விஷ்ணுஸஹஸ்ரநாமம்-34
அடுத்த பதினொன்று நாமங்களும் கூர்மாவதாரத்தை குறிப்பிடுவதாக எண்ணப்படுகிறது.
324. ப்ராணத:ப்ராணான் ததாதி இதி. உயிர் கொடுப்பவன்.கூர்மாவத்ரத்தில் தேவர்களுக்கு அம்ருதம் அளித்ததன் மூலம் புத்துயிர் கொடுத்தவன்.
325. வாஸவானுஜ:-வஸதி சர்வத்ர இதி வஸு: எங்கும் உள்ளவன். வஸோ: இதம் வாஸவம். உலகம். (அவனுடையது என்று பொருள்) வாஸவம் அனுஜாத: , அனுப்ரவிஷ்ட: , அந்தர்யாமியாக எல்லாவற்றிலும் உள்ளே இருப்பவன்.
கூர்மாவதாரத்தில் தேவர்களுக்குள்ளும் அசுரர்களுக்குள்ளும் வாசுகியின் உள்ளும் புகுந்து களைப்படைந்த அவர்களுக்கு வலிமையைக் கொடுத்தவன்.
வாஸவ: என்றால் இந்திரன் என்றும் பொருள். வாமனாவதாரத்தில் அதிதிக்கும் கச்யபருக்கும் புதல்வனாக அவதரித்ததால் இந்திரனின் இளைய சகோதரன் என்றும் சொல்லப்படுகிறான்.
326.அபாம் நிதி: - ஸரஸாம் அஸ்மி ஸாகர: ( ப.கீ. 1௦.24) நீர் நிலையங்களுள் நான் கடலாக இருக்கிறேன். நாரானாம் அயன: நாராயண: ( நார என்பது ஜீவர்கள்) நதிகளுக்கு கடைசி இருப்பிடம் கடல் என்பது போல ஜீவர்கள் கடைசியில் சேர்வது பகவானிடத்தில்.
327. அதிஷ்டானம் – பிரபஞ்சத்தின் ஆதாரம். 'மத்ஸ்தானி சர்வபூதானி,' (ப.கீ.9.4) கூர்ம அவதாரத்தில் மந்தர மலையை முதுகில் தாங்கினார்.
328. அப்ரமத்த:- பக்தர்களைக் காப்பதில் எப்போதும் கவனத்துடன் இருப்பவர். கூர்மாவதாரத்தில், மந்தரமலையை பார்கடலுக்கு எடுத்துச்செல்லவும், அது முழுகாமல் தாங்கவும் தேவர்களுடன் கூடத் தானும் கடையவும் செய்ததுமல்லாமல் கடைசியில் அமுதத்தை அவர்களுக்கு கிட்டும்படியும் செய்தார்.
329. ப்ரதிஷ்டித: -அவர் மகிமையிலேயே நிலை பெற்றவர்.
'ஸ பகவ: கஸ்மின் ப்ரதிஷ்டித: ? ஸ்வ மஹிம்னி,' – சந்தோக்ய உபநிஷத்
330.ஸ்கந்த: -ஸ்கந்த என்றால் பெருகுவது, வற்றுவது இரண்டும் பொருள். தேவர்களுக்கு அமுதத்தைக் கொடுத்தார் அசுரகளுக்கு அது இல்லாமல் செய்தார்.
ஸ்கந்த: என்பது முருகனின் பெயர் என்று எடுத்துக் கொண்டாலும் அது பொருத்தமே. ஏனென்றால் 'சேனாநீனாம் அஹம் ஸ்கந்த:,' (ப.கீ.-9.24) நான் சேனைத் தலைவருள் ஸ்கந்தன் என்று கூறியுள்ளாரே.
331. ஸ்கந்ததர:-தர்மமார்க்கத்தை தாங்குகிறவர்
.
332. துர்யா: - துர என்றால் முன்பகுதி. துரம் யாதி இதி துர்ய: அம்ருதமதனத்தில் முன் நின்றவர்
.
333.வரத:- வரம் ததாதி இதி. வரமளிப்பவர்.
334.வாயுவாஹன: - காற்றையும் இயக்குபவர். ஏழு விதமான காற்றை வீசும்படிச் செய்பவர். மருத் தேவர்கள் என்பவர் ஏழு வகை.
மஹாபாரத சாந்தி பர்வத்தில் ஏழுவகைக் காற்று பற்றிய தகவல் கிடைக்கிறது:
ஆவாஹன் = உயிர் வாயு / ஆக்சிஜன்
ப்ரவாஹன் = மழை பொழியும் மேகம் கொணர்வோன்
உத்வாஹன் = மேகத்தை மழையாக மாற்றும் குளிர்க் காற்று
சம்வாஹன் = பாலைவன வறண்ட காற்று
விவாஹன் = வானத்தில் உள்ள நீரைத் தாங்குபவன்
பரிவாஹன் = சூரிய, சந்திரர்களைத் தாங்கும் காற்று
பரவாஹன் = எல்லாவற்றுக்கும் அப்பாற்பட்டது; தஙகு தடையின்றி வழங்குவது
No comments:
Post a Comment