Monday, February 1, 2021

Respond don't react- positive story

இனிய காலை வணக்கத்துடன்.......
செந்தில்குமார்.
ஆதர்ஷ் வித்யாலயா கல்வி நிறுவனங்கள் அந்தியூர்.
😔👉அவமானம் என்பதும் ஒரு வித மூலதனமே💪👈

*மன்னரின் அரசவைக்கு...*
ஒருவர் தான் ஆரம்பிக்க இருக்கும் கல்லூரிக்கு நிதி கேட்டு வருகிறார்.

" நிதி தானே ..இந்தா என தன் காலில் இருந்த ஷூவை வந்தவர் மேல் வீசி எறிந்தார்.

எதிர்பாராத நிகழ்வால் நிலைகுலைந்தாலும்..ஒருபக்கம்
அவமானம்..மனதை கஷ்டப்படுத்தியது.

இருந்தாலும் ஒரு நல்ல விஷயத்துக்காகத் தானே அவமானப்படுகிறோம்..என 
தேற்றிக்கொன்டு..மன்னருக்கு நன்றி சொல்லி கிளம்பினார்.

மன்னருக்கு ஒன்றும் புரியவில்லை .

என்னடா நாம் அவமானப்படுத்த ஷூவை வீசினோம்   நன்றி சொல்லி செல்கிறானே....என.

ஒருவரை எப்படி அவமானப்படுத்த முயன்றாலும்..எதிரிலிருப்பவர் தன் நோக்கத்தில் உறுதியாய் இருந்தால் என்ன செய்ய முடியும்

 மேலும் தன்மேல் நம்பிககையில்லாதவர்கள் தான்அவமானமாய் உணர்ந்து எமோஷன் ஆவார்கள்.

வெளியில் ஒரே சத்தம் ..அமைச்சரை அழைத்த மன்னர் என்ன அங்கே..என்றார்

நீங்க எறிந்த ஷூவை ஏலம் போடுகிறான் மன்னா..கல்லூரி கட்ட மன்னர் தந்த ஷூ..என்றே கூவுகிறான்! என்றார்

எவ்வளவு போகிறது...

படு கேவலமாய் பத்து நாணயத்துக்கு மேல் ஏலம் போகவில்லை என்றார்..

அய்யய்யோ..என்ன விலையானாலும் ஏலம் எடு...

அமைச்சரும் ஐம்பது லட்சம் கொடுத்து எடுத்தார்..

நிதி கேட்டு வந்தவர் மீண்டும் மன்னரிடம் வந்தார்.

மன்னா நீங்கள் போட்ட ஷூ பாதிகட்டிடம் கட்ட கிடைத்து விட்டது 

அடுத்த ஷூவை எப்போது போடுவீர்கள் என்றார் பாருங்கள்

மன்னர் வந்தவரின் சாமார்த்தியத்தையும்.. சகிப்புத்தன்மையையும் எண்ணி...தாமே கல்லூரியை கட்டித்தந்தார்.

அது தான் தற்போதைய காசி பனாரஸ் பல்கலைக்கழகம்.

அவமானத்தை யார் ஒருவர் அவமானமென உணர்கிறார்களோ
அவர்கள் ஒருநாளும் எதையும்
ஜெயிக்க முடியாது.

எப்போதும் நோக்கம் நிறைவேறுவது தான் முக்கியம்.

மான அவமானங்களல்ல...

நாம் செய்வது நல்லதாய் இருக்க வேண்டும்.

ஒவ்வொரு அவமானமும் வெற்றிக்கான படிக்கட்டுக்கள்
என எண்ணுவோம்.

எந்தவொரு வளர்ச்சியையும் நீண்ட நாட்கள் யாராலும் தடுத்து நிறுத்த முடியாது... 
.
.

அந்த காலணி வீசப்பட்டது *திரு. மதன் மோகன் மாளவியா* அவர்கள் மீது... "அவர் தான் பனாரஸ் பல்கலைக் கழகத்தை நிறுவியவர்"

No comments:

Post a Comment