இராமானுஜர் வாழ்க்கை வரலாறு - பதிவு 39
வைணவத்தில் உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற வேறுபாடு கிடையாது. பெருமாளுக்கு அனைவரும் சமம் என்ற சமூகநீதியை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உலகத்திற்கு முதன்முதலில் உரக்க உரைத்த இந்த மகான் திருவடிகளுக்கு அடியேன் சரணம்
வாழி எதிராஜன்!..
வாழி எம்பெருமானார்!..
சொல்லுவோம் அவன் நாமங்களே..
திருக்கோட்டியூர் நம்பிகள் இராமானுஜரிடம் போட்ட புதிர்கள் பதினெட்டு இரகசியங்களாக வெளிவருகிறது. பதினெட்டு இரகசியங்களில் ஒன்பதாவது இரகசியம்.
🍁🍁 ஒன்பதாவது பயணம் ஒன்பதாவது இரகசியம்
"அர்த்த, காம, ராக தோஷம் அற்று வாரும்!"
அர்த்தத்தில் (சொத்து சுகம்) ஆசை கூடாது. காமத்தில் ஆசை கூடாது. மனதை அவ்வளவு சீக்கிரம் அடக்க முடியாது. காமமும், குரோதமும் ஒரு தாய் வயிற்றின் பிள்ளைகள் போலே.
காமம் என்றால் ஒரு விசயத்தைப் பார்த்ததும் ஆசைப்படுகிறோமே அதுதான் 'காமம்'. குரோதம் என்பது அந்த விசயத்தை நாம் செய்ய முயற்சிக்கும் போது ஒருவர் தடை படுத்துவது. "இதை எல்லாம் தொலைத்து வாரும்" என்று சொல்லி அனுப்பினார் திருக்கோட்டியூர் நம்பிகள்.
ஸ்ரீரங்கம் வந்த இராமானுஜர் தம்மிடம் காமம், குரோதங்களில் ஆசை இருக்கிறதா இல்லையா என்பதை யோசித்தார்.
தன்னிடம் அப்பேர்ப்பட்ட குணங்கள் இல்லை என்று தெரிந்ததும் பத்தாவது முறை திருக்கோட்டியூர் புறப்பட்டார் இராமானுஜர். திருக்கோட்டியூர் நம்பிகளிடம் சென்று தன்னிடம் அர்த்த, காம, ராக துவேஷங்கள் இல்லை என்றார். மேலும், தான் கற்று தெளிந்த அனைத்தையும் ஒப்புவித்தார்:
#ஒட்டுண்ணிகளுக்கு_சக_ஒட்டுண்ணியின் வணக்கம் !!
இறைவனோடே ஒட்டி !!
இறைவனையே சுவாசித்து !!
இறைவனையே உண்டு !!
இறைவனோடே ஓடிய இன்னொரு ஒட்டுண்ணியை புணர்ந்து !!
ஒட்டுன்னியையே பெற்று !!
எப்படி இறைவனை உண்ணவேண்டும் என்று கற்றும்கொடுத்து !!
இந்த ஒட்டுண்ணி தன் தன்மையிழந்து வேறுவொரு ஒட்டுண்ணியாய் வாழ்ந்துகொண்டே இருக்கிறது !!
இதில் நான் சிறந்த ஒட்டுண்ணி !!
அது சரியில்ல ஒட்டுண்ணி என்று சண்டை வேறு ????
எல்லாமே ஒட்டுன்னிதான் !!!
ஒட்டிக்கொண்டு இருப்பதும் ஒரே இறைவனிடத்தில் தான் !!
உணர்வார் ஒட்டியயிடத்தின் அருமையில் உருவார் !!
ஒட்டலை உணர்த்திய இறைக்கு நன்றியுடன் !!
எல்ல ஒட்டுண்ணிகளுக்கும் ஒட்டியயிடம் உணர்விக்கவேண்டி !!
உணர்த்துபவன் திருவருளுடன் !!
ஒம் நமோ நாராயணாய நம
1. முதல் முறை சம்சார ஜீவன் நசிக்கப் பெற்றேன்.
2. அகங்காரம், மமகாரம் தொலைத்தேன்
3. தேக ஆத்மா அபிமானத்தைத் தொலைத்தேன்
4. ஆத்ம ஞானம் பெற்றேன்
5. ஐஸ்வர்ய கைவல்யங்களை ஒழித்தேன்
6. பகவத் விசயங்களில் ஆசையைப் பெற்றேன்
7. சம்சார விசயங்களில் ஆசையைத் தொலைத்தேன்
8. பகவத் பாரதந்திரியத்தை உணர்ந்தேன்
9. அர்த்த, ராக, காம துவேசங்களைத் தொலைத்தேன்.
"இனி நான் செய்ய வேண்டும்?" என்றார் திருக்கோட்டியூர் நம்பிகளிடம்.
அதைக்கேட்ட திருக்கோட்டியூர் நம்பிகள் புன்னகையித்து பத்தாவது புதிரைப் போட்டார்.
"இப்போ 'ஸ்ரீ வைஷ்ணத்வம்' கிடைத்ததா என்று அறிந்து வாரும்" என்றார். அதன் அர்த்தத்தை நாளைய பதிவில் அறியலாம்.
இன்னும் அனுபவிப்போம்...
உய்ய ஒரேவழி! உடையவர் திருவடி!!
No comments:
Post a Comment