Thursday, May 20, 2021

Vamana Avatar

**ஸ்ரீமதே ராமாநுஜாய நமஹ... ஸ்ரீமத் வரவரமுநயே நமஹ...* 🙏🙏🙏
      
         *தஸாவதாரம்* 

    *ஸ்ரீவமனாவதாரம்* 

           *பகுதி 04* 

ஓங்கியுலகந்த உத்தமன் பேர்பாடி நாங்கள் நம்பாவைக்குச் சாற்றி நீராடினால் தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரிபெய்து ஓங்குபெருஞ் செந்நெலூடு கயலுகள பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப தேங்காதேபுக்கிருந்து சீர்த்முலைபற்றிவாங்க குடம்நிறைக்கும் வள்ளற்பெரும் பசுக்கள் நீங்காத செல்வம் நிறைந்தேலோரெம்பாவாய்,

அம்பரமேதண்ணீரே சோறேயறஞ்செய்யும் எம்பெருமான் நந்தகோபாலா எழுந்திராய் கொம்பனார்க்கெல்லாம் கொழுந்தே குலவிளக்கே! எம்பெருமாட்டி யசோதாய் அறிவுறாய் அம்பரமூடறுத்தோங்கி உலகளந்த உம்பர்கோமானே! உறங்காதெழுந்திராய் செம்பொற்கழலடிச் செல்வா பலதேவா! உம்பியும்நீயும் உறங்கேலோரெம்பாவாய்.
  

அன்றிவ்வுலகமளந்தாய் அடிபோற்றி சென்றங்குத் தென்னிலங்கைசெற்றாய் திறல்போற்றி பொன்றச்சகட முதைத்தாய் புகழ்போற்றி கன்றுகுணிலாவெறிந்தாய் கழல்போற்றி குன்றுகுடையாவெடுத்தாய் குணம்போற்றி வென்றுபகைகெடுக்கும் நின்கையில் வேல்போற்றி என்றென்றும்சேவகமே ஏத்திப்பறைகொள்வான் இன்றுயாம்வந்தோம் இரங்கேலோரெம்பாவாய்
       
என்று  (ஆண்டாள்) கோதைப்பிராட்டியாரால் திருப்பாவை முப்பது பாசுரங்களில் ஒவ்வொரு பத்து பாசுரங்களிலும் வாமன திரிவிக்கரம(உலகந்த) பெருமாளையே பாடுகிறார். ஒரே அவதாரத்தில் இரண்டு உருவங்களை அதிலும் முரண்பட்ட வகையில் காட்டியருளிய அவதாரம் நம் எக்குலத்தவரானாலும் ஆஸ்திக நாஸ்திகனாலும் நம்மிடம் வேறுபாடில்லாமல் தன் திருவடிகளால் தீண்டி பிரம்மாவால் கங்கையைப் பூமிக்கு கொண்டு வந்த வாமனாவதாரத்திற்குண்டான ஏற்றம் மற்ற அவதாரத்திற்கில்லை. வாமன ஜெயந்தி (திருவோணம்) தமிழகத்தைக் காட்டிலும் கேரளத்தில் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.

வாமனாவதாரத் ஸ்தலங்கள் தமிழகத்தில்...

1, சீர்காழி, தாடளப் பெருமாள்.

2, திருக்கோயிலூர், திரிவிக்கிரம்ப் பெருமாள், (வாமனப்பெருமாள் மாத திருவோணத்தன்று தரிசிக்கலாம்).

3, காஞ்சிபுரம், உலகளந்தப் பெருமாள்.

4, திருநீர்மலை, உலகளந்தப் பெருமாள்.

5, திருவெள்ளியங்குடி, கோலவில்லி ராமர், வாமன சம்பந்தப்பட்டத்தலம்.

கேரள ஸ்தலங்கள்

01, திருக்காட்கரை, திருக்காட்கரையப்பன்.

இத்திருத்தலங்களை 108 திவ்வதேச வரலாற்றில் காணலாம்.

மேற்கண்ட பாசுரங்களைப் பாடி திவ்யதேசங்களை நினைத்து வாமனப்பெருமாளை வணங்கி அருள் பெறுவோம்.

 *ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்* 🙏🙏🙏

 *வானமாமலை  ராமானுஜ ஜீயர் திருவடிகளே சரணம்* 🙏🙏🙏

நாளைமுதல் ஸ்ரீபரசுராமவதாரம்   தொடரும் ....

🙏 *சர்வம் கிருஷ்ணார்ப்பனம்* 🙏*

No comments:

Post a Comment