Courtesy:Sri.Manianபரிணாம வளர்ச்சியில் அசேதனப் பொருளாக இருந்து சேதன வஸ்துவாக மாறி மனிதப்பிறவி வாய்த்து அதன் வளர்ச்சியாக , மேல் பிறப்புக்கள் அமைகின்றன என்று மாணிக்கவாசகர் சொல்ல நாம் அறிகிறோம்.
மனிதப்பிறவி அமையும் போது " கல்லா மனிதராய்" எனபது தான் முதல் நிலை.
கற்ற மனிதர் என்பது அதற்குப் பிறகு .
இங்கு கற்றல் எனபது என்ன? வெறும் புஸ்தக அறிவா? கேள்வி அறிவா? அவை எல்லாம் உலகியல் வாழ்ககைக்கு உதவலாம் எனபதோடு சரி. தெயவ நிலைக்குக் உயிரைக் கொண்டு போக இந்த அறிவெல்லாம் துணை நிற்காது.
அதற்கு வேண்டுவது ஆன்ம அறிவு.
ஆன்ம அறிவு பெற முதலில் " தெய்வம் எனபதோர் சித்தம்" உண்டாக வேண்டும்
இறை அருள் இருந்தால்தான் " அவன் அருளாலே அவன் தாள்" அறிய முடியும்
"கல்லா மனிதர் " நிலையிலிருந்து கற்ற மனிதர் நிலைக்கு வருவதறகே பல பிறவி எடுக்க வேண்டி இருக்கும் என்று ஆன்றோர் கூறுவார். இந்தப் பிறவிகளில் ஏறகும் வினைப் பயன்கள் பின்னைப் பிறவிக்கு வித்தாய் அமைகின்றன என்பர். இப்படி பல பிறவிகளில் சேரும் வினைகள் " தொகுப்பு வினையாகி" இருந்து ஒவ்வொரு பிறவியிலும் " பகுப்பு வினையாய்" சேரந்து
வாழ்வை அமைக்கின்றன.
இந்த மாயா," மாயப் பிறப்பு" அறுத்தல் ஒன்றே பிறவிப் பயனாகக் கருதப் படுகிறது.
பிறப்பு அறுத்தல் என்ற நிலையை எட்ட வேண்டுமானால், அந்த " மன்னன் அடி சேர" வேண்டும். முதற் படியாக அவனைப் போற்றி வழிபட வேண்டும்.
" ஈசன் அடி போற்றி, எந்தை அடி போற்றி,
தேசன் அடி போற்றி, சிவன் சேவடி போற்றி
நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி
சீரார் பெரும்துறை நம் தேவன் அடி போற்றி
ஆராத இனபம் அருளும் மலை போற்றி"
என்றெல்லாம் அந்தப் பரம் பொருளை, சிவனை, சிந்தையில் இருத்தி,
போற்றி போற்றி என்று,வாழத்தி வாழ்த்தி வணங்க வேண்டும்.
பிறப்பு அறுத்தல் ஒன்றுதான் அந்தப் பரம் பொருளிடம் நாம் " வேண்டுவதாக" இருக்கலாம். அது கூட உசிதமற்றது எனபது மாணிக்க வாசகர் அபிப்பிராயம் . " வேண்டத் தக்கது அறிவோன் அவன்" அவன் என்ன அருள் செயகிறானோ, அதைத்தான் நாம் வேண்டினதாகக் கொள்ள வேண்டும் எனகிறார்.
" வேண்டத் தக்கது ஒன்று உண்டு என்னின் அதுவும் உன்தன் விருப்பன்றோ"? எனபது அவர் வாக்கு.
மனிதனாகப் பிறந்து , உலகியல் வாழ்ககையில் உழலும் போது, நாம் எதறகாகப் பிறவி எடுத்தோம் எனபதே மறந்து போய் விடுகிறது." ஆறு கோடி மாயா சக்திகள் வேறு வேறு தம் மாயைகள்" தொடங்கின காரணத்தால் அவைகளின் பின்னால் போய் விடுகிறோம். வந்த காரியம் மறந்து விட்டது.
சரி, பிறந்து , மறந்து வளரந்து, வரும் போது , வாழ்வில் பல துனபங்களும் துயரங்களும் எதிர் வருகின்றன. அப்போது
மற்றவர் வழிகாட்ட, துனபம் துடைக்க ஒருவன் உள்ளான் என்று எண்ணி அந்தப் பரம் பொருளை நாடுகிறோம்.
இறைவனை நாடுவது எனபது, ஒன்று "துயரம் போக்கவோ, அல்லது இனபம் பயக்கவோ" என்ற இரண்டுக்குத்தான் எனபது காரணமாக அமைந்து விடுகிறது.
இறைவனை நாடுவதை " பக்தி" பண்ணுவது என்ற வார்த்தையால் குறிப்பிடுகிறோம். உணமையில் " பக்தி" எனபதே பிராரத்தனை என்றப் பொருளில் தான் கையாளப் படுகிறது. பக்தி பண்ணுவது எனபதை தவறாகப் புரிந்து கொண்டுவிட்டோம். இறைவனிடத்து வாத்ஸலயம், பிரேமை ,பிரியத்துடன் இருக்க
வேண்டும் என்பது பொருத்தமாக இருக்குமோ!
மீரா பக்தி செய்ததைப் போலவோ,
சூர்தாஸ் பக்தி செய்ததைப் போலவோ,
வேடன் கண்ணப்பன் பக்தி செய்ததைப் போலவோ நாம் பக்தி செயவதில்லை.
வேடன் கண்ணப்பனை பக்தன் என்ற சொல்லால் குறிப்பிடாமல், " அன்பு" என்ற குணத்தாலேயே குறிப்பிடுகிறார் மணிவாசகர்.
" கண்ணப்பன் ஒப்பதோர் "அன்பு" இன்மை கண்டபின், என் அப்பன், என் ஒப்பு இல், என்னையும் ஆட்கொண்டான் "என்கிறார்.
கண்ணப்பன் அனபின் முழு வடிவம்.
நானோ, அனபினமையின் முழுவடிவம்.
கண்ணப்பன் விஷயத்தில்,அன்பு செலுத்தப்பட்டு அதன் விளைவாக " ஆட்கொள்ளுதல்" எனபது நடக்கிறது.
என் விஷயத்தில் , அன்பின்மையின் முழு வடிவமாக இருந்தும் கூட, அவன் பெருங் கருணையினால் ஆட் கொள்ளுதல் நடக்கிறது. கண்ணப்பன் அனபு செலுத்தி உயர்ந்தான். நான் ( அனபு என்பது என்ன என்று கூட அறியாமல்) அவன் கருணையினால் மட்டுமே இந்த்நிலை எயதினேன். எனகிறார்
ஆக , நாம் வேண்டுவது அந்தப் பரம் பொருளினிடத்து ஆராத அன்பு மட்டுமேயாக இருக்க வேண்டும்.
ஆண்டவனிடத்து பக்தி செய்வது, பிறர் காண அல்ல. சுய விளம்பரத்திற்காகவும் அல்ல.
அவன் படைத்த பொருட்களை அவனுக்கே, தாம் கொடுப்பதாக பாவித்து,
அளிப்பது எவ்வளவு பெரிய அறியாமை.!
உலகமே அவன் படைத்தது. அதில் உண்டாகும் பொருடகள் அத்தனைக்கும் உடைமையாளன் அந்த இறைவன் தான்.
அப்படி இருக்க, அவன் படைத்த பொருளை அவனுக்கு அர்பபணிக்கும் போது, அந்த நிகழ்வு அனபின் காரணமாக அமைய வேண்டும். ஆணவத்தின் காரணமாக அல்ல.
மாறாக, அந்த இறைவனுக்கு நடக்கும் அபிஷேக ஆராதனைகள் எல்லாம் சுய விளம்பரத்திறகாகவும், ஆணவப் போக்கின் அடையாளமுமாக அமைந்திருப்பதைக் காணும் போது மனத்துனபமே ஏற்படுகிறது.
இறைவன் ஒரு வியாபாரி அல்ல. ஒன்றைக் கொடுத்து ஒன்றைப் பெற . பக்தி எனபது பண்டமாற்றுச் செயலுக்கு அல்ல. அவன் அனபிற்கு ஆட்படுபவன். அனபு ஒன்றுக்கே ஆட்படுபவன்.
மாணிக்கவாசகர் வெகு அழகாக ஒரு பாடலில் சொல்லுவார். இங்கு ஒரு வினோதமான பண்ட மாற்றுதல் நடக்கிறது. முழுவதுமாக தன்னையே கொடுத்து விடுவது. கொடுத்து விடுவதா? இல்லை இல்லை, கொள்ளப் படுவது. எடுத்துக் கொள்ளப் படுவது
"அனபிலார் எல்லாம் தமக்குரியர் அனபுடையார்
எனபும் உரியர் பிறரக்கு"
என்ற வள்ளுவர் வாக்குக்கு இணங்க தன்னையே தரும் நிலையில் , தாம் பிறர்க்கு உரிய நிலையில் இருப்பது
உன்னைத் தந்து விட்டாய்
என்னைக் கொண்டு விட்டாய்
என்று சொல்லும் போது, தந்ததும்
கொண்டதும் எல்லாம் அவன் செயல் தான் , எனசெயல் ஒன்றும் இல்லை எனபது தெளிவாகத் தெரிகிறது.
பாடலைப் பார்க்கலாம்
" தந்தது உன்தன்னை
கொண்டது என் தன்னை.
சங்கரா, ஆர் கொலோ சதுரர்?"
அந்தம் ஒன்றில்லா ஆனந்தம் பெற்றேன், யாது நீ பெற்றது ஒன்று எனபால்
சிந்தையே கோயில் கொண்ட எம்பெருமான்!
திருப்பெருந்துறை உறை சிவனே!
எந்தையே! ஈசா! உடல் இடம் கொண்டாய்
யான் இதறகு இலன் ஒரு கைம்மாறே!
எனபது தான் பாடல்
உன்னைக் கொடுத்து , என்னை எடுத்துக் கொண்டாய்.
இதில் யார் கெட்டிக்காரர்?
உன்னைப் பெற்றதன் பயனாக, எல்லை இல்லாத, முடிவு இல்லாத, ஆனந்தத்தை நான் பெற்றேன். எனக்கு எவ்வளவு பெரிய பாக்கியம். என்னைக் கொண்டதன் பயனாக உனக்கு என்ன கிடைத்தது?
ஒன்றும் கிடைக்கவில்லை எனபது வெளிப்படை.
என் சிந்தையை கோவிலாகக் கொண்ட திருப்பெருந்துறை உறை சிவபெருமானே, எந்தையே , ஈசா,
என் உடல், உன் இடமாகக் கொண்டாய். இதறகு நான் என்ன கைம்மாறு செய்ய முடியும்? என்று உருகுகிறார்
இறைவனிடத்து செய்யும் அனபே இப்படி அவரை சொல்ல வைக்கிறது.
மற்றொரு பாடல் பார்ப்போம்
பரந்து பல் ஆய் மலர் இட்டு, முட்டாது அடியே இறைஞ்சி
"இரந்த எல்லாம் எமக்கே பெறலாம்" என்னும் அனபர் உள்ளம்
கரந்து நில்லாக் களவனே! நின் தன் வார் கழற்கு அன்பு எனக்கு
நிரந்தரமாய் அருளாய் -நின்னை ஏத்த முழுவதுமே!"
எங்கெல்லாமோ திரிந்து , பரந்து கிடக்கும் இந்த உலகத்தில் உள்ள பல வகையான மலரகளையும் அளவில்லாத அளவில. கொண்டு வந்து( நான் சேகரித்தேன் என்ற ஆணவத்தோடு)இடைவிடாது , பலனகளை வேண்டி, பூசை செயதால், உன்னிடத்தில் வேண்டினது எல்லாம் கிடைத்து விடும் என்று எண்ணி, பூசை செயவார் உள்ளத்துக்குள் போகாமல் ஒளிந்து கொண்டு இருக்கிறாய். நான் அப்படி எல்லாம் எண்ணப் போவதும் இல்லை, கேடகப் போவதும் இல்லை.
நான் வேண்டுவது எல்லாம் ஒன்றே ஒன்றுதான்.
உன்னிடத்தில் , உன் திருவடிகளுக்கு, நிரந்தரமாக, மாறாத, , அன்பு
வேண்டும். உன்னை ஏத்தித் தொழ , முழுவதுமான, பங்கு போடாத, அன்பு ஒன்றை மட்டும் எனக்கு அருளி விடு. வேறு ஒன்றையும் நான் கேட்கப் போவது இல்லை.
உன் திருவடிக்கு, அகம் குழைந்து, அனபு உருகி, பூமாலை புனைந்து ஏத்தேன், புகழந்து உரையேன், நின் திருக் கோயில், தூகேன், மெழுகேன் , கூத்து ஆடேன்.
இவை எல்லாம் அன்பின் காரணமாக அமைவது. அனபு உள்ளத்தோடு உருகி அழுதால் உன்னைப்பெறலாமே என்று இறைவனிடத்து அனபு செயவது தான் பக்தி என்று அனபின் பெருமையை போற்றுகின்றார் மாணிக்கவாசகப்பெருமான்.
Place of good things . . . If an egg is broken by an outside force, a life ends. If it breaks from within, a life begins. Great things always begin from within.
!->
Thursday, August 22, 2019
Bhakti & Manickavasagar
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment