Courtesy:Smt.Dr.Saroja Ramanujam
யாதவாப்யுதயம்
அத்தியாயம்-4
கிருஷ்ணன் பிறந்துவிட்டான் என்று அறிந்ததும் கம்சன் பயம் மேலிட்டு கோபம் கொண்டவனாக பூதனைஎன்னும் மாய அரக்கியை கோகுலத்திற்கனுப்பினான். அவள் எல்லோரும் தூங்கும் சமயம் யசோதையைப் போல் உருக்கொண்டு கண்ணனுக்கு விஷம் தோய்ந்த முலையினால் பால் கொடுக்க முயற்சிக்கையில் கண்ணன் பாலுடன் அவள் உயிரையும் உறிஞ்சினான். இது பாகவதத்தில் விரிவாகக் கூறப்பட்டுள்ளது.
பூதனையின் கூக்குரலைக் கேட்ட யசோதை விரைவாக வந்து கண்ணனை எடுத்துக்கொண்டாள். வேதங்களாலும் பிடிக்க இயலாதவனை யசோதை எளிதில் எடுத்துக் கொண்டாள் என்கிறார் தேசிகர். நந்தகோபரும் அங்கு வந்து குழந்தைக்கு ஆபத்து ஏற்படவில்லை என்றறிந்து நிம்மதியடைந்தார்.
பூதனை தன் சுய உருவம் அடைந்து உயிரிழந்து வீழ்ந்தபோது கோபர்கள் அவள் உடலை துண்டாக்கி எறிந்தனர். பின்னர் கண்ணனுக்கு திருஷ்டி படாமலிருக்க ஐம்படைத்தாலி என்னும் ஆபரணத்தை அணிவித்தனர். இது நாராயணனின் பஞ்ச ஆயுதங்களின் சின்னங்களால் செய்யப்பட ஒரு ஆபரணம்.
தேசிகர் கூறுகிறார்-' ஸ்தன்யேன க்ருஷ்ண: ஸஹ பூதநாயா: ப்ராணான் பபௌ லுப்தபுனர்பவாயா:', "கண்ணன் இனிமேல் பிறப்பற்ற பூதனையின் ஸ்தன்ய பானத்துடன் கூட உயிரையும் குடித்தான். " அதாவது கண்ணனால் உயிரிழந்த அவளுக்கு இனி பிறப்பில்லாத மோக்ஷத்தை அளித்தானாம்.
மேலும் 'யதத்புதம் பாவயதாம் ஜனானாம் ஸ்தனந்த்யத்வம் ந புனர்பபூவ,' "இந்த அத்புத சரிதத்தை நினைப்போருக்கு மறுபடி ஸ்தன்யபானம்செய்யும் நிலை ஏற்படாது ," அதாவது மறு பிறவி என்பதில்லை என்கிறார்.
அப்பைய தீக்ஷிதர் இதற்கு வியாக்யானம் எழுதுகையில் இது தத்க்ரது என்ற வேதத்தில் காணப்படும் கருத்தான ஒருவர் எதை நினிக்கிறாரோ அதுவாகவே ஆகிவிடுகிறார் என்பதற்கு புறம்பாகக் காணப்படுகிறது என்கிறார். ஏனென்றால் ஸ்தன்ய பானம் செய்ததை நினைத்தால் ஸ்தன்ய பானம் செய்யும்படியே இருக்காது என்று சொல்வதால். இதை பின்னொரு அத்தியாயத்தில் விரிவாகக் காணலாம்.
குழந்தைக் கண்ணனின் இன்னொரு லீலை சகடாசுர வதம். ஒரு சமயம் யசோதை கண்ணனை ஒரு வண்டியின் சமீபம் விட்டுச் சென்றாள். அப்போது குழந்தை கால்களை உதைத்து அழ ஆரம்பிக்கவே அவன் கால் பட்டு அந்த வண்டி பெரிய சப்தத்துடன் கீழே விழுந்து பொடிப் பொடியாக உடைந்தது.
அந்த சப்தத்தைக் கேட்டு யசோதையும் மற்றவர்களும் ஓடிவந்து பார்க்கையில் குழந்தைக் கால் பட்டு வண்டி விழுந்தது என்று கூறிய சிறுவர்களின் வார்த்தையை நம்பவில்லை. அது வண்டி சக்கரம் உருவத்தில் ஒளிந்திருந்த சகடாசுரனைக் கொல்ல கண்ணன் செய்த லீலை. யசோதை கண்ணனின் பாதங்கள் வண்டி பட்டு காயமடைந்ததா என்று தடவிப் பார்த்தாளாம்.
பாகவதத்தில் சகடாசுரன் பெயர் குறிப்பிடப்படவில்லை. வண்டி விழுந்து உடைந்தது மட்டுமே காணப்படுகிறது. ஆனால் யாத்வாப்யுதயத்திலும் நாராயணீயத்திலும் சகடாசுரனைக் குறிப்பிடக் காண்கிறோம்.
கண்ணன் தவழும்போது அவன் மேனியெங்கும் புழுதி படர்ந்திருக்கிறது. இதை தேசிகர் 'ப்ராயோ தரித்ரீ பரிஷ்வஜே தம் ஸாபத்ரபா ஸாந்த்ரரஜச்சலேன, ' பூதேவி புழுதி என்ற வியாஜத்தில் அவன் மேனியைத் தழுவிக் கொண்டாள், என்கிறார்.
எவன் உலகையெல்லாம் படைத்து அவற்றிற்கு நாம ரூபம் கற்பித்தானோ அவன் தாயின் பெயரை உச்சரிக்க முயன்றபோது அவன் மழலை ச்சொல் எல்லோரையும் மகிழ்வித்தது. பின்னர் அவன் தெளிவாகப பேச ஆரம்பிக்கையில் அது வேத கோஷம் போல் ஒலித்ததாம்.
அடுத்து கண்ணன் நடக்க முயற்சித்ததின் வர்ணனை.மூன்றடியால் மூவுலகம் அளந்தவனை அவன் செந்தாமரைக் கையின் நுனியைத் தன் கையால் பிடித்துக் கொண்டு யசோதை மெதுவாக நடக்க கற்பித்தனளாம். இரண்டு மூன்று அடி வைத்துப் பின்னர் நடக்க இயலாதவன் போல் நடிக்க யசோதை அவனை எடுத்து இடுப்பில வைத்துக் கொள்கிறாள். மூவுலகம் ஓரடியால் அளந்தவன் இங்கு உலகைக் காக்க பாலகனாக நடிக்கிறான்.
அவன் நடக்கையில் தன் திருவடியின் சங்க சக்ர ரேகைகளால் பூமிக்கு முத்திரையிட்டான் ( அதாவது பூமி தீயோருடையது அல்ல, தன்னுடையது என்று காண்பித்தான்.)
மூவுலகங்களுக்கும் சூத்ரதாரனாய் உலகத்தை ஆட்டிவைக்கிறானோ அவன் வெண்ணையை விரும்பி வெகு அழகாக நாட்டியம் ஆடிய ரசமான சம்பவம் அடுத்துக் காண்போம்.
யாதவாப்யுதயம்- அத்தியாயம் 4 (continued)
கோபியர் தயிர் கடைந்து கொண்டிருக்கின்றனர். அப்போது கண்ணன் அங்கு வந்து வெண்ணை தரும்படி கேட்க அதற்கு அவர்கள் அவன் நாட்டியம் ஆடவேண்டும் என்று சொல்கின்றனர். அப்போது அவன் வெண்ணையை விரும்பி ஆடிய நாட்டியத்தை தேசிகர் எப்படி வர்ணிக்கிறார என்று பார்ப்போம்.
ய ஏஷ லோகத்றைய சூத்ரதார:
பர்யாயபாத்ராணி சராசராணி
ஆனர்தயத் அத்புத சேஷ்டிதோ அசௌ
நநர்த்த கேலன் நவநீதகாங்க்ஷீ (யாத. 4.27)
எவனொருவன் மூவுலகங்களுக்கும் சூத்திரதாரனாய் எல்லாஉயிர்களையும் ஆட்டுவிக்கின்றானோ அப்படிப்பட்ட அத்புத மகிமையை உடையவன் இங்கு வெண்ணையை விரும்பி அழகாக நாட்டியம் செய்தான்.
இதை கோபால விம்சதியில் தேசிகர் பின்வருமாறு அனுபவிக்கிறார்.
. ஒரு கால் தூக்கியும் இன்னொரு கால் தரையில் வைத்தும் , மாறி மாறி ஆடுகிறான். அப்போது அவனுடைய ஆபரணங்கள் அசைந்து ஒலிக்கின்றன. அது பாடல் போல் இருக்கிறது. தயிர் கடையும் போது உண்டாகும் சப்தம் தாளமென ஒலிக்கிறது. அதற்கேற்ப கண்ணன் ஆடுகிறான். அதற்கு நவநீத நாட்டியம் என்று பெயர் சூட்டுகிறார் தேசிகர்.
அப்போது அவனுடைய மேனியில் தயிர் துளிகள் தெறித்துள்ளன. அது அவன் பாற்கடலை கடையும்போது அமுதத்திவலைகள் படிந்த அவன் நிலையை நினைவூட்டுகிறதாம்.
இந்த இடத்தில் குலசேகரரின் சொற்களைப் பார்ப்போமா?
க்ஷீரசாகரதரங்க சீகராஸாரதாரக்ருதசாருமூர்த்தயே
போகிபோகசயநீயசாயினே மாதவாய மதுவித்விஷே நம:
மது என்ற அரக்கனைக் கொன்ற மாதவன் பாற்கடலில் சேஷ சயனத்தில் உடல் முழுவதும் பாற்கடலின் அலைகளின் துளிகளால் சூழப்பட்ட நீல மேனியில் , நக்ஷத்திரங்கள் சூழ்ந்த ஆகாயம் போல் காணப் படுகிறான் . அவனுக்கு நமஸ்காரம்.
கண்ணனின் நாட்டியத்தை லீலாசுகர் வேறுவிதமாகக் காண்கிறார் .
வதனே நவநீத கந்த வாஹம் வசனே தஸ்கர சாதுரீ துரீணம்
நயனே குஹனாஸ்ரு ஆச்ரயேதா: சரணம் கோமளதாண்டவம் குமாரம்
கண்ணன் முகத்தில் வெண்ணை வாசம். " கண்ணா வெண்ணை உண்டாயா," என்று கேட்கும் தாயிடம் "இல்லவே இல்லை," என்னும் கள்ளத்தனமான சாதுர்யப் பேச்சு. "பொய் சொல்லாதே " என்றால் கண்களில் பொய்க் கண்ணீருடன் பார்க்கும் பார்வையில் தாய் மனம் கனிந்துவிட, அவளை இன்புறுத்த அழகாக நாட்டியம் ஆடுகிறான்.
பாற்கடலில் பால் மட்டுமே கிடைக்கும் . ஆனால் இங்கு ஆயர்பாடியில் தயிர் வெண்ணை நெய் முதலியவை கிடைக்குமே என்ற ஆசையில்தான் கண்ணனாக அவதரித்தானோ என்று அன்பர்கள் வியப்புறுகின்றனர்.
யாதவாப்யுதயம் -
அத்தியாயம் 4 (தொடர்ச்சி)
அடுத்து வெண்ணை திருடும் கண்ணனை சித்தரிக்கிறார் .
த்ரஸ்யன் முகுந்தோ நவநீத சௌர்யாத்
நிர்புக்ன காத்ரோ நிப்ருதம் சயான:
நிஜானி நிச்சப்ததசாம் யயாசே
பத்தாஞ்சலிம் பால விபூஷணானி
கண்ணன் வெண்ணையை திருடிவிட்டு கோபியருக்கு பயந்து உடலை ஒடுக்கி ஓரிடத்தில் அசையாமல் இருக்கையில் தன் ஆபரணங்கள் சப்தம் செய்யாமல் இருக்க குவித்த கைகளுடன் அவைகளை வேண்டினானாம்.
இங்கு தேசிகர் கண்ணனை முகுந்தன் என்று குறிப்பிடுகிறார். அதாவது முக்தியளிப்பவன் என்ற பொருளில்.
ஒரு சமயம் கிருஷ்ணன் காட்டுப் பழங்களை வேண்டி அதை விற்கும் வேடுவச்சிறுமியை நோக்கிச் செல்கிறான். அப்போது பழம் வாங்குவதற்காக கை நிறைய தானியம் எடுத்துச் செல்கையில், வேகமாகச் சென்றதனால் அவனுடைய சிறு கைகளில் இருந்த தானியம் எல்லாம் கை விரல்கள் வழியாக கீழே விழுந்து விட்டனவாம்.
அதனால் பழம் விற்கிறவள் அவன் கைத்தலத்தைக் காண்கிறாள். சங்கு சக்ர ரேகையுடன் கூடிய அந்த சிவந்த கைகளைக் கண்டதும் தன்னையே கொடுத்து விடும் எண்ணத்தோடு அவன் கைகள் நிறைய பழங்களை நிரப்பினாள்.
அந்த க்ரீடாசிசு, அதாவது குழந்தையாக லீலை புரிந்தவன் கைகளில் பழங்களை நிரப்பியபோது அந்த பழக்கூடை கௌஸ்துபத்தின் மதிப்பிற்கு சிறிதும் குறைவில்லாத ரத்தினங்களாய் நிரப்பப்பட்டது.
இங்கு தேசிகர்
'ஆரண்யகானாம் ப்ரபவ: பலானாம் அரண்ய ஜாதானி பலானி அபீப்ஸன்' ஆரண்யகம் எனப்படும் உபநிஷத்துக்களின் பலன்களை உண்டுபண்ணித் தருபவன் அரண்யம் அதாவது காட்டில் விளையும் பழங்களை விரும்பினான் என்கிறார்.
இவ்வாறு வெண்ணை திருடுதல் , பால் கறக்காத நேரத்திலும் கன்றுகளை அவிழ்த்து விடுதல் என்று பல விஷமங்களை செய்த கண்ணனை ஒருமுறை யசோதை உரலில் கட்டிவிட விரும்பினாள்.
இதை தேசிகர் 'உலூகலே குத்ரசித் ஆத்த புண்யே பந்தும் ஸதாம் பந்தும் யியேஷ மாதா,' ஸதாம் பந்தும், ஸாதுக்களின் பந்துவான இவனை 'பந்தும் இயேஷ,' கட்ட விரும்பினாள். எதில்? உலூகலே குத்ரசித் ஆத்த புண்யே,' ஒரு புண்ணியம் செய்த உரலில் , என்கிறார். இதன் வர்ணனையை அடுத்து பார்ப்போம்.
யாதவாப்யுதயம் - அத்தியாயம் 4 தொடர்ச்சி
கண்ணன் உரலில் கட்டுண்டதை வர்ணிக்கும் சுகர் பாகவதத்தில் யசோதை கட்ட எடுத்த எந்தக் கயிறும் 2 அங்குலம் குறைவாக இருந்தது என்கிறார்.
எவனுக்குஉள்ளும்புறமும்இல்லையோ , முன்னும்பின்னும்இல்லையோ, எவன்உலகிற்குமுன்னும்பின்னும்உள்ளும்வெளியுமாகவும்உலகமேயாகவும்இருக்கிறானோ, வெளிப்படையாகத்தோன்றாதவனும், இந்த்ரியங்களுக்குப்புலப்படாதவனுமானஅவனைமானிடஉருக்கொண்டதால்தனதுகுழந்தையாகஎண்ணியசோதைசாதாரணக்குழந்தையைப்போல்உரலில்கட்டினாள்.
நாராயணபட்டதிரிசொல்கிறார் ,
பந்தும்இச்சதியம்ஏவஸஜ்ஜன:
தம்ஏவபவந்தம்பந்தும்இச்சதி
பந்துஎன்றசொல்லின் ( உறவினன், கட்டுதல்என்ற )இரட்டைஅர்த்தத்தில்ஒருஅழகானவாக்கியம்.
"எவனைசாதுக்கள்தம்பந்துவாகக்கருதுகிறார்களோஅப்படிப்பட்டஉன்னைக்
கட்டுவதற்குவிரும்பினாள். "
இதை தேசிகர் கீழ்கண்டவாறு வர்ணிக்கிறார்.
ஆநீதம் அக்ரே நிஜ பந்தனார்த்தம்
தாமாகிலம் ஸம்ஹிதம் அபி அபூர்ணம்
நிரீக்ஷ்ய நிர்விண்ணதியோ ஜனன்யா:
ஸங்கோச சக்த்யா ஸ பபூவ பந்த்ய:( யாத. 4.34)
தன்னைக் கட்டுவதற்கு எடுத்து வரப்பட்ட கயிறுகள் ஒன்றுக்கொன்று பிணைக்கப்பட்டும் போதாததாக இருந்ததால் அதைக் கண்டு வருந்திய தாய்க்கிரங்கி தன்னைக் குறுக்கிக் கொண்டு கட்டுப்பட்டானாம் .
பக்த்யாதுஅனன்யயசக்ய: - பக்தியைத்தவிரவேறுஎதுவும்என்னைக்கட்டுப்படுத்தாதுஎன்றுகூறியவன்அல்லவா? அத்னால்தானேஸஹதேவனால்அவனைக்கட்டமுடிந்தது.
கண்ணன்உரலில்கட்டுண்டதைபக்தர்கள்பலவிதமாகஅனுபவிக்கிறார்கள்.,
லீலாசுகர்கூறுகிறார் .
வரம்இமம்உபதேசம்ஆத்ரியத்வம்
நிகமவனேஷுநிதாந்தசாரகின்னா:
விசுனுதபவனேஷுவல்லவீனாம்
உபனிஷதர்த்தம்உலூகலேநிபத்தம்
வேதமாகியகாட்டில்அலைந்துகளைப்படைந்தவர்களே , இந்தஅறிவுரையைக்கேளுங்கள். நீங்கள்தேடும்உபநிடதங்களின்பொருள்இங்குகோபிபவனத்தில்உரலில்
கட்டுண்டுநிற்பதைக்காணுங்கள் .
தேசிகர்கோபாலவிம்சதியில்கண்ணனை'கிமபிப்ரம்மகிசோரபாவத்ருச்யம்', குழந்தைவடிவில்உள்ளப்ரம்மம்என்கிறார்.
மேலும்யாதவாப்யுதயத்தில் ,
கண்ணன்பயப்பட்டதைநினைந்தால்நமதுபயம்போகும்.. அவகட்டுண்டதைநினைத்தால்நமதுகட்டுவிலகும் . இதனால்எதைநினைக்கிறோமோஅப்படியேஆகிவிடுவோம்என்கிறதத்க்ரதுந்யாயம்என்பதாவதுஉபநிஷத்தாகியஅரணியத்தில்போய்ஒளிந்துகொண்டுவிட்டதுஎன்கிறார்.
கண்ணனின்எந்தலீலையைநினைந்தாலும்அதன்பலன்எதிர்மறையாகஇருக்கும். தத்க்ரதுந்யாயம்என்பதுஉபநிடதங்களில்சொல்லப்பட்டது. அதாவதுஒன்றைதீவிரமாகநினைந்தால்நாம்அப்படியேஆகிவிடுவோம்என்பது. ஆனால்இங்குஅதுஎடுபடாததால்நாணம்கொண்டுதத்க்ரதுந்யாயம்ஆரண்யகத்தில்அதாவதுகாட்டில்ஓளிந்துகொண்டுவிட்டதுஎன்பதுஇதன்பொருள் . ஆரண்யகம்என்பதுஉபனிஷதங்களின்இன்னொருபெயர்.
சுகர்கூறுகிறார்
நேமம்விரிஞ்சோநபவோநஶ்ரீரபிஅங்கஸம்ஶ்ரயா
ப்ரஸாதம்லேபிரேகோபீயத்தத்ப்ராபவிமுக்திதாத்
முக்திஅளிக்கும்அவனிடம்இருந்துயசோதைஎந்தஅனுக்ரஹத்தைப்பெற்றாளோஅதைப்பிரமனும், சிவனும், அவன்மார்பிலுறையும்திருமகளும்கூடஅடையவில்லை.
இதையேதமிழ்த்யாகய்யர்என்றுபுகழப்பட்டபாபனாசம்சிவனும் ,
பிரமனும்இந்திரனும்மனதில்பொறாமைகொள்ள
உரலில்கட்டிவாய்பொத்திக்கெஞ்சவைத்தாய்கண்ணனை ,
என்னதவம்செய்தனையசோதா , என்கிறார்
No comments:
Post a Comment