#அனுமன்மகிமை – #ஒரு கல்லிலே. #மூணு மாங்காய் -
--இந்திரா சௌந்தர்ராஜன்.
ராமஜெயம் அம்மாள் என்னும் அந்தப் பெண்மணியின் தங்கச்சங்கிலியை ஒரு திருடன் மலைப்படிகளிலேயே அறுத்தெடுத்துக் கொண்டு ஓடிவிட, அதைப் பார்த்த உபாசகர் அப்படியே விக்கித்துப் போனார். உபாசகரின் வயது அவனைத் துரத்திச் செல்ல அனுமதிக்கவில்லை. அந்தப் பெண்மணியோ கதற ஆரம்பித்து விட்டார். அப்போதுதான் அவர் அந்தத் திருடன் அறுத்துச் சென்றது ஒன்பது பவுனிலான தனது தாலிச் சங்கிலி என்பதையும் தெரிந்து கொண்டார். அது இன்னமும் கலக்கத்தைக் கொடுத்தது.
உபாசகரும் அந்த அம்மாளை நெருங்கி ஆறுதல் கூற முற்பட்டார்.
"ஐயோ சாமி… அவன் என் கழுத்துல வேற எந்த நகையை அறுத்துட்டுப் போயிருந்தாலும் நான் இவ்வளவு கவலைப்பட மாட்டேன். அவன் கொண்டு போனது என் தாலியை…" என்றபோது உபாசகருக்கு மேலும் அதிர்ச்சியாகியது.
"சாமி… கோவிலுக்கு வந்த இடத்துல இப்படி நடந்துடுச்சே… அப்ப என் புருஷனுக்கு ஏதாவது ஆபத்து வந்துடுமா? எனக்கு பயமா இருக்கு சாமி" என்று கண்ணீர் விட்டு அழுதார் அந்தப் பெண்மணி. சுற்றிலும் வேறு சிலர் கூடி விட்டனர்.
"ஹூம்… எல்லாம் கலிகாலக் கொடுமை" என்றார் ஒருவர்.
"இன்னும் ஏம்மா சும்மா இருக்கீங்க… போய் முதல்ல போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுங்க…" என்றார் இன்னொருவர்.
"ஆமா… உடனே போய் திருடனைப் பிடிச்சுட்டுத் தான் அவங்களும் மறுவேலை பாப்பாங்க…" என்றார் மூன்றாமவர். இப்படி ஆளுக்கு ஆள் பேச்சு.
அந்தப் பெண்மணியோ சட்டென்று ஒரு வைராக்கியத்துக்கு மாறினார்.
"அய்யா நான் அந்த ராமனுடைய பக்தை. இதுவரை பல கோடி முறை ராம நாமத்தை எழுதியிருக்கேன். ஜெபிச்சுமிருக்கேன். அதனால என்னையே ராமஜெயம் அம்மான்னுதான் கூப்பிடுவாங்க. அப்படிப்பட்ட எனக்கு இப்படி ஆயிடுச்சுன்னா அதுகூட அந்த ராமனோட எண்ணமாதான் இருக்கணும். இதை நான் நல்லதுக்குன்னே எடுத்துக்கறேன்" என்றார்.
எல்லாருக்குமே அந்த அம்மாவின் பேச்சு ஆச்சரியம்தான் தந்தது. ஆனால் உபாசகர் மனம் மட்டும் சஞ்சலப் பட்டபடியே தான் இருந்தது. அந்த அம்மாவும் சட்டப்படி போலீஸ் கம்ப்ளைன்ட் தருவதற்காகச் செல்ல, உபாசகர் திரும்ப மலைமேல் ஏறினார். திருச்சந்நிதிக்குச் சென்று அப்படியே நின்று விட்டார். அவருக்குள் பெரும் எண்ணப் போராட்டம்!
ஒரு கோயிலில் இப்படி ஒரு அடாத செயல் நடந்துள்ளது. இதை கேள்விப்படுபவர்கள் 'கோவிலிலேயேவா' என்றுதான் முதலில் கேட்பார்கள். அடுத்து 'கடவுள் இருக்கிறாரா இல்லையா' என்ற கேள்விக்குத் தாவி விடுவார்கள். 'அவர் இருந்தால் தன்னுடைய இடத்திலேயே இப்படி எல்லாம் நடக்க விடுவாரா' என்றும் கேட்பார்கள்.
எப்படிப் பார்த்தாலும் இந்த திருட்டுச் சம்பவம் எல்லா வகையிலும் தவறானதாக ஜீரணிக்க – முடியாததாகவே இருப்பதை அவர் புரிந்து கொண்டு கண்ணீர் சிந்தத் தொடங்கினார்.
அவர் ராமனுடைய வரலாறை கரைத்துக் குடித்திருப்பவர். ஆந்திராவில் பத்ராசலம் என்றொரு இடம். அங்கே ஒரு ராமர் கோவில் மிகப் பிரபலம். அந்த ஊரை பலநூறு ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு நவாப் தான் ஆண்டு வந்தான். தானீஷா என்பது அவன் பெயர். அவன் ஆட்சியில் கோபண்ணா என்பவர் பத்ராசலத்தின் தாசில்தாராக இருந்தார். இந்த கோபண்ணா தான் ராமர் கோவிலைப் புதுப்பித்துக் கட்டியவர். அதற்குப் பணம் தேவைப் பட்டபோது, மக்களிடம் வரியாக வசூலித்த பணம் இருந்தது. அந்தப் பணத்தை அப்படியே கோவில்கட்ட செலவிட்டு விட்டார். இதையறிந்த தானீஷா, 'எனக்கான வரிப்பணத்தை எடுத்து என்னிடம் அனுமதி வாங்காமல் நீ எப்படி கோவில் கட்டலாம்' என்று கேட்டு அவருக்கு 12 வருட சிறைத் தண்டனையை விதித்து விட்டான். கோபண்ணா உடனே ராமனை எண்ணி உருகி அழுதார். இந்த நிலையில் ராமபிரான் லட்சுமணனுடன் வேடர்கள் வடிவில் வந்தான். தானீஷாவைச் சந்தித்து, கோபண்ணா சார்பாக அவர் கோவில் கட்ட செலவழித்த அவ்வளவு பொற்காசுகளையும் திரும்பக் கொடுத்தார். தானீஷாவும் கோபண்ணாவை விடுதலை செய்தான். பிறகு தான் தனக்காக வந்து தானீஷாவிடம் பணம் கட்டியது சாட்சாத் அந்த ராமனும் லட்சுமணனுமே என்பது தெளிவானது.
ராமபிரான் தன் பக்தர்களைக் காப்பாற்ற இப்படி பல தருணங்களில் திருவிளையாடல் புரிந்துள்ளார். அதெல்லாம் கோவிலின் திருச் சந்நிதியில் நின்றபடி இருந்த உபாசகருக்குள்ளும் ஓடியது. அவர் மனமும் ராமஜெயம் அம்மாள் வரையிலும் ராமன் அதுபோல் ஒரு அற்புதம் நிகழ்த்த வேண்டும் என்று நினைத்தது. அதன் நிமித்தம் அவர் அங்கேயே ஒரு ஓரமாக அமர்ந்து, அனுமனுடைய மூல மந்திரத்தைச் சொல்லிக் கொண்டே தியானத்தில் அமர்ந்து விட்டார்.
அவருக்கு இப்போது ஒரே நோக்கம்தான்!
ராமஜெயம் அம்மாளுக்கு நீதி கிடைக்க வேண்டும். அதாவது தொலைந்த நகை திரும்பக் கிடைப்பது மட்டுமல்ல; அந்தத் திருடன் தண்டிக்கப்படவும் வேண்டும் என்று பிரார்த்தனை செய்யத் தொடங்கி விட்டார். அப்படி ஒரு நல்லது நடக்கும் வரை உணவு உண்ணப் போவதில்லை என்று சங்கல்பமும் செய்து கொண்டார்.
இந்நிலையில் போலீஸ் ஸ்டேஷனுக்குச் சென்ற ராமஜெயம் அம்மாளும் புகார் கொடுத்து விட்டு திரும்பிக் கொண்டிருந்தார். அந்த அம்மாளின் வீடு மிகப் பெரியது. வீட்டைச் சுற்றிலும் மரங்கள். அவர் வீட்டுக்குள் நுழைந்து நடந்ததை உறவினர்களிடம் கூறிவிட்டு நிதானமாக கொல்லைப்புறம் செல்லவும், அங்கிருந்த மரத்தில் குரங்கொன்று உட்கார்ந்தபடி இருந்தது. அதை ராமஜெயம் அம்மாள் கவனிக்கவில்லை. ஆனால் அதுவோ அந்த அம்மையாரைப் பார்த்தது. பின் தன் கையை உயரத் தூக்கியது. அப்போது அதன் கையில் ராமஜெயம் அம்மாளின் தங்கச் சங்கிலி. அதை அம்மாள் மேல் வீசி எறிந்தது. சொத்தென்று தன்மேல் வந்து விழுந்த சங்கிலியைப் பார்க்கவும் அந்த அம்மாளுக்கு ஒரே மகிழ்ச்சி. நிமிர்ந்து பார்த்திட குரங்கு தெரிந்தது. அடுத்த நொடியே 'ஆஞ்சநேயா' என்றுதான் பரவசமானார் அந்தப் பெண்மணி. ஆனால் அந்தக் குரங்கு வேகமாய் ஓடிவிட்டது. கொல்லையிலிருந்து சங்கிலியும் கையுமாக வந்த அந்தப் பெண்மணி திரும்பவும் நடந்ததைக் கூறவும் எல்லாருக்கும் ஒரே வியப்பு!
"அந்தக் குரங்கு நிச்சயம் ஆஞ்சநேயர்தான். எனக்குச் சந்தேகமில்லை" என்று பக்திப் பரவசத்துடனேயே கோயிலுக்குப் புறப்பட்டார்.
திருநீர்மலைக்கு வந்து படிகளில் அவர் ஏறத் தொடங்கும்போது, கீழே கடை போட்டிருந்தவர்கள் ஓடிவந்து என்ன நடந்தது என்று கேட்டனர். ராமஜெயம் அம்மாள் கூறவும், அப்படியே வாயைப் பிளந்து விட்டனர்.
"இப்பதான் தெரியுது. பேண்ட் சட்டை போட்ட ஒருத்தன் தலைதெறிக்க ஓடினான். பார்த்தப்போ குரங்கு ஒண்ணு அவனைத் துரத்திக்கிட்டே வந்துச்சு. அநேகமாக அவன்தான் சங்கிலியைத் திருடியிருக்கணும். துரத்தின குரங்கு எப்படியோ அவன்கிட்ட இருக்கற சங்கிலியைத் தட்டிப் பறிச்சிருக்கணும்" என்றார் ஒருவர்.
ராமஜெயம் அம்மாளும் அதை ஆமோதித்தவராக மலை ஏறினார். உபாசகர் சந்நிதியிலேயே இருந்தார். அவரிடம் 'சாமி நகை கிடைச்சிடுச்சு' என்று ராமஜெயம் அம்மாள் கூறவும், உபாசகர் கண் மலர்ந்தார். அப்பாடா என்றிருந்தது. "இப்ப நினைச்சாலும் பிரமிப்பாக இருக்கு. கரெக்ட்டா என் வீட்டுக்கு வந்து அது நகையை திருப்பித் தந்ததை நினைச்சா எனக்கு புல்லரிக்குது" என்று கூறி கண்ணீர் சிந்தினார். பிறகு தான் அடுத்தடுத்து பல தகவல்கள் வரத் தொடங்கின.
அந்தத் திருடன் பல வருடங்களாகவே திருநீர் மலைக்கு வருபவர்களிடம் திருடியுள்ளான். கோவில் உண்டியலை உடைக்கவும் முயன்று தோற்றவனாம் அவன். அப்படிப்பட்டவன் ஓடவும், குரங்கும் துரத்தியுள்ளது. தலைதெறிக்க ஓடியவன் சாலையில் எதிரில் வந்த லாரியில் அடிபட்டு தூக்கி எறியப்பட்டிருக்கிறான். அப்போது சங்கிலியும் எங்கோ போய் விழ, அதைத்தான் குரங்கும் எடுத்துவந்து தந்துள்ளது. அடிபட்ட அவன் ஆஸ்பத்திரியில் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறான் என்பதும் தெரிய வந்தது. ராமஜெயம் அம்மாள் அப்படியே அதைக் கேட்டு விக்கித்துப் போனார். உபாசகர் தன் விரதத்தை முடித்துக் கொண்டார்.
ராமஜெயம் அம்மாள் வீடு திரும்பினார். அவர் கணவர் எதிரில் கை கால்களிலெல்லாம் கட்டுப் போட்டுக் கொண்டு வந்தார். என்னாயிற்று என்று கேட்ட போது, வரும் வழியில் ஒரு விபத்து நேர்ந்து விட்டதையும் அதில் உயிர் பிழைத்ததே பெரும்பாடு என்றும் கூறினார். ராமஜெயம் அம்மாளுக்கு உடனேயே பல உண்மைகள் புரிந்து விட்டன. பெரிதாக தனக்கு வர வேண்டிய ஒரு துன்பம்தான் இப்போது சிறிதாக தாங்கும் அளவுக்கு மாறியிருக்கிறது என்று.
அப்போது உபாசகரும் அங்கு வந்தார். அதை ராமஜெயம் அம்மாள் எதிர்பார்க்கவில்லை. அவரை வரவேற்று அமரச் செய்து உபசரிக்கத் தொடங்கினார். அப்போது உபாசகரும் ஒரு முக்கியமான விஷயத்தைக் கூறுவதற்காக வந்ததைக் கூறி, சொல்லத் தொடங்கினார்.
"அம்மா… மலைல உங்களுக்கு ஏற்பட்டது ரொம்ப வருத்தமான விஷயம். நான் உடனேயே மலைக் கோவிலுக்குப் போய் உபாசனைல உட்கார்ந்துட்டேன். கோவில்லயே இப்படியெல்லாம் நடந்தா எப்படிங்கறதுதான் என் பிரதான வருத்தம். எப்பவும் என் உபாசனா சமயத்துல அனுமன் பிரத்யட்சமாகறது உண்டு. அப்பாவும் வந்தான் கவலைப்படாதே. எல்லாம் நல்ல விதமா முடியும். அந்த அம்மாவுக்கு தாலியை இழக்கற ஒரு தோஷம் இருக்கு. ஒரு நாழிகையாவது அவங்க தாலி இல்லாம இருக்கணும். அதேபோல் அவள் கணவருக்கும் கண்டம் இருக்கு. இரண்டு கணக்கையும் நேர் செய்து அவங்களுக்கு அனுக்ரஹம் பண்ண வேண்டியது என் கடமை. #இது_என்_தெய்வமான#ராமபிரான்_உத்தரவு. #என்_தெய்வத்தோட#நாமத்தை_எப்பவும் #உச்சரிக்கறதோட#பலரையும்_உச்சரிக்க #வைச்சவங்க_அவங்க. #அவரை_நான்_கைவிட #மாட்டேன்" அப்படின்னு #சொன்னான். நான் கண்விழிக்கவும் நீங்களும் சங்கிலியோடு வந்து நின்னீங்க.
இங்க வரவும், உங்க கணவரும் விபத்துல தப்பி வந்தது தெரிஞ்சது. ஒரு #பெரும்_கெட்ட_நேரத்தை அனுமன் மிகச் #சிறியதா #மாத்தி,
#விதிப்படியும்_எல்லாம் #நடந்த மாதிரி #செய்துட்டான்.
ஒரு கல்லுல இரண்டு மாங்காய் அடிக்கறதுன்னு சொல்வாங்க. இங்க ஒரு கல்லுல இரண்டு இல்லை, மூன்று மாங்காய் அடிச்சிருக்கான். அதாவது #உங்க_தோஷம்,
#உங்க_கணவர்_தோஷம் #நீங்கி, அந்தத் திருடனுக்கு #பாடம்#புகட்டிட்டான். நான் அடுத்து ஆஸ்பத்திரிக்கு அவனைப் பார்க்கத்தான் போய்க்கிட்டிருக்கேன். வழில இத உங்கள பாத்து சொல்ல வந்தேன் " என்றார் உபாசகர். ராமஜெயம் அம்மாள் மட்டுமல்ல; அவர் கணவரும் #ஆனந்தக் கண்ணீர் சிந்தினார்.
💚 ஸ்ரீராமஜயம்💚
No comments:
Post a Comment