவ்வளவு ஸத்யமான வார்த்தை. ஆபத்து காலத்ல அம்பாளுடைய சரணத்தை நினைச்சுண்டு, அவோ பாதத்தை கெட்டியா பிடிச்சுப்பேன்னு ஒரு குழந்தை சொல்லனும்னா எப்பேற்பட்ட மஹாக்ஞானம் அந்த குழந்தைக்கு இருக்கனும்.

அப்பய்ய தீக்ஷிதர் ஆஸ்சர்யத்துடன் "தத்ஸ்மரணம் கிம் குருதே!!" என பதிலுக்கு கேட்டார். "ஏண்டா குழந்தே!! அப்படி பண்ணா என்னடா ஆகும்!!" ன்னு அர்த்தம் அதற்கு.

ஒரு க்ஷனமும் தாமதிக்காத நீலகண்டன் கூறினான் " என

"தாத்தா!! அம்பாளுடைய பாதத்தை ஸ்மரிச்ச மாத்ரத்ல, சிவன், விஷ்ணு, ப்ரஹ்மா முதற்கொண்டு முப்பத்துமுக்கோடி தேவர்களும் கிங்கராளா வேலை செய்ய மாட்டாளோ!!??" ன்னு அர்த்தம்.

சட்டென்று குழந்தையை அணைத்துக் கொண்ட அப்பய்ய தீக்ஷிதர் தேவீ மாஹாத்ம்ய ஓலைச்சுவடியை அளித்து "குழந்தே!! அம்பாளைத் தவிர்த்து ஸத்யம் ஒன்னுமில்லேடா!! அவளையே கெட்டியா பிடிச்சுக்கோ!!" எனக் கூறினார்.

ஆம்!! அப்பய்ய தீக்ஷிதேந்த்ரர் நீலகண்டருக்கு மட்டும் கூறவில்லை. நமக்கும் சேர்த்துத்தானே கூறினார்!!

அம்பாளைத் தவிர்த்து ஸத்யமான வஸ்து ஒன்று உண்டோ உலகில்.

"ஆபதி கிம் ஸ்மரணீயம்?"
"ஸ்மரணீயம் சரணயுகளம் அம்பாயா:" 
"தத்ஸ்மரணம் கிம் குருதே?"
"ப்ரஹ்மாதீனபி கிங்கிரி குருதே!!"

*ஶ்ரீமாத்ரே நம:*🙏

No comments:

Post a Comment