நினைத்தாலே கிடைக்கும் ஸ்ரீ மஹா பெரியவா அனுகிரஹம் கண்கண்ட தெய்வம் காஞ்சி மகா பெரியவா சரணம் ஹர ஸ்ரீ ஸ்ரீ மஹா பெரியவா திருவடிகள் போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி
பெரியவா திருவடியே
சரணம்.
மிகவும் வயஸான பக்தர் பெரியவாளை நமஸ்கரித்தார். முகத்தில் ஏகப்பட்ட கவலை ரேகைகள்!
"கோர்ட்ல கேஸ் நடக்கறது..... தீர்ப்பு ஸாதகமா வரணும் பெரியவா"
பெரியவா இமைக்காமல் அவரையே பார்த்தார்....
பார்வையில் காருண்யம் இல்லை... உக்ரம் இருந்தது!!
பாரிஷதர்களுக்கோ வயிற்றைக் கலக்கியது. அந்தக் கிழட்டு ப்ராஹ்மணர் என்ன பண்ணியிருக்காரோ! என்ன வாங்கிக் கட்டிக்கொள்ள போகிறாரோ!
"நா...ஒண்ணும் ஹை-கோர்ட் ஜட்ஜ் இல்ல...ஒனக்கு ஸாதகமா ஜட்ஜ்மெண்ட் சொல்றதுக்கு! போ! போயி வேற ஜோலி இருந்தாப் பாரு!..."
என்று மஹா கோபத்துடன் பொரிந்து தள்ளிவிட்டு உள்ளே போய்விட்டார்.
பக்தர் திக்ப்ரமை பிடித்த மாதிரி நின்று கொண்டிருந்தார். வயஸானதுக்கு, அக்கடான்னு இருக்க வேண்டிய ஸாதாரணமான ஞானம் கூட இல்லை. இதில் கோர்ட், கேஸ் என்று அலைந்து கொண்டிருக்கிறார்...... எதற்கு?
சில நிமிஷங்களில் பெரியவா வெளியே வந்தார்...
"ஒம்பையன் போய்ட்டான்.....மாட்டுப்பொண் ரொம்ப துக்கத்ல இருக்கா! அவளுக்கும் அவ கொழந்தேளுக்கும் பணம் குடுக்க மாட்டேங்கறே! அதுக்கு மேலே அன்யாயம்!...கேஸ் போட்டு, அந்த விதவையை கோர்ட்டுக்கு இழுத்து, கூண்டுல நிக்க வெக்கறே! இது என்ன ஞாயம்? லோகத்ல யாருக்கும், எதுவுமே ஸொந்தமில்ல...
குந்துமணி ஸொத்து கூட, கூடவராது!! நாம பண்ற பாப-புண்யம் மட்டுந்தான் வரும்!!!
[எத்தனை மஹான்கள், எத்தனை க்ரந்தங்கள், எத்தனை தடவை இதை சொன்னாலும், நமக்கு மட்டும் இது புத்தியில் ஏறவே ஏறாது!!].....
மறுபடியும் உள்ளே போய் விட்டார் பெரியவா! அந்த வயோதிக பக்தர் சரசரவென்று வெளியே கிளம்பிப் போனார். மறுநாளே வழக்கில் உடன்பாடு பண்ணி விட்டார். ஸொத்தில் நாட்டுப் பெண்ணுக்கு உரிய பாகத்தை பிரித்துக் கொடுத்தார் !
அதன் பிறகுதான் அந்த அதிஸயம் நடந்தது!.....
பக்தரின் மனைவி மூன்று மாஸம் கழித்து பரலோகம் போய்விட்டாள். இவரோ நிர்கதியாக, தனிமரமாக நின்றார்!
பணத்துக்காக,
எந்த நாட்டுப்பொண்ணை கோர்ட்டுக்கு இழுத்தாரோ, அவள்தான் அவரை நிர்கதியாக விடாமல், தன்னோடு வைத்துக் கொண்டு அவருடைய அந்திமகாலம் வரைக்கும் பாதுகாத்து வந்தாள்.
நம்முடைய மனஸில், பணத்தையும், ஸொத்துக்களையும் அஸ்திவாரமாக வைத்தால், அங்கே தெய்வம் வாழாது, பைஸாஸம்தான் குதியாட்டம் போடும்.
அழகு தொழு நோயால்
ஆவுரித்துத் தின்றுஉழலும் புலையேனன் ௭னக்கு
செம்மையேயாய
சிவபதம் ௮ளித்த செல்வமே சிவபெருமானே
இம்மையே ௨ன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
௭ங்கெழுந்தருளுவது இனியே
ஹர ஹர சங்கர!!!
ஜெய ஜெய சங்கர!!!
பரமகுரு, பவித்ரகுரு,
தர்மகுரு, சத்தியகுரு,
ஞானகுரு, த்யானகுரு,
சிவகுரு, சாமிநாதகுரு,
காமாட்க்ஷி குரு, சத்தியகுரு,
வேதகுரு
இவையெல்லாம் சேர்ந்த, ஆதிபகவத்பாதாள், வழிவந்த உத்தம தெய்வீக காமகோடி ஜகத்குரு எத்துனைமுறை வர்ணித்தாலும், புகழ் பாடினாலும், அவர் பார்க்கும் ஒருபார்வை, நம் பாவங்கள் எல்லாம் பொசுக்குவிடுமன்றோ! ஓம் ஸ்ரீ மஹாப்பெரியவா பாதமே சரணம் 🙏🏻🙏🏻🙏🏻
No comments:
Post a Comment