*07/09/2020* *முசிறி அண்ணா மாஹாளய சிராத்தத்தில் நாம் செய்ய வேண்டிய முறையை விரிவாக சொல்கிறார் அதை பார்த்துக்கொண்டு வருகிறோம்.*
*இந்த மால் இரத்தத்திலே விசேஷம் என்னவென்றால் காருணியர்கள் என்று சொல்லக்கூடிய, நம்மை சுற்றியுள்ள அனைத்து சொந்தங்களும், சேர்த்து செய்யக்கூடிய ஸ்ராத்தம் மஹாளய சிராத்தம்.*
*இந்த மஹாளய ஸ்ராத்தம் என்பது நித்தியம் அதாவது கட்டாயம் செய்ய வேண்டும் என்று அர்த்தம். காமியம் என்றால் விருப்பம் இருந்தால் செய்யலாம். ஆனால் இந்த மஹாளய ஸ்ராத்தம் அவசியம் செய்ய வேண்டும் என்று தர்ம சாஸ்திரம் சொல்கிறது.*
*நம்மை சுற்றியுள்ள ஏழு கோத்திர காரர்களையும் உத்தேசித்து நாம் இந்த மாஹாளய ஸ்ராத்தம் செய்கிறோம்.*
*இரண்டுவிதமான சிராத்தங்களை தான் நாம் இந்த ஏழு கோத்திர காரர்களை தனித்தனியாக உத்தேசித்து செய்கிறோம். ஒன்று இந்த மஹாளய சிராத்தம். இரண்டாவது ஷேத்திரங்களுக்கு போய் நாம் செய்யக்கூடிய தீர்த்த சிராத்தம்.*
*இந்த இரண்டிலுமே நாம் நம்முடைய ஏழு கோத்ர காரர்களையும் உத்தேசித்து தனித்தனியாக செய்கிறோம். ஏன் இந்த ஏழு கோத்திர காவலர்களை நம்மை சுற்றி உள்ளவர்களை செய்கிறோம் என்றால், அதிலே நிறைய காரணங்கள் சொல்லப்பட்டு இருக்கின்றன.*
*இது விஷயமாக பிரம்மாண்ட புராணத்தில் விரிவாக காண்பித்திருக்கிறார்கள் நிறைய கேள்விகள் பிரம்மாண்ட புராணத்தில் கேட்கிறார்கள். இந்தப் பித்ருக்கள் என்பவர்கள் யார் அவர்கள் எங்கே இருக்கிறார்கள். அவர்கள் இங்கிருந்து கிளம்பி போய்விட்டார்கள் என்றால் இவன்தான் புத்திரன் இவன்தான் பௌத்திரன் என்ற ஞானங்கள் எல்லாம் அவர்களுக்கு எப்படி இருக்கிறது? இந்த லோகத்திலேயே எல்லாம் அனுபவித்து முடித்த பிறகு எல்லாம் விட்டுப் போய்விடுகிறது.*
*இந்த பந்தங்கள் விட்டுப் போவதற்காக தான் நமக்கு கர்மாக்கள் எல்லாம் சொல்லப்பட்டிருக்கின்றன. அப்படி இருக்கின்ற பொழுது அனைத்து விதமான பந்தங்களும் விட்டுப் போய்விட்ட நிலையில், அப்போது இவன் புத்திரன் என்கின்ற அந்த ஞானம் எப்படி இருக்கும்?*
*இவன் தன்னுடைய தகப்பனாருக்கு உத்தேசித்து செய்யக்கூடிய ஸ்ராத்தத்தை, அவர்கள் எப்படி இதை எடுத்து கொள்ளுகிறார்கள், இப்படி நிறைய கேள்விகள் பிரம்மாண்ட புராணத்திலே கேட்கிறார்கள்.*
*அதற்கு வியாசர் விரிவாக பதில் சொல்கிறார்.*
*நாம் ஒவ்வொருவருடைய*
*பிறப்பிற்கும் நம்மை சுற்றியுள்ள ஏழு கோத்திர காரர்கள் தான் காரணம். நிறைய பேருடைய உதவியின் மூலமாகத்தான் நாம் இந்த லோகத்திலேயே பிறக்கிறோம். வளர்க்கின்றோம். நமக்காக உள்ள சுகதுக்கங்களை அனுபவிக்கிறோம். நிறைய பேர் நமக்கு உதவி செய்கிறார்கள் நாம் காலமாகும் வரையில்.*
*ஆகையினாலே தான் நம் ஆத்தில் ஒரு கல்யாணம் நடந்தாலும் அல்லது வேறு ஏதாவது நடந்தாலும், நாம் அனைத்து பந்துகளுக்கு ம் தகவல் தெரிவிக்கின்றோம். ஆத்தில் ஒரு கல்யாணம் தீர்மானம் ஆகியவுடன் யாருக்கு முதலில் அதை தெரிவிக்க வேண்டும்.*
*பத்திரிக்கையை யாருக்கு முதலில் அனுப்ப வேண்டும் என்றால் இந்த ஏழு கோத்திர காரர்களுக்கு தான் அனுப்ப வேண்டும். ஏனென்றால் இந்த ஏழு கோத்திர காரர்கள் தான் நாம் திருமணமாவதற்கு முக்கியமான காரணம். அவர்கள் செய்ய கூடியதான பித்ருக்களை உத்தேசித்து, சிராத்த பலனாகத்தான் நமக்கு கல்யாணம் வருகிறது.*
*நாம் செய்யக்கூடிய தான சிராத்தத்தை பிதுருக்கள் வாங்கிக்கொண்டு, நம் குடும்பத்திற்கு மட்டுமில்லாமல், நம்மை சுற்றியுள்ள ஏழு கோத்திர காரர்களுக்கும் கல்யாணத்தை கொடுக்கிறார்கள். கல்யாணம், ஐஸ்வரியம் சந்ததிகள், இந்த மூன்றையும் நமக்கு கொடுக்கக் கூடியவர்கள் நம்முடைய பிதுருக்கள்.*
*ஆகையினாலே தான் இந்த மூன்றுமே ஏழு கோத்ர காரர்களையும் சேர்ந்ததாகும். இதை நாம் எங்கு பார்க்கலாம் என்றால் அபர காரியங்களில் இதைப் பார்க்கலாம்.*
*ஒரு பெரிய அபர காரியம் ஆகிவிட்டது என்றால், உடனே இந்த ஏழு கோத்திர காரர்களுக்கும் முதலில் தகவல் தெரிவிக்கின்றோம். அவர்கள் அனைவரும் வந்து விசாரிப்பது என்பது வழக்கம்.*
*விசாரிப்பது என்றால் என்ன நம் அனைவருடைய ஷேமங்களையும், குடும்பத்திற்கு பெரியவராக இருந்தார் எல்லா கர்மாக்களையும் நன்றாக செய்து வந்தார், அவர் போனது நமக்கு பெரிய இழப்பு, அவருடைய இந்த காரியம் கர்மாவானது மிக நல்ல முறையில் நடக்க வேண்டும். என்னால் முடிந்ததை இந்த கர்மாவிற்கு தருகிறேன், என்று பணம் கொடுக்க வேண்டும்.*
*ஏனென்றால் நாம் அனுபவிக்க கூடியதான இந்த பணத்தை பித்ருக்கள் நமக்கு கொடுக்கின்றனர். நம் பித்ருக்கள் என்றால் நம்முடைய கோத்திரத்தில் மட்டும் உள்ள பிதுருக்கள் இல்லை.
*இந்த ஏழு கோத்திர காரர்களும் சேர்ந்து தான் நமக்கு பணம் புத்திரன் கல்யாணம் (மனைவி) இந்த மூன்றையும் இந்த ஏழு கோத்திர காரர்களும் சேர்ந்து தான் நமக்கு அனுக்கிரகம் செய்கிறார்கள்.*
*அவர்களுக்கு நாம் மிகவும் கடமைப்பட்டு இருக்கிறோம். இங்கு நாம் பணம் கொடுத்து அதை சொல்ல வேண்டும். அதுதான் ஆஸ்சிய தண்டுலம் என்று ஒன்று உண்டு.*
*அங்கே போனவுடன் வாய்க்கு அரிசி என்று ஒன்று உண்டு. அரிசியை நன்றாகக் களைந்து அக்னியில் வெதுவெதுப்பாக அங்கு வைத்திருப்பார்கள். அந்த அரிசியை வாயில் போடுவது. இங்கு புராணம் நமக்கு ஒரு சுலோகத்தில் காண்பிக்கின்றது.*
*இந்த ஒரு ஸ்லோகத்தை சொல்லி தான் ஆஸ்சிய தண்டுலம் என்கின்ற இந்த அரிசியை போட வேண்டும் என்று புராணம் நமக்கு காண்பிக்கின்றது.*
*இதற்கு என்ன அர்த்தம் என்றால் நீங்கள் இப்பொழுது, பித்ரு லோகத்தை அடையப் போகிறீர்கள், எங்கள் அனைவருக்காகவும் நீங்கள் நிறைய செய்து இருக்கிறீர்கள்.*
*நாங்கள் எல்லோரும் நன்றாக இருக்கவேண்டும் என்று நிறைய செய்து இருக்கிறீர்கள். அதற்காக இந்த அரிசியை நான் உங்களுக்கு கொடுக்கிறேன். ஒருகால் நீங்கள் திரும்பவும் இந்த நூலகத்திற்கு வரக்கூடிய வாய்ப்பு இருந்தது ஆனால், எங்கள் வீட்டிலே நீங்கள் புத்திரனாகப் பிறக்கவேண்டும். நான் உங்களுக்கு தகப்பனாக இருந்து, எல்லாம் உங்களுக்கு நான் செய்கிறேன். என்று சொல்லி அந்த அரிசியை போட வேண்டும்.*
*ஏன் இப்படி போடுகிறோம் என்றால், அவருடைய சாபத்திற்கு நாம் ஆளாகாமல் இருக்கலாம். நம்முடைய பிதுருக்கள் தான் நமக்கு புத்திரர்களாக பௌத்திரர்கள் ஆகவும் பிறக்கிறார்கள் என்று புராணம் நமக்கு காண்பிக்கிறது.*
*அப்படி போடவேண்டும் திரும்பவும் நாம் இங்கு வந்து பிறக்கலாம். ஒன்றும் கவலைப்பட வேண்டாம் பயப்பட வேண்டாம் இப்படி சொல்லி அந்த வாய்க்கரிசி போடுவது வழக்கம்.*
*அந்த ஏழு கோத்திர காரர்களும் வரவேண்டும் வந்து அந்த ஆஸ்ய தண்டுலத்தை போடவேண்டும். இது எல்லாம் வழக்கத்தில் நமக்கு வைத்திருக்கிறார்கள். அந்த அளவுக்கு அவர்கள் விஷயத்தில் நாம் கடமைப்பட்டிருக்கிறோம். மேலும் விஷயங்கள் நிறைய சொல்லப்படுகின்றது என்ன என்பதை அடுத்த உபன்யாசத்தில் பார்ப்போம்*
No comments:
Post a Comment