திருபுன்கூர் திருதலத்தில் சுந்தர மூர்த்தி நாயனார் அருளிச் செய்த *மழை வேண்டல் பதிகம்* மிகவும் பிரசித்தி பெற்றது. 🙏
*திருசிற்றம்பலம்*
வையக முற்று மாமழை மறந்து
வயலில் நீர் இலை மாநிலந் தருகோம்
உய்யக் கொள்க மற்(று)எங்களை என்ன
ஒழி கொள் வெண் முகிலாய் பரந்து எங்கும்
பெய்யும் மாமழைப் பெருவெள்ளம் தவிர்த்துப்
பெயர்த்தும் பன்னிரு வேலி கொண்டு அருளும்
செய்கை கண்டு நின் திருவடி அடைந்தேன்
செழும்பொழில் *திருப்புன்கூர்* உளானே.🙏
*விளக்கம்:*
*வையக முற்றும்* *மாமழை மறந்து*
*வயலில் நீரிலை மா* *நிலம் தருகோம்.*
இவ்வூரில் மழை பெய்யாததால் வயிலில் நீர் இல்லை. இறைவனே மழையை நீங்கள் தருவீராகில் நாங்கள் மிக்க நிலங்கள்( மா நிலம்) தருவோம்.
*உய்யக் கொள்கமற் றெங்களை என்ன*
*ஓளிகொள்* *வெண்முகிலாய் பரந்து* *எங்கும்*
எங்களை உய்விப்பாயாக!வெண்மையான மேகங்களாய் நின்றவை நிலைமாறி கருமேகங்களாய் எங்கும் சூழ
*பெய்யுமாமழை பெரு வெள்ளம் தவிர்த்துப்*
*பெயர்த்தும் பன்னிரு வேலி கொண்டு* *அருளும்*
பெரு மழை பெய்து மீண்டும் வெள்ளம் வர மீண்டும் பன்னிரு வேலி நிலம் தருவோம்.
*செய்கை கண்டு நின் திருவடி அடைந்தேன்*
*செழும்பொழில் திரு* *புன்கூர் உளானே*
செழும் பொழில் திருபுன்கூர் திரு தலத்தில் உள்ளவனே,
வெள்ள பெருக்கினை தவிர்த்து இன்னருள் புரிந்த உன் திருவடி அடைந்தேன்.
*ஏயர்கோன் கலிக்காமர்* என்னும் நாயனார் இத் தலத்தில் அவதரித்தவர். மழை பெய்ய பன்னிரு வேலி நிலமும் பெரு மழையை தவிர்க்க பன்னிரு வேலி நிலமும் ஆக மொத்தம் 24 வேலி நிலம் இறைவனுக்காக வழங்கியவர் என்று சுந்தர மூர்த்தி சுவாமிகள் தன் திரு பதிகத்தில் குறிப்பிடுகிறார்.
சுந்தர மூர்த்தி நாயனாரும், ஏயர் கோன் கலிக்காமூர் நாயனாரும் மன மொத்த நண்பர்கள்.
மேலும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்து பின் நாயனார் என்னும் உயரிய நிலையை அடைந்த *திருநாளை போவார்* என்னும் *நந்தனார்* அவதரித்த தலமும் இதுவே.
நந்தனாருக்காக நந்தி விலகி நின்ற தலமும் இதுவே!🙏
இத் தலம் *வைத்தீஸ்வரன் கோயில்* திரு தலத்திற்கு மிக அருகே உள்ள திரு தலம்.
இக் கோடை காலத்தில் இப் பதிகம் ஓத பெரு மழை கிட்டும் என்பது திண்ணம். 🙏
*திருசிற்றம்பலம்*
*சிவாயநம*
No comments:
Post a Comment