Monday, May 13, 2019

Vishnu Sahasranama 335to 344 in tamil

Courtesy:Smt.Dr.Saroja Ramanujam

விஷ்ணுஸஹஸ்ர நாமம் -35

335.வாஸுதேவ: - வஸதி, ஆச்சாத்யதி ஸர்வம் இதி வஸு: எங்கும் நிறைந்தவன். தன் மாயையால் தன்னை மறைத்துக்கொண்டவன்.

தேவ என்ற சொல் தீவ்யதி என்ற வினைச்சொல்லில் இருந்து வந்தது. தீவ்யதி என்றால் ப்ரகாசிப்பது, விளையாடுவது, (லீலை) ஜயிப்பது என்று பல பொருள்கள். எங்கும் பிரகாசித்தாலும் பக்தர்களால் மட்டுமே அறியக்கூடியவன். ஜகத் சிருஷ்டி என்பது அவனுடைய லீலை. படைத்தல் காத்தல் அழித்தல் எல்லாமே அவன் திருவிளையாடல்தானே. அவன் அன்பாலும் சக்தியாலும் எல்லாரையும் ஜெயிக்கிறான்.

வஸு:ச அஸௌ தேவஸ்ச இதி வாஸுதேவ:

ஸர்வாணி தத்ர பூதானி வஸந்தி பரமாத்மனி
பூதேஷு ச ஸ: ஸர்வாத்மா வாசுதேவ: தாதா: ஸ்ம்ருத: ( விஷ்ணு புராணம்- 6.5.80)
எல்லாம் அவனிடம் அடங்கி இருப்பதாலும் அவன் எல்லாவற்றிற்கும் உள்ளே இருப்பதாலும் வாஸுதேவன் எனப்படுகிறான். ஸர்வவ்யாபீ ஸர்வபூதாந்தராத்மா.

வாஸுதேவன் என்ற சொல் சாதாரணமாக வசுதேவஸ்ய அபத்யம் புமான் வாஸுதேவ: என்ற பொருளில் வாஸுதேவனின் புத்ரன் அதாவது கிருஷ்ணன் என்பதையே குறிக்கும். 
த்வாதசாக்ஷர மந்திரமாகிய ஓம் நமோ வாஸுதேவாய என்பது அஷ்டாக்ஷரத்திற்கு ஒப்பானது.

336.ப்ருஹத்பானு: -ப்ருஹத் என்றால் பெரிய என்று பொருள். பானு: என்றால் கிரணம். சூர்யச்சந்தராதிகளின் ஒளிக்குக் காரணமாக இருப்பதால் ப்ருஹத்பானு: எனப்படுகிறான்..

337. ஆதிதேவ: -முழு முதற் கடவுள்.

338 புரந்தர: -புரம் தார்யதி இதி.-புரங்களை அழிப்பவன் . த்ரிபுரசம்ஹாரம் செய்த சிவனுக்கும் இந்தப் பெயர் உண்டு. இங்கு பூதசரீரம், (physical body) சூக்ஷ்ம சரீரம் , (subtle body – mind and intellect) காரண சரீரம் ( causal body- ego) இம்மூன்றையும் அழித்து ஆத்மாவுடன் ஒன்றுபடசெய்பவன் என்று பொருள்.

339. அசோக:-ஆத்யாத்மிகம் என்னும் சோகத்தைப் போக்குபவன். 
மூன்றுவகை துக்கங்களான , ஆதிதைவிகம், ஆத்யாத்மிகம் ஆதி பௌதிகம் இவைகளில் ஆதிதைவிகம் என்பது மானுட சக்திக்கு அப்பாற்பட்ட அசுரர்கள், இயற்கை உத்பாதங்கள் இவைகளால் ஏற்படுவது. புரந்தர: என்னும் நாமம் இதிலிருந்து காப்பதைக் குறிக்கிறது.

ஆத்யாத்மிகம் என்பது நம் எண்ணங்களாலும் செயல்களாலும் ஏற்படுவது. ஆறுவகை துக்கங்கள் இந்த வகைப்படும். அவையாவன, பசி, தாகம், மனச்சோர்வு , மனமயக்கம், வயோதிகம் , மரணம். பக்தர்கள் இவ்வகை துக்கங்களிலிருந்து பகவானுடைய அருளால் விடுபடுகிறார்கள்.

ஏனென்றால் அவர்கள் "யோகக்ஷேமம் வஹாம்யஹம் " என்ற பகவானுடைய வாக்கில் நம்பிக்கை வைத்து எதைப்பற்றியும் கவலைப் படுவதில்லை.

மூன்றாவது வகையான ஆதிபௌதிகம் என்பது மற்ற உயிர்களாலோ ஜடவஸ்துக்களாலோ ஏற்படுவது. அடுத்த இரண்டு நாமங்களும் இந்த வகை துக்கத்திலிருந்து காப்பாற்றுவதைக் கூறும் நாமங்கள்.

340. தாரண:-தாரண என்றால் கரை சேர்ப்பது.சம்சாரசாகரத்தினின்று கரை சேர்ப்பதால் தாரண; எனபபடுகிறான். ஆதிபௌதிகம் எனப்படும் துக்கத்திலிருந்து காப்பாற்றுகிறான் என்றும் பொருள்.

341. தார:- தார என்றால் கரை. சம்சாரசாகரத்திலிருந்து கரை சேர்ப்பது மட்டுமல்லாமல் அவனே கரையாக உள்ளான். ( he is the means as well as the goal)

342. சூர: வெற்றியுடையவர். சர்வ சக்திமான் . சூரர் என்றால் எங்கும் செல்பவர் என்றும் பொருள். சர்வவ்யாபி.

343. செளரி: -சூரஸ்ய கோத்ராபத்யம் புமான். சூரனின் புத்ல்வனான் வசுதேவரின் பிள்ளை

344. ஜனேச்வர:-எல்லா ஜீவராசிகளுக்கும் ஈஸ்வரன்

  

No comments:

Post a Comment