**
தப்பான குருவும் தப்பா (த)ன
******************
சிஷ்யர்களும்
****-*********
குரு சிஷ்ய பாவம் மிகமிக உயர்ந்தது
மாதா பிதா குரு...
என்று குருவை மேலேவைத்துள்ளார்கள்
அதாவது தாயை ஏமாற்றலாம்
தந்தையையும் சற்று முயற்சித்து பாசத்தால் பேச்சால் ஏமாற்றிவிடலாம்
குருவை ஏமாற்றலாமோ?
கடவுளை ஏமாற்றவே முடியாது
வித்யைஅடையும் முறையை இப்படிச்சொல்கிறார்கள்...
குருவிற்கு பணிவிடைசெய்து வித்யையை அடைவாயாக
குருசிஷ்ரூஷயா வித்யா...
பணிவிடைசெய்து வித்யை பெறு
நம்தேசமே..
இந்த முறையில்தான் 200ஆண்டுகள் முன்வரையிருந்தது
இதுவே ஸ்ரீவித்யா க்ரமத்திற்கும் எடுக்கப்பட்டுள்ளது...
மற்ற வித்யைகளை பணம் தந்து அடையாளாமாம்
ஸ்ரீவித்யையை அப்படி அடையக்கூடாதென நான் சொல்லாமல்...
அதற்கான ஆதாரஸ்லோகத்துடன் விவரிக்கமுயல்கிறேன்...
பணத்தை பெற்றுஸ்ரீ வித்யைதந்தாலோஸ்ரீ வித்யைதந்து பணம்பெற்றாலோ அதை விக்ரீத வித்யையென்பர்....
அதாவது விற்கபடும் வித்யை
இதுகூடாதாம்...
(ஸ்வல்பம் வா பஹுளம்
சிஷ்ய த்ரவ்யம் குரு:ஸ்வயம்
க்ருஹீத்வா மந்த்ரமாதத்தே
விக்ரீதம் ததுதாஹ்ருதம்)
பணசம்பந்தப்பட்டஸ்ரீ வித்யாதிமந்த்ரங்கள் ராஜசம் எனப்படும்
நாம் குருவுக்கு ஒருவித்யைசொல்லிக்குடுத்துஅதற்குபதிலாக
(பண்டமாற்றம்போல்)அவர் ஒரு ஸ்ரீவித்யை உபதேசிப்பதும் தவறே(வித்யயா வித்யா என்பர்)
அதை தாமசமென்பர்
ராஜசம் சைவ தத்வித்யா
போகதம் புவி புத்ரக
வித்யா ப்ரதிநிதிம் வித்யா
யத் தத்தம் தாமசம் மதம்
காமவசப்படுத்தி மயக்கி ஏமாற்றி பெறும் வித்யை
ராக்ஷ ஸ வித்யை
குருவை போகமேற்றி ..பொய்புகழ்சிசெய்து தன் குடும்பம்.சொந்தம் உடன் பிறப்பிற்க்கு பெற்றுதரும் வித்யை
பைசாச வித்யா...
.
ஸ்ரீவித்யா பாதுமாம் ஸதா
----******************************
No comments:
Post a Comment