Monday, August 24, 2020

Sholingapuram Garuda

*கருட பஞ்சமி ஸ்பெஷல்* :
சோளிங்கபுரம் எனும் திவ்யதேசத்தில் அனுமன் சங்கு சக்கரத்தோடு காட்சி அளிப்பார். அதே போல கருட பகவானும் ஓர் திவ்விய தேசத்தில்  சங்கு சக்கரங்களை ஏந்திய வண்ணம் காட்சி அளிக்கிறார் ‌‌.. கும்பகோணம் - தஞ்சாவூர் மார்க்கத்தில் கும்பகோணத்தில் இருந்து 19 கி.மீ தூரத்தில் உள்ள திவ்யதேசம் *திருவெள்ளியங்குடி - கோலவில்லி ராமர் திருக்கோயில்* 
 ஏன் இவ்வாறு கருடன் காட்சி தருகிறார் ?? 
அசுர குரு சிற்பியான மயன் ( ராவணன் மனைவி மண்டோதரியின் தந்தை) பிரம்மாவின் வழிகாட்டுதலால் பூலோகத்தில் தவமிருந்தார்.  மயனின் தவத்தில் மகிழ்ந்த பெருமாள் கருடன் மீது ஏறி சங்கு சக்கரதாரியாக காட்சியளித்தார்.  அப்போது மயன் தசரத குமாரனாக ராமாவதார கோலத்தில் காட்சி தர வேண்டினார்.  தன் கையிலிருந்த *சங்கு சக்கரத்தை கருடாழ்வாரிடம் கொடுத்து விட்டு* பகவான் ஸ்ரீ ராமனாக வில் அம்புடன் தரிசனம் தந்தார்.  108 திவ்ய தேசங்களில் இங்கு மட்டுமே கருடாழ்வார் சங்கு சக்கரம் ஏந்தி இருக்கிறார்.

No comments:

Post a Comment