Wednesday, September 2, 2020

Divorce is not permitted as per shastra

*19/08/2020* முசிறி அண்ணா யுக தர்மங்கள் என்ற வரிசையில் தர்ம சாஸ்திரத்தில் விளக்கத்தை மேலும் தொடர்கிறார்.

தர்ம சாஸ்திரத்தில் இருந்து இந்த கலியுகத்தில் நம்முடைய தர்மத்தின் அதனுடைய ஸ்வரூபம், எப்படி இருக்கும்? நம்மால், எந்த அளவுக்கு அந்த கர்மாக்களை விட்டுக்கொடுத்து செய்யலாம், என்பதை பராசர மகரிஷி காண்பித்த வகையிலே பார்த்தோம்.

*மேலும் நாம் செய்யக்கூடிய தான சந்தியாவந்தனம் மற்றும் அனைத்து கர்மாக்களிளும், இந்தக் கலியின் உடைய தோஷம் வராமல் இருப்பதற்கு, என்ன உபாயங்களை வைத்திருக்கிறார் என்பதையும் பார்த்து, எந்த மந்திரங்கள் சொல்வதாக இருந்தாலும் பிரணவம் சொல்லி ஆரம்பித்து, கடைசியில் மந்திரம் சொல்லி பகவான் நாமம் முடிக்கவேண்டும், என்பதையும் விரிவாக தெரிந்து கொண்டோம்.*

இப்பொழுது அடுத்ததாக,  கலி நிஷித்தம் என்ற ஒரு பகுதியை காண்பிக்கின்றது தர்மசாஸ்திரம். அதாவது இந்தக் கலியுகம் எப்படி இருக்கும் என்று நாம் தெரிந்து கொண்டும், நம்முடைய கர்மாக்களை அந்த அளவுக்கு விட்டுக்கொடுத்து ஜாக்கிரதையாக செய்தாலும்கூட, சில கர்மாக்களில் நிறைய தவறுகள் நடக்கும், அதை நிச்சயமாக முழுமையாக நம்மால் செய்ய முடியாது,  என்பதினால், சில கர்மாக்களை சில தர்மங்களை, இந்தக் கலியில் செய்யக்கூடாது என்று பிரித்து காண்பிக்கிறார்கள் மகரிஷிகள்.

*காரணம் அதை நாம் எவ்வளவு ஜாக்கிரதையாக செய்தாலும், அதில் தவறுகள் நடந்து போய்விடும். அந்தத் தவறுக்கு இன்னொரு தவறு செய்வது என்று மேலும் மேலும் தப்பாக செய்வதற்கு, இந்தக் கலியுகத்தில் சில தர்மங்களை செய்வதற்கு, நிஷித்தம் செய்திருக்கிறார்கள். அதாவது செய்யக் கூடாது என்று சொல்லி இருக்கிறார்கள்.*

இதில் ஒவ்வொரு மகரிஷிகளும் சந்தியாவந்தனம் முதல் கொண்டு, அசுவமேத யாகம் வரை இந்த இந்த பகுதிகளை / விஷயங்களை விட்டு விட வேண்டும் என்று காண்பித்திருக்கிறார்கள்

*அதில் பராசர மகரிஷி சாதாரண பாமரனுக்கு, என்ன என்ன எல்லாம் தவறுகள் நடக்கும், அவன் இதிலிருந்து மீண்டு வந்து, இந்த மனுஷ ஜென்மம் கூடிய வரையிலும் பயனுள்ளதாக செய்து கொள்ளலாம் என்று காண்பிக்கிறார் பராசர மகரிஷி இந்த கலியுக நிஷித்த தர்மாவில்.*

நிறைய தவிர்க்க வேண்டிய காரியங்கள் என்று பராசர மகரிஷி காண்பிக்கிறார். அதில் ஒவ்வொரு காரியங்களிலும் சூட்சுமம் நிறைய இருக்கிறது. அதை நன்றாக நாம் மனதிலேயே வாங்கிக் கொள்ளவேண்டும்.

*எப்படி ஆரம்பிக்கிறார் என்றால், ஒரு தடவை திருமணம் ஆகிவிட்டது, அது சிறப்பாக அமையவில்லை, வாழ்க்கை முறிந்து போய்விட்டது என்றால், மீண்டும் திருமணம் என்பது கூடாது என்று பராசர மகரிஷி ஆரம்பிக்கின்றார். ஏன் அப்படி சொல்கிறார் நாம் என்ன நினைக்கிறோம்.*

*_இன்றைய தினத்திலே ஒரு ஆணுக்கோ ஒரு பெண்ணுக்கோ திருமணம் செய்கிறோம், அந்த திருமண வாழ்க்கை ஒரு மாதமோ ஆறு மாதமோ ஒரு வருடமோ நீடிக்கிறது. அதன்பிறகு அவர்களுக்கு உள்ளே கருத்து வேறுபாடுகள் வந்து பிரியக் கூடிய நிலைமை ஏற்படுகிறது._*

*ஆனால் வாழ்க்கை அத்துடன் முடிந்துவிடவில்லை. இன்னும் அனுபவித்து வாழ வேண்டிய வயது இருக்கிறது என்று நினைத்து நாம் இரண்டாவதாக கல்யாணம் செய்து வைக்கிறோம், அதற்கு அதுதான் ஒரே நிவர்த்தி பையனாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும். இதற்கு நாம் மனிதாபிமானம் அல்லது வேறு ஏதோ பெயர்கள் எல்லாம் சொல்கிறோம். ஆனால் கலி நிஷித்தத்தில்  இதை காண்பிக்கிறார். ஒரு முறை திருமணம் ஆகிவிட்டது என்றால் திரும்பவும் கல்யாணம் செய்யக்கூடாது என்று சொல்கிறார்.*

*ஏன் அப்படி சொல்லி இருக்கிறார் இதையெல்லாம் நாம் அப்படி வைத்து பார்க்கும் பொழுது தான், மகரிஷிகள் மேல் வருத்தம் / கோபம் ஏற்படுகிறது. ஏனென்றால் மனதிலே கொஞ்சம் கூட ஈரம் இல்லாமல் இப்படி சொல்லி இருக்கிறாரே என்று நாம் நினைக்கிறோம்.  ஆனால் மகரிஷிகளை விட கருணையோடு அனு கிரகத்தோடு வேறு யாரும் நமக்கு புத்திமதிகள் சொல்ல முடியாது.*

அந்த அளவுக்கு மகரிஷிகள் ஆராய்ச்சி செய்து, நம்முடைய மனதிற்கு எது இதம் என்று பார்த்து சொல்லியிருக்கிறார்கள்.
*_எப்படி குழந்தைகளுக்கு வயிறு சரியில்லை என்றால் வேப்பெண்ணை கொடுக்கவேண்டும். ஆனால் வேப்ப எண்ணெய் மிகுந்த கசப்பு தன்மை கொண்டது. நீ இதை சாப்பிட்டுத்தான் ஆகவேண்டும் என்று வேப்ப எண்ணெயை வாயில் விட்டால், அந்தக் குழந்தைக்கு என்ன தோன்றும், நீ இதை சாப்பிட்டுத்தான் ஆகவேண்டும் என்று தாயார் அந்த குழந்தையின் வாயில் விட்டால் தாயார் பரம சத்துரு/எதிரியாக தெரியும். குழந்தை தாயாரை திட்டும். ஆனால் தாயார் பரம கருணையோடு தான் அதை செய்கிறார். அதை நேரடியாக வாயிலே விடாமல் அதை ஒரு வாழைப்பழத்திலோ, அல்லது வெல்லத்தில் கலந்து, அந்த வேப்ப எண்ணையை கொடுக்க வேண்டும். நீ இதை சாப்பிட வேண்டும் என்று நல்ல புத்தி சொல்லி, கொடுக்க வேண்டும் குழந்தைக்கு. அதுபோலதான் மகரிஷிகள் எப்படி வாழைப்பழத்தில் வைத்து வேப்பெண்ணையை கொடுக்கிறார்களோ அப்படி சில விஷயங்களை நமக்கு சொல்லி இருக்கிறார்கள்._*

*சில விஷயங்களை நேரடியாகவே சொல்லியிருக்கிறார்கள்.  அவர்கள் கருணை இல்லாமல் சொல்கிறார்கள் என்று நாம் நினைக்கக் கூடாது. ஒரு தாயார் தன்னுடைய குழந்தை மீது எவ்வளவு அன்பு எடுத்துக்கொண்டு சொல்வாளோ, அதுபோல மகரிஷிகள் நம் மீது மிகுந்த பிரேமை யோடு கூட, நாம் ஒவ்வொருவரும் சௌக்கியமாக இருக்க வேண்டும், மன அமைதியோடு இருக்க வேண்டும், நன்றாக வாழ்க்கை வாழ வேண்டும், இந்த வாழ்க்கையோடு முடியவில்லை இன்னும் பல பிறவிகள் இருக்கின்றன, அதிலும் நாம் சௌக்கியமாக இருக்கவேண்டும், என்கின்ற எண்ணத்தோடு தான் மகரிஷிகள் தர்மங்களை காண்பிக்கின்றனர்.*

*அதை நாம் மனதிலேயே வைத்துக் கொண்டு இதை ஆராய்ச்சி செய்து பார்க்க வேண்டும், மேலும் இந்தக் கல்யாணம் ஆனது ஒரு தடவை நடந்து, இரண்டாவதாக ஏன் கல்யாணம் செய்யக்கூடாது என்று மகரிஷிகள் சொல்கிறார்கள் என்றால், அதிலே சூட்சுமங்கள் நிறைய இருக்கின்றன.*

*நாம் அடிப்படையாக என்ன கவனிக்க வேண்டுமோ, அதையெல்லாம் கவனிக்காமல், உலக வாழ்க்கைக்கு என்ன தேவையோ அதை மாத்திரம் நாம் கவனித்து, குழந்தைகளுக்கு கல்யாணம் செய்து வைக்கிறோம். ஆண் அல்லது பெண் எந்த குழந்தையாக இருந்தாலும் சரி. குடும்பம் நன்றாக இருக்கிறதா என்று கூட நாம் கவனிப்பது இல்லை. ஜாதகம் பார்ப்பது அது பொருத்தமாக இருக்கிறது என்று நம் மனதிற்கு பட்டால், ஒருவருக்கு ஒருவர் பேச சொல்வது. அவர்களுக்கு மனப்பொருத்தம் இருக்கின்றது என்றால் நம்முடைய தகுதிக்கு ஏற்றார்போல், ஒரு மண்டபத்தை பார்த்து அந்த குழந்தைகளுக்கு கல்யாணம் செய்து வைத்தோம். அவர்களுக்கு ஏதோ ஒரு குடும்பம் நடத்தக்கூடிய அளவுக்கு ஏற்பாடு செய்து கொடுத்துவிட்டால், பிறகு நம்முடைய கடமை முடிந்து போய்விட்டது. அதற்குப் பிறகு நம்முடைய குழந்தைகளை பற்றி யாராவது நம்மிடம் சொன்னாலும் கூட, அது அவர்களுடைய தனிப்பட்ட வாழ்க்கை, (பர்சனல் லைப்), நாம் அதிலே ஈடுபடக்கூடாது, என்று நாம் விலகி விடுகிறோம். நாம் இதுவரையிலும் பொறுப்பு எடுத்துக் கொண்டு உள்ளோம். குழந்தைகளுக்கு கல்யாணம் ஆகிவிட்டால் போதும் அது வரையில் தான் நமது கடமை, என்று தாயார் தகப்பனார் இருந்து விடுகிறோம். இதுதான் உலக வாழ்க்கையிலே நடக்கக் கூடியது. பிறகு சேர்ந்து வாழ்ந்தால் வாழட்டும், பிரிந்து வாழ்ந்தாலும் வாழட்டும், எப்படி வாழ்ந்தாலும் சரி என்று, நாம் விலகி விடுகிறோம் இதுதான் இன்றைய நிலைமை. உலகத்தில் நடக்கக் கூடிய காரியம்.*

*ஆனால் அந்தக் கல்யாண விஷயத்திலேயே நாம் எந்த அளவுக்கு கவனித்துச் செய்யவேண்டும், அதை மகரிஷிகள் காண்பித்து, அந்த அளவுக்கு கல்யாணத்தை நாம் செய்ய முடியாது, என்பது நாளைதான் இரண்டாவதாக அந்த தப்பை செய்யாதே, மகரிஷிகள் காண்பிக்கின்றனர்.*

அது என்ன என்பதை அடுத்த உபன்யாசத்தில் பார்ப்போம்.

No comments:

Post a Comment