திருநெல்வேலிலருந்து கோவைக்கு ஒருத்தர் இன்டர்வியூக்கு வந்தாரு.
வந்தவரு காந்திபுரத்திலிருந்து டவுன்பஸ் ல ஏறி கூட்டத்துல மிதந்து வந்து நடுவில நின்னுட்டாரு. இங்கே முன்னாடி பெண்கள் பின்னால ஆண்கள் பகுதி.
ஒவ்வொருத்தரா டிக்கட் எடுக்க ஆரம்பிச்சாங்க. ஒரு பொண்ணு ' சித்ரா ஒண்ணு'ன்னு சொல்லி டிக்கட் எடுத்தது.
இன்னொருத்தர் 'வரதராஜ் ஒண்ணு' ன்னு சொல்லி எடுத்தாரு.
ஒரு அம்மா ' கிருஷ்ணம்மாள் ஒண்ணு' குடுங்கன்னு எடுத்தாங்க. நம்மாளு இதையெல்லாம் கவனிச்சிக்கிட்டே வர்றாரு.
ராதாகிருஷ்ணா ஒண்ணு
அரவிந்த் ஒண்ணு
இப்படியே சொல்லி எல்லாரும் டிக்கட் எடுக்கவும் நம்மாளு பார்த்தாரு. ஓஹோ... இந்த ஊர்ல எல்லாரும் அவங்கவங்க பேரை சொல்லி தான் டிக்கட் எடுக்கனும் போலன்னு நெனச்சிக்கிட்டு
'சுப்பிரமணி ஒண்ணு' அப்டீன்னாரு...
கண்டக்டர் மண்டைகாஞ்சு போய் கேட்டாரு பாருங்க!....
சுப்பிரமணியா?... அப்படி ஒரு ஸ்டாப்பே இல்லையே ன்னாரு.
மத்தவங்களுக்கு மட்டும் பேரைச் சொன்னவுடனே டிக்கட் கொடுத்தீங்க. ஏன் எனக்கு மட்டும் தரமாட்டீங்கிறீங்க
"அவங்க சொன்னதெல்லாம் பஸ் ஸ்டாப் பேருயா ..😄😄
No comments:
Post a Comment