Thursday, August 8, 2019

Vishnu Sahasranama 536 to 543 in tamil

Courtesy:Smt.Dr.Saroja Ramanujam

விஷ்ணு ஸஹஸ்ரநாமம்

536. மஹர்ஷி: -கபிலர் வேதத்தை ஒரே மூச்சில் சொல்லக்கூடியவர். சாங்கிய தத்துவத்தை உபசதேசித்தவர். ஆதலால் மகரிஷி எனப்படுகிறார். maharshiH

537. கபிலாசார்ய: -மேற்சொன்ன காரணத்தால் கபிலாசார்யர் எனப்படுகிறார்.சங்கரர் இந்த இரண்டையும் ஒரே நாமாவாகக் கொள்கிறார். அன்னையான தேவஹூதிக்கு தத்வத்தை விளக்கியதாலும் ஆசார்யர் எனப்படுகிறார்

538. க்ருதக்ஞ:- க்ருதம்ம் ஜாநாதி இதி . அனைவராலும் செய்யப்படும் செய்கைகளை அறிபவர். ஏனென்றால் எல்லாமே அவரால் க்ருதம் , செய்யப்பட்டதாக இருப்பதால்.

539. மேதினீபதி: - மேதினி என்றால் பூமி. ராமாயணத்தில் கபிலரைப்பற்றி பின்வருமாறு கூறப்பட்டுள்ளது.
வச்யேயம் வசுதா ஸர்வா வாஸுதேவஸ்ய தீமத:
கபிலம் ரூபம் ஆஸ்தாய தாரயாதி அனிசம் தராம் (பாலகாண்டம்)
பூமி முழுவதும் வாஸுதேவனின் வசம்.கபிலரூபத்தில் பூமியை வகிக்கிறார்.

540. த்ரிபத: -ப்ரகிருதி, புருஷன், பரம புருஷன் என்ற மூன்று தத்துவங்களை சாங்க்ய சாஸ்திரம் மூலம் நிலை நாட்டியவர். 
இது விசிஷ்டாத்வைதத்தின் தத்வத்ரயமான ஜீவன் ,ஜகத், ஈஸ்வரன் என்பதையும் குறிக்கும்.
அல்லது த்ரிவிக்ரமனாக எடுத்த மூன்று அடிகளையும், அல்லது பிரணவத்தின் மூன்று அக்ஷரங்களையும் குறிப்பதாகவும் கொள்ளலாம்.

541,.த்ரிதசாத்யக்ஷ: -அத்யக்ஷ: என்றால் அதிபதி. த்ரிதச என்பது தேவர்களைக் குறிக்கும். அவர்களுக்கு பால்யம், யௌவனம் , வயது வந்த நிலை என்று மூன்று நிலைகள் மட்டுமே இருப்பதால் (வயோதிகம் என்பது இல்லை) 
ஜாக்ரத் ( விழிப்பு) ஸ்வப்னம், ஸுஷுப்தி( ஆழ்ந்த உறக்கம் ) என்ற மூன்று நிலைக்கும் அப்பாற்பட்டவர். (சங்கரர்)
அடுத்து வரும் நாமங்கள் வராஹாவதாரத்தைக் குறிப்பிடுபவனவாகும்.

542. மஹாச்ருங்க- பூமியைத் தாங்கிய சிறந்த கொம்புடையவர்.

543. க்ருதாந்தக்ருத். –க்ருதாந்த என்றால் ம்ருத்யு. க்ருதாந்தம் க்ருந்ததி ஹிரண்யாக்ஷன் ம்ருத்யுவைப் போல் பயங்கரமானவன்.அவனைக் கொன்றவர். மகாப்ரலய காலத்தில் க்ருதாந்த: அலது ம்ருத்யு (யமன்) உட்பட எல்லோரையும் அழிப்பவர் என்றும் கொள்ளலாம்.

No comments:

Post a Comment