Monday, June 14, 2021

Buttermilk instead of coffee - Periyavaa

___________________________________
*ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர*

*தெய்வத்தின் குரல்*

( *1721*)                      *22.02.2021*

*கோ ஸம்ரக்ஷணம்*  
(பசு பராமரிப்பு)
-பகுதி - *12*
_________________________
*முற்காலத்தில் நடந்த பசு பராமரிப்பு*
_________________________
*தேசியச் செல்வம்*
_________________________
*காபியில் பாலை வீண் செய்ய வேண்டாம்*
_________________________
*நெய்த்தீபம்* 
__________________________

*ஸ்ரீமஹாபெரியவா*

Volume 7.                          பக்கம் 458

 ****************************************

தெய்வத்தின் குரல் - ஏழாம் பகுதி*
*(*மஹா பெரியவா அருளுரை*)*

*கோ ஸம்ரக்ஷணம்*  
(பசு பராமரிப்பு)
-பகுதி - *12*

*முற்காலத்தில் நடந்த பசு பராமரிப்பு*
(நேற்றைய சில உரைகள் மீண்டும்)

அநேக க்ராமங்களாக இருந்தவை உருமாறித்தான் இன்றைய சென்னை மாநகராகியிருக்கிறது. இப்போது மந்தைவெளி என்று இருக்கிற பேட்டை ஆதியில் மேய்ச்சல் பூமியாகவே இருந்திருக்கிறது. அமிஞ்சிக்கரையை அமைந்த கரை என்கிறார்களே, அது மந்தைக்கரை குளமாகத்தான் இருந்திருக்க வேண்டும்.

முன்னாளில் மாடுகளிடம் எத்தனை அபிமானம் காட்டி அதை ரக்ஷித்தார்கள் என்பதற்கு ஒரு சான்று சொல்கிறேன். மனிதர்களாகப் பிறந்தவர்கள் கடைத்தேறுவதற்காக செய்யவேண்டிய தர்மங்களை எண்-நான்கு- அதாவது முப்பத்திரண்டு – அறங்கள் என்று சொல்லியிருக்கிறது. அதை இரட்டிப்பாக்கி அறுபத்துநாலு தர்மங்கள் என்றும் சொல்வதுண்டு. அவற்றில் ஒன்றாக 'ஆதீண்டு குற்றி நிறுவுதல்' என்பதைச் சொல்லியிருக்கிறது. அது என்ன? ஒரு கோவுக்கு உடம்பிலே அரிக்கிறது. நமக்கு எங்கே அரித்தாலும் நாம் கையை வளைத்துச் சொறிந்து கொள்கிறோம். கோவோ பின்னங்காலைக் கொண்டுதான் சொறிந்து கொள்வது. அப்போது சில இடங்களில் அரித்தால் அதற்கு ஸரியாக சொறிந்து கொள்ள வராது. அந்த மாதிரி ஏற்படும்போது அது அரிப்பெடுக்கிற பாகத்தை நேரே வைத்துத் தேய்த்துச் சொறிந்து கொள்வதற்கு வாகாகக் கல்லை நட்டு வைப்பதுதான் 'ஆதீண்டு குற்றி நிறுவுதல்'. ஆங்காங்கே இந்த மாதிரி நட்டு வைத்தார்கள். அந்த வழியில் போகிற மாடுகள் அவற்றில் சொறிந்து கொண்டு தினவு தீர்ந்தன. இப்படிச் சின்ன விஷயங்களைக்கூடப் பரம தர்மமாக நினைத்து கோவுக்குச் செய்த தேசத்தில் நாம் அதை எலும்பும் கூடுமாக்குகிறோம், வதையாவதற்கு விடுகிறோம் என்றால் அது நமக்குப் பெரிய அபக்யாதி.
பாகம் முடிவு.

 *தேசியச் செல்வம்*
(இன்றும் ஒரு முறை)

கோ ஸம்ரக்ஷணை பற்றிச் சொல்லும்போது பசு மடங்கள் என்ற கோசாலை நிறைய வைத்துப் போஷிக்கும் நம் பக்கத்து நகரத்தாருக்கும் பிஞ்ஜராபோல் என்று வைத்து நடத்துகிற வடக்கத்திக்காரர்களுக்கும் நன்றி சொல்ல மறக்கக்கூடாது. பழையநாளில் கோவின் வயிற்றுக்கு யதேஷ்டமாகப் போடவே மேய்ச்சல் பூமிகளைப் பராமரித்தார்கள். 'டவுன் லைஃப்' என்பது வந்து விட்டதில் எங்கே பார்த்தாலும் தோட்டமா, துரவா, வயலா இல்லாமல் கட்டிடங்களும் ஆஃபீஸ்களுமாகி விட்டன. இந்த உத்பாதத்தில் மநுஷ்யனுக்கு அத்யாவச்யமான ப்ராணவாயுவுக்கே குறைபாடு வந்துவிட்டது என்று இப்போதிப்போதுதான் அரசாங்கத்தார் கொஞ்சம் கண்ணை முழித்துக்கொண்டு அங்கங்கே காலியிடங்கள், பார்க்குகள், விளையாட்டு மைதானங்கள் இருக்கப் பண்ணுவதில் கொஞ்சம் முனைப்புக் காட்டி வருகிறார்கள். நகரவாஸிகளுக்கு இவற்றையே lungs – ச்வாஸகோசம் – என்று சொல்கிறார்கள். அந்த 'லங்க்'ஸுடனேயே கோவின் வயிற்றுக்கும் இடம் தந்து அங்கங்கே மேய்ச்சல் பூமிகளும் ஏற்படுத்த வேண்டும்.

பசுவை தேசீயச் செல்வம் என்றே சொல்ல வேண்டும். பால் வற்றின பின்பும் அது செல்வந்தான். பால் வற்றினாலும் அது ஆயுஸ் உள்ளவரையில் சாணம் கொடுத்துக்கொண்டுதானே இருக்கிறது? அந்தச் சாணம் எருவாகப் பிரயோஜனப்படுகிறது. இப்போது புதிதாக 'கோபர் காஸ்' என்று அதிலிருந்தே எரிவாயுவும் எடுக்கிறார்கள்.

ஆனால் கோ ஸம்ரக்ஷணம் – பசுவின் பராமரிப்பு – என்பது பொருளாதார முறையில் வரவுக்கும் செலவுக்கும் ஸரியாக ஈடுகட்டுகிறதா, லாபம் கிடைக்கிறதா என்றெல்லாம் பார்த்து மட்டும் நடக்கவேண்டிய வியாபார காரியமல்ல. முன்னேயே சொன்ன இந்த லௌகிகத்தோடு மட்டும் கோ நின்றுவிடாமல் தெய்விக, வைதிக ஸம்பந்தமுள்ளதாகவுமிருக்கிறது. லௌகிகத்தை விடவும் இந்தப் பெருமைதான் அதற்கு முக்யமானது. ஆகையால் தாயைப் பராமரிப்பது போலவும் தெய்வத்தாயைப் பூஜிப்பது போலவும் கோ ஸம்ரக்ஷணத்தை நாம் நினைக்க வேண்டும்.

கோவின் மூலம் நாம் லௌகிகமாகப் பயன் பெறுவதை மட்டுமே கருத்தில் கொண்டு, அப்படிப்பட்ட பயனைக் கொடுக்க அதற்குச் சக்தி இல்லாமல் போகும்போது அடிமாட்டுக்காக விற்பதாக நடப்பதற்கு முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும்.
பாகம் முடிவு.
மேலும் இன்றைய தொடர்ச்சி.......

*காபியில் பாலை வீண் செய்ய வேண்டாம்*

கோவிடமிருந்து நாம் பயன் பெறும் விஷயமாகவும் ஒன்று சொல்ல வேண்டும். உண்மையான பயன், அது தரும் த்ரவியங்களை வைதிக யஜ்ஞங்களிலும் தெய்வகார்யங்களிலும் உபயோகப்படுத்திக் கொள்வதும், அதன் பால், தயிர் முதலானவற்றை நாம் சாப்பிட்டு ஆரோக்ய விருத்தி பெறுவதுந்தான். ஆனால் துர்பாக்யவசமாக நடப்பது என்னவென்றால் *ஆரோக்யத்துக்கு ஹானியான காபிக்குத் தான் இப்போது பாலில் பெரும்பகுதி போகிறது. அம்ருத துல்யமான பாலை உடம்பு, மனஸ் இரண்டையும் கெடுக்கும் விஷ வகையான கஃபைன் சேர்ந்த டிகாக்ஷனோடு சேர்த்து வீணடிக்கிறோம். பசு ரக்ஷணம் போலவே ஆத்ம ரக்ஷணத்திலும் ஜனங்கள் கவனம் செலுத்தி, காபி குடிக்கிற கெட்ட பழக்கத்திலிருந்து தங்களை விடுவித்துக் கொள்ள வேண்டும்*.

*பலமுறை காபி குடிப்பதற்குப் பதில் அந்தப் பாலில் ஒரு பாகம் கோயில் அபிஷேகத்துக்கும், ஒரு பாகம் ஏழை நோயாளிகளுக்கும் ஏழைக் குழந்தைகளின் வயிற்றுக்கும் போகுமாறு செய்யவேண்டும்*. பால் ருசியே காணாமல் நோஞ்சான்களாக லக்ஷக்கணக்கான ஏழைக் குழந்தைகள் இருக்கும்போது, நினைத்தபோதெல்லாம் பல பேர் காபி ருசி பார்ப்பது ஸமூஹத்துக்குச் செய்கிற த்ரோஹமாகும்.

காபிக்குப் பதில் காலை வேளையில் மோர்க்கஞ்சி சாப்பிடலாம். 'தக்ரம் அம்ருதம்' என்று சொல்லியிருக்கிறது. 'தக்ரம்' என்றால் மோர்தான். ஒரு பங்கு பாலிலிருந்து அதைப் போல் இரண்டு மூன்று பங்கு மோர் பெறலாமாதலால் இது சிக்கனத்துக்கும் உதவுவதாக இருக்கிறது. சில பேருடைய தேஹவாகுக்குப் பால் ஒத்துக்கொள்ளாது; பேதியாகும். அப்படிப்பட்டவர்களுக்கும் ஏற்றதாக கோமாதா அந்தப் பாலிலிருந்தே இந்த மோரை அருள்கிறாள். கொழுப்புச் சத்து சேரக்கூடாத ரோகங்களுக்கு ஆளாகிறவர்களும் வெண்ணெய் கடைந்து எடுத்து விட்ட மோர் சேர்த்துக் கொள்ளலாம்.
பாகம் முடிவு.

*நெய்த்தீபம்*

யஜ்ஞம் குறைந்து போனதால் அதற்கு நெய் செலவிடவும் இப்போது வாய்ப்பு குறைந்துவிட்டது. ஆனாலும் தெய்வ கார்யங்கள் இப்போதும் அகத்துப் பூஜை, கோயில் பூஜை, மடாலயங்களில் பூஜை என்ற ரூபத்தில் நடந்துவருவதால் நெய்த்தீபம் ஏற்றும் வழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளலாம். நாமே பால் தோய்த்து வெண்ணெய் எடுத்து சுத்தமான பசு நெய் தயாரித்துக் கோயில்களுக்கும், மடாலயங்களுக்கும் கொடுப்பது பரம புண்யம். நெய் விளக்கின் ஜ்யோதிஸ் வெளுப்பாக வெளியே வீசுகிற மாதிரியே உள்ளுக்குள்ளேயும் பவித்ரத்வத்தை ஊட்டும். தெய்வ ஸந்நிதானத்தில் அது இருப்பது ரொம்பவும் விசேஷம். கோயில்களில் சுக்ரவாரங்களிலாவது நெய்த் தீபம் எரியுமாறு ஏற்பாடு செய்யவேண்டியது பக்தலோகத்தின் கடமை. கோமாதா நமக்குப் பல விதங்களிலும் பரம கருணையோடு செய்ய முன் வரும் உபகாரங்களில் எதையும் நாம் தவறவிடாமல் உபயோகப்படுத்திக் கொள்ள வேண்டும். இப்போது நாம் அவளிடமிருந்து பெறவேண்டியதையும் தவறவிட்டு, அல்லது தப்பான முறையில் பயன்படுத்திக் கொண்டு, அவளுக்கு நாம் தர வேண்டிய ரக்ஷணையும் தவறவிட்டுக் கொண்டிருக்கிறோம்.

இப்படியில்லாமல், பரஸ்பரம் பாவயந்த: என்று பகவான் கீதையில் சொன்ன மாதிரி* பரஸ்பரம் நாமும் கோவும் ஒருவரையொருவர் போஷித்துக் கொள்ள வேண்டும். *கறவைக் காலத்தில் கோவுக்கு நாம் தருகிற போஷாக்கை விட கோவினால் நாம் பெறுகிற போஷிப்பு அதிகமாகும். கறவை நின்ற பிறகும் அந்த நன்றி நமக்கு மறக்கவே கூடாது. அதனால் கோவுக்கு ஆயுள் உள்ளவரையில் அதை ரக்ஷிக்க வேண்டும்*. கறவை மாடுகளுக்கு மட்டுமில்லாமல் மறுத்துப் போனவற்றுக்கும் பாதுகாப்புத் தர இப்போது எங்கேயோ சில இடங்களில் மட்டுமுள்ள கோசாலைகளும், பசு மடங்களும், பிஞ்ஜராபோல்களும் பலமடங்கு விருத்தியாக வேண்டும். இதற்காகச் செய்கிற செலவு முழுதும் புண்ய வரவேயாகுமாதலால் அனைவரும் தயங்காமல் தங்கள் பொருளையும், பொருளோடு உழைப்பு, கவனிப்பு ஆகியவற்றையும் இதற்காகத் தாராளமாகக் கொடுக்க முன்வரவேண்டும்.

*இந்த தேசத்தின் புராதனமான கலாசாரத்தில் ஊறி வந்துள்ள கோரக்ஷண தர்மம் நம் ரத்தத்தில் பேச வேண்டும். அப்படிப் பேசி, ஒரு பசு கன்றுக்கு ஊட்டுக் கொடுப்பதற்கு எப்படித் துடித்துக் கொண்டு போகிறதோ அந்தத் துடிப்புடன் நாம் கோஸம்ரக்ஷணையில் முனைய வேண்டும்*.
பாகம் முடிவு.

*மஹா பெரியவா திருவடிகள் சரணம்*
**********************************

*"Deivathin Kural*-Part-7*
*Maha Periyava's Discourses* 

Note: We have now got the essence of this subject for our english readers.*A perfect rendition courtesey by Lt. Col KTSV Sarma  in advaitham.blogspot*. Our thanks.

கோ ஸம்ரக்ஷணம்*
(*பசு பராமரிப்பு*)
*Cow Protection*

*The Way Cows Were Cared for in Ancient Times*
(Repeating few paaraas again)

 What was a number of villages has become the Madras city, in which 'Mandai VeLi' and 'Amainda Karai' were such areas full of ponds, once upon a time, meant especially for cattle to roam about graze and quench their thirst. 

57.          Let me tell you one example of how people used to care for the cattle.  Born as a human being, you were required to observe 32 stipulations or injunctions enjoined on the individual as 'aRangaL' – 'அறங்கள்'.  Doubling that there is another system by which the injunctions were 64!  One of them for example is known as, 'Ãtheendu kurri niruvudal' – 'ஆதீண்டு குற்றி நிறுவுதல்'. What does that mean?  The cow scratches itself using its rear legs only.  Many places of its body cannot be reached by its rear legs.  What can that poor animal do then?  It cannot tell us to do it either as it has no means of expression, being 'Vayilla Jivan' – 'வாயில்லா ஜீவன்'.  So what is done is to install firmly on the ground some stone pillars of irregular edges at suitable places in the open where it will be convenient for the cattle to scratch their bodies as they wish!  It is pathetic that in a country like ours, where we took pains to cater for even such small things as enabling the animal to scratch itself as a Dharma enjoined on the human being in the past, nowadays we are letting them roam about as virtual skeletons, under nourished and uncared for and letting them be killed for beef!  It is a thing to be ashamed of and a sad commentary on our deplorable attitude as individuals and as a nation!
End of chapter

*Nation's Asset*
(Chapter repeated)

58.         While talking about 'Go SamrakshaNam' we have to express our gratitude to some who are organizing and managing 'Go Shãlã' like the Nagaraththar aka Nattukkottai Chettiyars in South India and those who organize 'Pinjra Bhol' in North India, in which they take care of such cattle.  In the olden times to ensure that the cattle are fed well, they used to maintain vast tracts of land for this very purpose as common public properties.  Since almost all places have become cities and metropolitan townships, there is hardly any place left for cattle as grazing grounds in this concrete jungles that towns have become!  At times but very rarely some head of the municipal authorities wakes up to the absence of 'lung space' in the cities and shows some interest in creating gardens and play grounds. This also happens only sporadically in some places.  But the way the world is going, at least in India there is no 'Town Planning' done at all!  Because of the enormous value of 'real estate' there is a lot of under-hand dealings and corruption in land transactions.  At least in the sub-urban areas we should be thinking of creating some grazing grounds for cattle in which ponds should also be dug in suitable sites.

59.          The cow should be declared as a national asset.  Even after it has stopped yielding milk it is an asset only.  Till it is alive, it keeps giving dung isn't it?  That dung is useful as manure in agriculture.  Newly people have found ways of getting Gas out of it, known as 'Gobar Gas'!  This process should be further researched and investigated to make it cost effective.  But 'Go SamrakshaNam' should not be viewed only from the commercial angle.  As said earlier care of the cows instead of remaining at the materialistic and financial stand point should be considered from the Vedic and divine angle.  We should think that to take care of the cow is as good as looking after one's own mother in her old age.  Keeping only the financial returns one is likely to get in mind, treating it like any other commodity, and disposing it off for being butchered after it stops yielding milk, must be stopped henceforth! 
End of chapter
Continuing further from here.......

*Do Not Waste Milk in Coffee*

60.           I have to tell you one more thing about the gains from the cow that we get.  The true value of that is about the various things that it gives which we use in divine worship, Vedic activities of Yagnyas and for our nourishment, such as the milk, curd and ghee.  But unluckily most of that milk is nowadays wasted in adding to coffee which is bad for our health.  The milk that is like the divine nectar is being spoiled in adding to the poisonous caffeine decoction which is harmful to our mind and body.  Like protecting the cow from being sent to the slaughter houses, we have to pay attention to self-protection of 'Ãtma RakshaNam ' – 'आत्म रक्षणं' also and get out of this bad habit of drinking coffee.       
61.          Instead of drinking coffee a number of times, a portion of that milk can be given to temples for Abhishekam of the deities or contributed for poor sick patients and or reach the stomachs of poor children.  Without ever knowing the taste of milk when there are lacks of poor children, having a cup of coffee many times a day is tantamount to a crime against the society.  Instead of coffee in the morning, it is better to drink 'mor kanji' – 'மோர் கஞ்சி'. It is said 'takram amrutam' – 'तक्रं अमृतं', in which 'takram' means butter-milk which is said to be as good as amrutam or nectar that gives immortality.  Since we can get three measures of butter-milk (aka 'மோர்') from one measure of milk/curd, it is more economical too.  Some people by nature cannot drink milk being allergic to 'lactose'.  For such people 'Go Mãtã' sanctions this butter-milk from the milk itself.  For people who are already obese or have such diseases that they are forbidden to consume fat, we can make use of curd from which butter has been churned out, which is also a type of butter-milk only, because it is really fat-free.
End of chapter

'*Neideepam*' – '*நெய்த்தீபம்*'

62.          Since the number of Yagnyas being conducted has drastically come down, the chance of using cow's ghee for that has lessened.  But since Puja in houses, Matams and temples are still in vogue, we could take to lighting up more lamps, which use cow's ghee as the fuel in it.  We could ourselves make curds, churn and take out the butter, melt it, thus preparing clean and pure ghee which can be used at home for 'Neideepam' and also contribute the ghee for usage in Matams and temples.  As the ghee-lamps spread white light all around, they will also light up our inner beings and instil sanctity.  It is very good for such lamps to be lighted in the Sannidy of deities.  We must ensure that at least on Fridays the fuel used in temples are cow's ghee.  What 'Go Mãtã' provides us with all her kindness we must put to effective use.  Now what is happening is that on the one hand we are not making proper use of her services or misusing them while failing in our duties towards her!

63.          Instead of being ignoring and ill-treating each other, we should be mutually supportive of each other, as Bhagawan Sri Krishna said about how Devas and Human beings, (using the phrase ('parasparam bhavayanta:' – 'परस्परं भावयन्त:' Bhagawat Gita, Chapter 3, Sloka 11.), that they should be complimenting each other by words, deeds and kind.  At the time when the cow is yielding milk, the gains and nourishment that human beings get from the cow is much more than what we do in taking care of the cow, like what a child gets from the mother.  Later when the cow is not able to yield milk, like when our mother is too old, we should not be forgetful of what we owe her!  So, it is necessary that we establish many more such organizations which will take proper care of 'Go Shalas', for which people should subscribe in terms of money, effort and physical labour unflinchingly.  This idea of 'Go Rakshana' that is deeply soaked in our blood as an intrinsic Dharma should cause us to get involved actively in this task, exactly like the way a cow aspires and tries hard against all hindrances to run and feed its calf.




*Maha Periyava thiruvadigal Saranam*
***************************************

No comments:

Post a Comment