Friday, December 11, 2020

Gitanjali part 46 in tamil

கீதாஞ்சலி    46            J K   SIVAN

தாகூர்

46. அருகில் வாராய்  கண்ணா

46.  I know not from what distant time thou art ever coming nearer to meet me.Thy sun and stars can never keep thee hidden from me for aye.

In many a morning and eve thy footsteps have been heard and thy messenger has come within my heart and called me in secret.

I know not only why today my life is all astir, and a feeling of tremulous joy is passing through my heart.

It is as if the time were come to wind up my work, andI feel in the air a faint smell of thy sweet presence.

கிருஷ்ணா, நீ எங்கோ  வெகுதூரத்தில் இருப்பவன் என்று மட்டும் தெரியும். எல்லோரும் சொல்கிறார்கள். ஆனால்  நீ  கிட்டேயும் இருப்பவன் என்று புரிவதில்லை. ஆகவே   எந்த நேரம் என் அருகில் நீ வருவாய் என நான் அறியேன். நீ படைத்த சூரியன் சந்திரன் நக்ஷத்திரங்கள் உன்னை  நான் பார்க்கவிடாமல் தடுக்க முயன்றாலும் நான் விடமாட்டேன்.  ஆமடா,  என் கண்ணில் நீ படாமல் போக முடியாது.

எத்தனையோ காலை  வேளைகளிலும், சாயந்திரங்களிலும் நீ வரும் காலடி சத்தம் என் காதில்  கேட்டிருக்கிறேன். நீ அனுப்பிய ஆள் என் மனக்கதவை தட்டி உள்ளே புகுந்து ரகசியமாக என்னை கூப்பிட்டதுண்டு.

அனால்  இன்று   ஏனோ என் மனது அளவுகடந்த குதூகலத்தில் ஆடுகிறது.  ஒரு படபடப்பு  நடுக்கம்  இன்றுமட்டும்  ஏன்? எங்கோ ஆகாயத்தில் பறப்பது போல் ஆனந்தத்தில் ஆடுகிறேன்! எங்கும் எதுவுமே சந்தோஷமாக தான் கண்ணில் படுகிறது. என் இதயம் மகிச்சியில் பெருத்து விட்டது.

ஒருவேளை  என் காரியங்கள் எல்லாம் முடிந்து விட்டதோ? என்னை சுற்றிலும் வீசும்  காற்றில் உன் மீதிருந்து பரவும்  சுகந்தம் மெலிதாக மணக்கிறது. ஆம்  எனக்கு  புரிந்துவிட்டது.  இன்று  நீ என்  அருகில் வந்துவிட்டாய் கண்ணா!

கண்ணனை அருகில் இருப்பவன் கூடவே உள்ளவன்  என்று புரிந்துகொண்டுவிட்டால்  அவன்  வெகு தூரத்தில் எப்போதுமே இல்லை. என்னுள்ளே  எப்போதும் என்னுடனே வாழ்பவனை நாம் அறிந்துகொள்ளாவிட்டால் தவறு அவனுடையதில்லை.
கீதாஞ்சலி 48 J K SIVAN
தாகூர்
48. நீயும் நானும் ஒன்று
48. The morning sea of silence broke into ripples of bird songs; and
the flowers were all merry by the roadside; and the wealth of gold was scattered through the rift of the clouds while we busily went on our way and paid no heed.We sang no glad songs nor played; we went not to the village for barter; we spoke not a word nor smiled; we lingered not on the way. We quickened our pace more and more as the time sped by.
The sun rose to the mid sky and doves cooed in the shade. Withered leaves danced and whirled in the hot air of noon. The shepherd boy drowsed and dreamed in the shadow of the banyan tree, and I laid myself down by the water and stretched my tired limbs on the grass.
My companions laughed at me in scorn; they held their heads high and hurried on; they never looked back nor rested; they vanished in the distant blue haze. They crossed many meadows and hills, and passed through strange, far-away countries. All honour to you, heroic host of the interminable path! Mockery and reproach pricked me to rise, but found no response in me. I gave myself up for lost in the depth of a glad humiliation---in the shadow of a dim delight.The repose of the sun-embroidered green gloom slowly spread over my heart. I forgot for what I had travelled, and I surrendered my mind without struggle to the maze of shadows and songs.
At last, when I woke from my slumber and opened my eyes, I saw thee standing by me, flooding my sleep with thy smile. How I had feared that the path was long and wearisome, and the struggle to reach thee was hard!
இன்னும் சூரியன் வந்து விடியவில்லை. காலையின் மௌனக்கடல் எங்கும் கொப்புளித்து பறவைகளின் சப்தஜாலம் அலை ஒலியாக வியாபிக்க, தெருவோரங்களில் புதிதாக பிறந்த குட்டி குட்டி மலர்கள். தங்கம் கம்பிகளாக சிதறி மேகங்களின் ஊடே இருந்து பூமிக்கு பாய்ந்து கொண்டிருக்க, நாம் ஏதோ நினைவாக இதை யெல்லாம் லக்ஷியம் பண்ணாமல் நம் வழியே நடக்கிறோம்.பாடவில்லை, ஆடவில்லை, விளையாடவில்லை, பஜாரில் சென்று பேரம் பேசவில்லை. ஒரு அக்ஷரம் பேசவுமில்லை, சிரிக்கவுமில்லை. நமது பாதையில் நடக்கிறோம், கொஞ்சமும் களைப்புற்று துவளவில்லை, நேரமாக ஆக நமது நடையில் ஒரு புது வேகம்.
பயணம் தொடர்கிறது. சூரியன் உச்சிக்கு தலைமேல் வந்து கோபச்சூடாக பார்க்கிறான். புறாக்கள் மரக்கிளை நிழலி லிருந்து கூவுகின்றது கேட்கிறதா?. உச்சி வெயிலின் அனல் காற்றில் மரக்கிளைகளில் மடிந்து போன மஞ்சள் நிற காய்ந்த இலைகள் கடைசிப் பயணத்தை துவங்கிவிட்டன. காற்றில் அடித்து செல்லப்பட்டு காலடியில் கிடக்கிறது.
முடியவில்லை, இனி கொஞ்சம் களைப்பாறினால் தான் பயணம். அங்கே பாருங்கள் ஒரு மாட்டுக்கார பையன் ஆலமரத்தடியில் என்ன சுகமாக தலை ஆட தூங்கிக்கொண்டிருக்கிறான். எந்த ராஜகுமாரி அவன் கனவிலோ? சிலு சிலு வென்று ஒரு சின்ன ஆற்றின் கரையில் நிழலில் புல் படுக்கையில் மெத்து மெத்தென்று காலை நீட்டி கட்டையை சாய்த்தேன்.
கூட வந்ததுகள் என்னைப்பார்த்து ஏளன சிரிப்போடு மேலே தொடர்ந்து நடக்கிறார்கள். நடக்கட்டும், போகட்டுமே. ஒரு தடவையாவது கூட வந்த என்னை திரும்பிக்கூட பார்க்காமல் விடுவிடென்று நடை. தலையை நிமிர்த்தி நடை. பார்த்துக்கொண்டே இருந்த என் கண்ணில் அவர்கள் தூரத்தில் புள்ளிகளாக மாறும் வரை தெரிந்தார்கள்.
வழியில் தான் எத்தனை வயல்கள், மேடும் பள்ளமும் ஆக கிராமங்கள், சிற்றூர்கள். புதுப்புது பளிச்சென்ற கிராமங்கள், தேசங்கள்,
கிருஷ்ணா, எனக்கு நீ தான் ஹீரோ. என் முன்னே நீண்டு முடிவில்லாமல் செல்லும் பாதையின் நாயகன். படுத்துவிட்ட என்மேல் எத்தனை கேலிகள், கிண்டல்கள், ஏச்சும் பேச்சும் என்னை எழுப்ப முயன்றார்கள். நான் மசிவேனா?
எதை வேண்டுமானாலும் சொல்லிக்கொண்டு போகட்டுமே. சந்தோஷம் தான். நிறைய கேட்டாயிரு. இனி உடலிலும் உள்ளத்திலும் அதெல்லாம் புகாது. கிருஷ்ணா நீ இருக்கிறாய் எனக்கு என்று ஒரு சிறு நுண்ணிய வெள்ளிக்கம்பி மாதிரி நம்பிக்கை ஒளி. காரிருளை கிழித்துக் கொண்டு பச்சை இலைக்கு தங்க ரேக்கு கரையிட்டமாதிரி. வெளிவருகிறது. ஒரு நிம்மதி, அமைதி.குட்டி ஆனந்தம்.
என் வாழ்க்கைப்பாதையில் நான் நடந்து கடந்து வந்த பாதை ரொம்ப நீளம். அந்த பயணமே மறந்து போய்விட்டது கிருஷ்ணா. என்னை சுற்றும் கணக்கில்லா உன் திருவடி ஒன்றே கதி, என்று உன்னை சரணடைந்தவன். எத்தனையோ எண்ணங்கள், பாடல்கள் , நினைவின் நிழல்கள் , ஹுஹும் அவற்றுக்கெல்லாம் என் மனத்தில் இடமில்லை. என் நீண்ட உறக்கத்திலிருந்து நான் விழித்துக் கொண்டு விட்டேன். என் கண்ணை நீ திறந்துவிட்டாய். என் எதிரே நீ கிருஷ்ணா. வெள்ளத்தில் அடித்துச் செல்வது போல் என் தூக்கம் உன்னைக் கண்டதும் என் உறக்கம் ஓடிவிட்டது.
எனக்கு சிரிப்பு தாங்கமுடியவில்லை. எவ்வளவு பெரிய முட்டாள் நான். என் எதிரே காணும் பாதை முடிவில்லாதது, கரடு முரடான முள் நிறைந்த பாதை. அதை என்னால் கடக்க முடியுமா, அதன் முடிவில் நிற்கும் கிருஷ்ணன் அடைய முடியாதவன் என்ற பயத்தை போக்கி, என் முன்னே தோன்றி ஒரு புன்னகையால் மாற்றியவன் நீ கிருஷ்ணா. என்னுள்ளே நான் அறியாமலேயே என்னோடு எப்போதுமே இருந்தவன்.

No comments:

Post a Comment