Friday, November 22, 2019

Vishnu Sahasranama 881 to 905 in tamil

Courtesy:Smt.Dr.Saroja Ramanujam

விஷ்ணு ஸஹஸ்ரநாமம். 
விஹாயஸகதி::-- விஹாயஸம் கம்யதே அஸ்மாத். பக்தர்கள் மோக்ஷம் அடைய சாதனமாக உள்ளவர் 
881. ஜ்யோதி::- ஜ்யோதிரூபமானவர்.ஸ்வயமாகவே பிரகாசிப்பவர். 
882.ஸூருசி:- அழகாக பிரகாசிப்பவர் 
883. ஹுதபுக் விபு:- ஆஹுதியில் அளிக்கப்பட்டதை புசிப்பவர் 
884.ரவி: ஸூரியனாக இருப்பவர் அல்லது ஸூ ரூயதே – ஸ்தோத்திரங்களால் துதிக்கப்படுபவர் 
885.விரோசன: -பலவிதமாக பிரகாசிப்பவர் 
886. ஸூர்ய::- எல்லாவற்றையும் உண்டாக்குகிறவர் . ஸூ என்றால் பிறப்பிப்பது., 
887. ஸவிதா- உலகங்களைப் பிறக்கச்செய்பவர் (சங்கரர்) 
சூரியனால் மழையையும் அதனால் பயிர் முதலானவையையும் உண்டாக்குகிறவர். 
888. ரவிலோசனசூரியனைக் கண்ணாக உடையவர் : . அக்னி: மூர்த்தா சக்ஷுஷீ சந்தர் சூர்யௌ- முண்டகோபநிஷத்

889. அனந்த ஹுதபுக் போக்தா- ஹுதபுக் என்றால் இந்திரன். போக்தா என்பது பிரம்மாவைக் குறிக்கிறது. பகவான் அனந்தமான அதாவது பல கல்பங்களில் தோன்றி மறையும் பலஇந்திரர்கள் பிரம்மாக்கள் இவர்களின் ஆதியானவன் 
இதை மூன்று நாமமாகக் கொண்டால் அனந்த- முடிவில்லாத , ஹுதபுக்-கொம் செய்ததை புசிப்பவர், போக்தா-உலகங்களைக் காப்பவர் அல்லது பிரக்ருதியை அனுபவிப்பவர் .
.உபத்ரஷ்டாஅனுமந்தா ச பர்த்தா போக்தா மஹேஸ்வர; ப. கீ. 13.22 
890.ஸூகத:- பரமபதத்தை அடைந்தோர்க்கு ஆனந்தம் அளிப்பவர் 
891.நைகத: -அவருடைய வரங்கள் (அல்லது அவதாரங்கள் )ஏராளம் . அளவற்ற அருள் தருபவர்
892. அக்ரஜ: -எல்லாவற்றிற்கும் முதலாக இருப்பவர்
893.அனிர்விண்ண: -பக்தர்கள் விஷயத்தில் சலிப்பில்லாதவர் 
894. ஸதாமர்ஷீ-எப்போதும் பொறுமையுடன் இருப்பவர். எல்லாவற்றையும் பொறுப்பவர்
895. லோகாதிஷ்டானம் – உலகங்களுக்கு ஆதாரமானவர் 
896. அத்புத: - ஆச்சரியமான குணாதிசயம் கொண்டவர்
897. ஸனாத்- அனாதியான கலாரூபியாக இருப்பவர் 
898. ஸனாதனதம::- முன்னைப் பழம் முன்னைப் பரம்பொருளாக இருப்பவர் 
899. கபில: -கபில நிறமுள்ளவர் . மின்னல் நிடுவில் விளங்கும் நீருண்ட மேகம் போல பரந்த ஒளியாகிய நித்யவிபூதியின் நடுவே விளங்குபவர் 
900. கபி: - கம், ஜலம், பிபதி இதி, பானம் செய்வதனால் சூரியன் கபி: எனப்படுகிறான். பிரளய காலத்தில் எல்லாவற்றையும் உட்கொள்வதால் பக்வான் காபி எனப்படுகிறான். 
கபி என்றால் வராஹாவதாரத்தையும் குறிக்கும் . காத் – ஜலத்தினின்று பூமியை , அபாத் – காப்பாற்றியவர் .( விருஷாகபி என்ற நாமத்தின் விளக்கத்தைப் பார்க்கவும் .)
கம் என்றால் சுகம் என்றும் பொருள் கம் பாதி இதி கபி: - சுகத்தைக் கொடுப்பவர் 
901,902,903- ஸ்வஸ்தித: - மங்களத்தை கொடுப்பவர், ஸ்வஸ்திக்ருத்,பக்தர்களுக்கு மங்களத்தை செய்பவர்
ஸூ அஸ்தி இதி ஸ்வஸ்தி- மங்களம். மங்களமாக இருப்பவர்
904. ஸ்வஸ்தி புக்- மங்களத்தை அனுபவிக்கச்செய்பவ்ர்

905. ஸ்வஸ்தி தக்ஷிண: - மங்களத்தை கொடுப்பதில் சிறந்தவர்

  

No comments:

Post a Comment