*"வேலி இல்லாத கருணை" - பெரியவாளுக்கு*.
ஊனமுற்ற ஹரிஜனப் பெண் குழந்தைக்கு, பக்தர் மூலமாக யூனிஃபார்ம் கொடுத்த சம்பவம்.
ஒரு சிறு பதிவு - ஆனால் சிறந்த பதிவு!
பெரியவாள் சென்னையில் முகாமிட்டிருந்த போது நடந்த சம்பவம்.
ஒருநாள் பிற்பகல், ஓர் அன்பருடைய இல்லத்துக்குப் போய்க் கொண்டிருந்தார்கள்.
வழியில் ஒரு கான்வென்ட். பிற்பகல் வகுப்பு முடித்து, மாணவ-மாணவிகள் வெளியே வந்து கொண்டிருந்தார்கள். பணக்கார வீட்டுக்குழந்தைகள் கார், சிற்றுந்து, சைக்கிள் ரிக்ஷா என்று பல வாகனங்களில் வீட்டுக்குத் திரும்பிப்
போய்க் கொண்டிருந்தார்கள்.
ஒரு சிறுமி மட்டும் (ஊனம் போலும்). நொண்டி, நொண்டி நடந்து போய் கொண்டிருந்தாள். சீருடை கிழிந்திருந்தது. ஏழை, ஹரிஜனக் குழந்தையாக இருக்கலாம் என்று தோன்றியது.
பெரியவாள், அந்தச் சிறுமியைப் பார்த்தார்கள்.
அவர்களுடன் வந்து கொண்டிருந்த ஹோட்டல் முதலாளியான, நாதன் என்பவரை அழைத்தார்கள்.
"இந்தக் குழந்தைக்கு ரெண்டு செட் யூனிஃபார்ம் வாங்கிக் கொடுத்து, உன் காரில் ஏற்றிக் கொண்டு போய், அதன் வீட்டில் விட்டுட்டு வா"---- பெரியவா.
நாதன், பெரியவாள் உத்தரவைப் பரம பாக்கியமாகக் கருதி, அவ்வாறே செய்து விட்டு வந்தார்.
வேலி இல்லாத கருணை - பெரியவாளுக்கு.
No comments:
Post a Comment