நீறில்லா நெற்றிபாழ்; நெய்யில்லா உண்டிபாழ் ஆறில்லா ஊருக்கு அழகுபாழ் - மாறில் உடன்பிறப் பில்லா உடம்புபாழ்; பாழே மடக்கொடி இல்லா மனை. |
திருநீறு இல்லாத நெற்றி பாழ். நெய் இல்லாத உணவு பாழ். பாயும் ஆறு இல்லாத ஊருக்கு அழகு பாழ். கருத்து மாறுபாடு இல்லாத உடன்பாறப்பாளர் இல்லாத உடம்பு பாழ். (துணை வேண்டுமே) மனைவி இல்லாத மனை பாழ். பாழ் = 0, பாழ் = ஒன்றுமில்லாத வெற்றிடம்
No comments:
Post a Comment