கீதாஞ்சலி 50 J K SIVAN
தாகூர்
50. ''நானே உனக்கு தான் ''
50. I had gone a-begging from door to door in the village path, when thy golden chariot appeared in the distance like a gorgeous dream and I wondered who was this King of all kings!
My hopes rose high and me thought my evil days were at an end, and I stood waiting for alms to be given unasked and for wealth scattered on all sides in the dust.
The chariot stopped where I stood. Thy glance fell on me and thou camest down with a smile. I felt that the luck of my life had come at last. Then of a sudden thou didst hold out thy right hand and say `What hast thou to give to me?'
Ah, what a kingly jest was it to open thy palm to a beggar to beg!I was confused and stood undecided, and then from my wallet I slowly took out the least little grain of corn and gave it to thee.
But how great my surprise when at the day's end I emptied my bag on the floor to find a least little gram of gold among the poor heap. I bitterly wept and wished that I had had the heart to give thee my all
நான் என்ன சொல்வேன்!! கிராமத்து புழுதி தெருக்களில் வீடு வீடாகப் போய் நான் யாசித்து உன் புகழ் பாடிக்கொண்டு செல்பவன். திடீரென்று என் எதிரே பெரிய ஊர்வலம்... பெரிய தங்கத் தேர் வந்தது. ... பளபள என்று கண்ணைப் பறித்தது.... அதனுள்ளே கம்பீரமாக வீற்றிருக்கும் ராஜாதி ராஜன் யார் என்று அதிசயித்தேன். ஒரு ஓரமாக ஒதுங்கி வழிவிட்டு நின்றேன். அருகில் வந்தபிறகு தான் தெரிந்தது நீ தான் அந்த ராஜாதி ராஜன் என்று. நான் என்ன கனவா காண்கிறேன்?
ஆஹா என் நம்பிக்கை வலுத்தது. என் கஷ்டங்கள் என் துன்ப தினங்கள் விலகிவிட்டன. இனி நான் பிக்ஷைக்கு சென்றால் தானாகவே எல்லாம் கிடைக்கும். எங்கும் புழுதி கிடக்க ,என் கண்ணுக்கு மட்டும் செல்வம் மலை மலையாகி குவிந்திருப்பது தெரிகிறதே ......
என்ன ஆச்சர்யம். நான் நிற்கும் இடத்தில், என் எதிரே உன் தங்கத்தேரும் நின்றது. தலையை வெளியே நீட்டி என்னை பார்த்துவிட்டு தேரிலிருந்து இறங்கி அருகில் வந்தாய். அடடா என்ன அழகு நீ. அந்த காந்த புன் சிரிப்புக்கு இணை ஏது? எனக்கு வாழ்வில், என் கடைசி காலத்தில் எதிர்பாராத அதிருஷ்டம் கிடைத்து விட்டது.
ஆஹா! இது என்ன ஆச்சர்யம் கிருஷ்ணா. நீயா இப்படி செய்கிறாய்? திடீரென்று கையை என் பக்கம் நீட்டி ''எனக்குத் தர நீ என்ன வைத்திருக்கிறாய்? '' என்று கேட்கிறாயே. இப்படி யாராவது விளையாடுவார்களா? எவ்வளவு பெரிய சர்வ சக்தி வாய்ந்த மஹா ராஜா, சக்ரவர்த்தி நீ, என் போன்ற பிச்சைக்காரனிடம் கை நீட்டி என்ன தருவாய் எனக்கு.... என்று .....கேட்கிறாய்... எனக்கு தலை கால் புரியவில்லை. மதி மயங்கிவிட்டது. விரைந்து என் ஜோல்னா பையை துழாவினேன். ஒரு சில தானியங்கள் சிதறி இருந்தன. ஒன்றிரண்டு எடுத்து உன் கையில் ஒரு இயந்திரமாக வைத்தேன். சந்தோஷமாக வாங்கிக்கொண்டு போய் விட்டாய். உன் தேர் பறந்துவிட்டது. நான் கனவா காண்கிறேன்!
சாயந்திரம் வரை இதே, உன் நினைவுதான். என்னால் உனக்கு ஒன்றும் கொடுக்க இயலவில்லையே என்ற வருத்தம் என்னை கண்ணீர் பொழிய வைத்தது. வழக்கம் போல் எங்கெங்கோ சுற்றிவிட்டு என் குடிசைக்கு திரும்பினேன். யாசித்தது, எல்லாவற்றையும் வழக்கம்போல் தரையில் கொட்டினேன். என்ன கிருஷ்ணா இப்படி செய்திருக்கிறாய்? எங்கிருந்து ரெண்டு மூன்று தங்க கட்டிகள் என் யாசகப்பையில் வந்தடைந்தன.
அப்போது எனக்கு சந்தோஷமாக இல்லை. அழுகை பொங்கி வந்தது. ''அடே மடையா, உன்னை அப்படியே பிடுங்கி கிருஷ்ணனுக்கு கொடுக்க தோன்றவில்லையே உனக்கு . நல்ல சந்தர்ப்பத்தை கோட்டை விட்டு விட்டாயே ''என்று என் இதயம் கேட்கிறதே. அது வெடித்து விடுமோ?.
சாயந்திரம் வரை இதே, உன் நினைவுதான். என்னால் உனக்கு ஒன்றும் கொடுக்க இயலவில்லையே என்ற வருத்தம் என்னை கண்ணீர் பொழிய வைத்தது. வழக்கம் போல் எங்கெங்கோ சுற்றிவிட்டு என் குடிசைக்கு திரும்பினேன். யாசித்தது, எல்லாவற்றையும் வழக்கம்போல் தரையில் கொட்டினேன். என்ன கிருஷ்ணா இப்படி செய்திருக்கிறாய்? எங்கிருந்து தங்க தானியங்கள் என் யாசகப்பையில் வந்தடைந்தன. என் மனம் உடைந்து விட்டது கிருஷ்ணா. நீ கேட்கும்போது நான் ஏன் அப்படியே என்னையே என் பையோடு சேர்த்து உனக்கு அளிக்கவில்லை?
கீதாஞ்சலி 53 J K SIVAN
தாகூர்
53. நந்தகமே ஆனந்தம்
53. Beautiful is thy wristlet, decked with stars and cunningly wrought in myriad-coloured jewels.
But more beautiful to me thy sword with its curve of lightning like the outspread wings of the divine bird of Vishnu,
perfectly poised in the angry red light of the sunset.
It quivers like the one last response of life in ecstasy of pain at the final stroke of death;
it shines like the pure flame of being burning up earthly sense with one fierce flash.
Beautiful is thy wristlet, decked with starry gems;
but thy sword, O lord of thunder, is wrought with uttermost beauty, terrible to behold or think of.
கண்ணா, உன் மணிக்கட்டில் அணிந்தி ருக்கும் காப்பு, வர்ணஜாலங்களை கொப்புளிக்கும் ஒளிவீசும் கற்கள் பதித்ததாக இருக்கிறதே. அழகான நக்ஷத்ரங்களா அவை? உன் அழகுக்கு அழகூட்டுகிறதே.
ஆனால் எனக்கென்னவோ உன் வாள் ஒன்றே மனதை மயக்குகிறது. ஆஹா என்ன அழகான வளைவு அதன் நுனியில், கூர்மை, தீட்டப்பட்ட அதன் முனை மின்னல் போலவோ கண்ணை குருடாக்குகிறது. மஹா விஷ்ணுவின் கருடன் ரெக்கை விரித்து பறக்கும்போது தோன்றும் அதே அழகு. இந்த மாலை வெயில், பொன்னி றத்தில், எல்லாமே தங்கமாக முலாம் பூசப்பட் டிருக்கிறதே, அப்போது உன் வாளின் ஒளி அந்தி வான கோபசிவப்புக்கு ஈடு.
மரண காலத்தில் வலியில் வாழ்க்கை முடியும் முன்னே, உயிர் நீங்குமுன் உடல் ஊசலாடி நடுங்குமே அது போல் அல்லவோ உன் கூரிய வாள் முனை துடிக்கிறது. அக்னி பிழம்பு போல் உலக பந்தத்தை ஒரு மின்னல் வெட்டாக எரிக்கும் சக்தி வாய்ந்தது.
உன் மணிக்கட்டு காப்பு அழகு தானடா கிருஷ்ணா. நக்ஷத்ர நவமணிகள் ஜொலிக்க கண்ணைப்பறிக்கிறது. இருந்தாலும், எனக்கு, ஹே மேகராஜா, உன் வாள் தான் ரொம்ப ரொம்ப ரொம்ப அழகு, நினைத்தாலே கதி கலங்க வைக்கும் கம்பீரம், அழகு, கூர்மை, ஒளிமயம்....
No comments:
Post a Comment