A nice post about Sri Appayya Dikshitar in Tamil:
The post cites two verses from two royal inscriptions of the 16th Century CE that mention Sri Dikshitar in glorious terms.
தஞ்சை செவப்பநாயக்கரின் ஸாஸனத்தில் மூன்று பெரும் ஆச்சார்யர்கள் பற்றிய குறிப்பு:
தஞ்சையை பொ.யு.1539-1580 வரை ஆட்சிபுரிந்த முதல் நாயக்க மன்னர் செவப்ப நாயக்கர் ஆவார். இவர் விஜயநகரப் பேரரசர் அச்யுதராயரின் தங்கையின் கணவர் ஆவார். தஞ்சை நாயக்க மன்னர்களில் இவர் மட்டுமே சைவர்.இவரது அரசவையை மூன்று ஸமயங்களின் பெரும் ஆச்சார்யர்கள் அலங்கரித்தனர்.அவர்கள் முறையே,சிவாத்வைத மற்றும் அத்வைத மதங்களின் பெரும் ஆச்சார்யரும்,ஸ்ரீகண்டமதப்ரதிஷ்டாபனாச்சார்யருமான ஸ்ரீமான் அப்பைய தீக்ஷிதேந்த்ரர்,விஷிஷ்டாத்வைதமதத்தின் ஒரு முக்கியமான ஆச்சார்யரான ஸ்ரீ தாத்தாச்சார்யர்,மாத்வமதத்தின் முக்கியமானதொரு ஆச்சார்யரும் மஹானுமான ஸ்ரீ விஜயேந்த்ரதீர்த்தர் ஆகியோர் ஆவர்.பொ.யு.1580ல் செவப்பநாயக்கரால் வெளியிடப்பெற்ற ஸாஸனம் ஒன்றில் இவர்களைப் பற்றிக் கூறப்படுகிறது. அந்த ஸ்லோகம் பின்வருமாறு,
"த்ரேதாக்னய இவ ஸ்பஷ்ட விஜயீந்த்ரயதீஶ்வர|
தாதாசார்யோ வைஷ்ணவாக்ர்யோ ஸர்வஷாஸ்த்ரவிஶாரத|
ஶைவாத்வைதைகஸாம்ராஜ்ய ஸ்ரீமானப்பையதீக்ஷித|
யத்ஸபாயா மத ஸ்வ ஸ்வ ஸ்தாபயன்த ஸ்திதாத்ரய||"
மூன்று புனிதமான அக்னிகளைப்போல யதீஶ்வரரான விஜயீந்த்ரர்,வைஷ்ணவர்களின்தலைவரும்,அனைத்து ஸாஸ்த்ரங்களையும் அறிந்தவருமான தாதாச்சார்யர் மற்றும் சைவம் மற்றும் அத்வைத தத்வங்கள் எனும் ஸாம்ராஜ்யத்துக்கு அதிபதியான ஸ்ரீமான் அப்பைய தீக்ஷிதர் ஆகிய மூவரும் செவப்பநாயக்கரின் அரசவையில் கூடி தங்களின் மதக்கருத்துக்களையும்,தத்வங்களையும் ஸ்தாபனம் செய்து வந்தனர்.
இங்கு மற்ற ஆச்சார்யர்கள் பற்றிக் கூறப்படுவது நமக்கு முக்யமில்லை.இங்கு தீக்ஷிதேந்த்ரர் பற்றிக் கூறும்போது உபயோகிக்கப்படும் வார்த்தைகளைப் பாருங்கள்.இதன்மூலம் தீக்ஷிதேந்த்ரரை எந்தளவுக்கு அரசர்கள் மதித்துப் போற்றினர் என்பது தெரிகிறதல்லவா.சிலர் தீக்ஷிதேந்த்ரர் விஜயேந்த்ரரிடம் விவாதத்தில் தோற்றார் என்று கதைகட்டி வருகின்றனர். இந்த ஸாஸனம் வெளியிடப்பெற்ற ஆண்டு பொ.யு.1580.அப்போது தீக்ஷிதேந்த்ரர் நூறு க்ரந்தங்களை இயற்றி சிவாத்வைத மற்றும் அத்வைத மதஸ்தாபனம் செய்து முடித்துவிட்டார்.அப்போது அவருக்கு வயது அறுபது.இதன்பின் தான் பொ.யு.1582ல் தீக்ஷிதேந்த்ரர் தனது சொந்த ஊரான அடையப்பலத்தில் தனக்கு சின்னபொம்ம நாயக்கர் செய்த கனகாபிஷேகப் பொன்னைக் கொண்டு ஸ்ரீ காலகண்டேஶ்வரர் ஆலயத்தை நிர்மாணித்தார்.மேலும் அரசரிடமிருந்து உதவிகள் பெற்று 500 மாணவர்கள் சிவாத்வைத ஸாஸ்த்ரங்களைக் கற்றுக்கொள்ள வேண்டி ஒரு கல்லூரியையும் தொடங்கினார்.அக்கோவிலில் உள்ள கல்வெட்டு முக்கியமானது.விவாதத்தில் தோற்றவரை இவ்வாறு இரண்டு முக்கியமான நாயக்க மன்னர்களான செவப்பநாயக்கரும்,சின்னபொம்ம நாயக்கரும் மதித்துப் போற்றியிருப்பார்களா,செவப்பநாயக்கர் தனது ஸாஸனத்தில் பெருமையுடன் "ஶைவாத்வைதைகஸாம்ராஜ்ய ஸ்ரீமானப்பைய்யதீக்ஷித" என்று குறிப்பிட்டிருப்பாரா அல்லது சின்னபொம்ம நாயக்கர் பொ.யு.1572-75க்குள் கனகாபிஷேகம் செய்து போற்றியிருப்பாரா.மேலும் இதன்பிறகு விஜயநகரப் பேரரசர் இரண்டாம் வேங்கடபதி ராயரும் தீக்ஷிதேந்த்ரரை ஆதரித்தார்.இதனால் சில முக்கியமான வரலாற்று உண்மைகள் தெரியவருகின்றன.தீக்ஷிதேந்த்ரரின் பெருமைகளும் தெரியவருகின்றன.
No comments:
Post a Comment