விஷ்ணு ஸஹஸ்ர நாமம்
302. யுகாதிக்ருத் –யுகம் முதலிய வேறுபாடுகளை உண்டாக்கியவர். யுகங்களை ஆரம்பிக்கிறவர்.
303.யுகாவர்த்த: யுகங்களின் சுழற்சியை செய்பவர்.
304. நைகமாய: -ந ஏக மாய: -அவருடைய மாயை ஒன்றல்ல பல விதமான மாயைகளை உடையவர். ஆலிலைமேல் ஒரு குழந்தையாக இருந்து உலகங்களை உள்ளடக்கியது போல. கிருஷ்ணாவதாரம் முழுவதுமே மாய லீலைகள்.
305. மஹாசன: -அனைத்தையும் விழுங்குபவர். உலகம் உண்ட பெருவாயன்.
'எவருக்கு பிரம்மக்ஷத்ரியர் முதலியோரும் அன்னம் போன்றவர்காலோ எவருக்கு உலகை உண்ணும் யமனும் ஊறுகாய் போன்றவனோ அவர் பெருமை எத்தகையதென்று யார் உணர்வார் .' –கடோபநிஷத்
306. அத்ருச்ய:- புலப்படாதவர். புலன்களுக்கும் மனதிற்கும் எட்டாதவர். 'யதோ வாசோ நிவர்த்தந்தே அப்ராப்ய மனஸா ஸஹ,'" வாக்கும் மனதும் பிரம்மத்தை அறிய முற்பட்டு முடியாமல் திரும்பி விட்டன ." என்கிறது உபநிஷத்.
307. வ்யக்தரூப: - அறியக்கூடிய உருவமுடையவர். முன்னுக்கு பின் முரணாகத் தோன்றுகிறதல்லவா. அது அப்படி அல்ல. எல்லோராலும் அறிய முடியாதவர் ஆனால் யோகிகளால் அறியக்கூடியவர் என்று பொருள். அல்லது ஸ்தூல பிரபஞ்ச ரூபத்தில் கண்ணுக்கு புலனாகிறவர்.
308. ஸஹஸ்ரஜித்-ஆயிரக்கணக்கான அசுரர்களை ஜெயிப்பவர்.
309. அனந்தஜித்—எண்ணமுடியாத சக்திகளை உடையவர்.
310.இஷ்ட: -எல்லா உயிர்களுக்கும் பிரியமானவர்.
311. அவிசிஷ்ட: - பேதமை பாராட்டாதவர் . எல்லாஉயிர்களுக்கும் அந்தர்யாமியாக இருப்பதால். கீதையில் 'ஸமோ அஹம் சர்வபூதேஷு ந மே த்வேஷ்யோ அஸ்தி ந பிரிய:,'(.9.29) எனக்கு வேண்டுபவர் வேண்டாதவர் என்பதில்லை ' என்று சொல்கிறார்., அப்படிஎன்றால் ஏன் சிலரை தண்டிக்க வேண்டும் என்றால் அது அவர்கள் திருந்துவதற்கு..அதுவும் அவர் கருணையே. His retribution is for redemption.
பாய்மரக்கப்பலின் பாய் விரித்திருந்தால்தான் காற்று அதற்கு உதவி செய்யும். கண்ணைத் திறந்தால்தான் ஒளி தெரியும். அதே போல பகவானை நினைந்தால்தான் அவர் அருள் பெறலாம். நாம் எவ்வாறு அவரை நினைக்கிறோமோ அந்தந்த முறையில் அவர் வருகிறார். எதிரியென பாவித்தால் எதிரியாகவும்,உற்ற நண்பனாக நினைத்தால் அவ்வாறும் தோன்றி அருள் புரிகிறார்.
312.சிஷ்டேஷ்ட: - சிஷ்டர்களுக்கு அதாவது பக்தர்களுக்கு பிரியமானவன்.
313. சிகண்டீ- சிகயா தேஜஸா (ஐஸ்வர்யம் அல்லது தேஜஸ்) அணதி வ்யாப்நோதி( எங்கும் பரவும்) இதி சிகண்ட: எங்கும் பரவும் தேஜஸ், சிகண்டா: அஸ்ய அஸ்தி இதி (அப்படிப்பட்ட தேஜசை உடையவர்) சிகண்டீ. யாராலும் வெல்லமுடியாத அளவற்ற ஐஸ்வர்யமாகிய சிறந்த மகிமையை சிரோ பூஷணமாக உள்ளவர்.
விரிந்த தோகைக்கும் சிகா என்று பெயர் அதை உடையது மயில் அதனால் அதற்கு சிகண்டீ என்று கூறப்படுகிறது. மயில் தோகையை சிரசில் தரித்தவர் என்பது சங்கரர் வியாக்யானம்.
314. நஹுஷ:- -ஸ்வமாயயா , தன்னுடைய மாயையினால், ஜீவன், ஜீவனை, நஹ்யதி, (பத்நாதி)- கட்டுண்டவாறு செய்பவர். உலகை கட்டுப்படுத்துபவர்.
315. வ்ருஷ: - அடியவர் விரும்புவதை வர்ஷிப்பவர். வ்ருஷ என்றால் தர்மம். தர்ம வடிவினர் என்றும் பொருள் கொள்ளலாம். ராமோ விக்ரஹவான் தர்ம:
316. க்ரோதஹா- இது பரசுராமாவதாரத்தைக் குறிப்பதாகக் கொள்ளப்படுகிறது. கோபத்தை ஒழித்தவர் .பரசுராமாவதாரத்தில் க்ஷத்ரியர்களை மூவேழு முறை வதம் செய்தபின் காச்யபரின் வேண்டுகொளுக்கிணங்கி கோபத்தை விட்டார். அல்லது அடியார்களின் கோபத்தை அகற்றுபவர் என்றும் கொள்ளலாம்.
317.க்ரோதக்ருத்- துஷ்டர்களிடம் கோபம் கொள்பவர்
318. கர்த்தா-க்ருந்ததி இதி கர்த்தா- கார்த்தவீர்யார்ஜுனன் போன்ற துஷ்டர்களை வெட்டி எறிபவர்.
319.விச்வபாஹு: - உலகம் முழுவதும் க்ஷத்ரியர்களை வேட்டையாடினதால் அவருக்கு உலகம் முழுவதும் கரங்கள். அலல்து எல்லோரையும் ரக்ஷிப்பதால் எங்கும் கரங்கள் உடையவர்
320..மஹீதர: - பூமியைத் தாங்குகிறவர். அல்லது பூஜிக்கப்படுபவர். ( மஹீ என்றால் பூஜை என்றும் பொருள்.)
No comments:
Post a Comment